அக்னிப்புரட்சி இன்றைய (01.02.2023) முக்கிய செய்திகள். - Agnipuratchi

அக்னிப்புரட்சி இன்றைய (01.02.2023) முக்கிய செய்திகள்.

Share This

அக்னிப்புரட்சி இன்றைய (01.02.2023) முக்கிய செய்திகள்.

* சென்னையில் மழைநீர் தேங்காத மழைக்காலம்... முதலமைச்சர் ஸ்டாலின் உறுதி!

சிறப்பாக செயல்பட்ட மாநகராட்சி ஊழியருடன் முதலமைச்சர் ஸ்டாலின் மதிய உணவு அருந்தினார்.

சென்னையில் மழைநீர் தேங்காத பருவமழை காலங்களை மக்கள் பார்ப்பார்கள் என்று முதலமைச்சர் 
மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

வடகிழக்கு பருவ மழை காலத்தில் பணியாற்றிய சென்னை மாநகராட்சி பணியாளர்களை கவுரவிக்கும் விதமாக ரிப்பன் மாளிகையில் பாராட்டு விழா நடைபெற்றது. பருவமழை மற்றும் மாண்டஸ் புயல் பாதிப்பின் போது சிறப்பாக பணியாற்றிய 39 நபர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.

அதன்பின் நிகழ்ச்சியில் பேசிய அவர், கொரோனா மற்றும் மிகப்பெரிய மழை பாதிப்பை வென்றுள்ளதாகவும், இந்த இரண்டு சாதனைக்காக மக்களிடையே பாராட்டு கிடைத்துள்ளதாகவும் தெரிவித்தார்.

கடந்த மழையுடன் இந்த பருவ மழை பாதிப்பை ஒப்பிட்டு மக்கள் சமூக வலைதளங்களில் பாராட்டியதை பார்த்து அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை என்றும் முதலமைச்சர் குறிப்பிட்டார்.

* தமிழகத்தில் 11 மாவட்டங்களில் இன்று கனமழை காரணமாக மஞ்சள் எச்சரிக்கை விடுப்பு.

கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர் ஆகிய மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு- இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்.

* 12,000 ஊழியர்கள் பணிநீக்க முடிவை தொடர்ந்து சுந்தர் பிச்சை உட்பட 750 மூத்த அதிகாரிகளின் சம்பளம் குறைப்பு: கூகுள் நிறுவனம் திடீர் முடிவு!..

வாஷிங்டன்: கூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை உட்பட 750 மூத்த அதிகாரிகளின் சம்பளத்தை குறைக்க கூகுள் நிறுவனம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் பிரபல இணைய தேடுபொறி தொழில்நுட்ப நிறுவனமான கூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக தமிழகத்தை சேர்ந்த சுந்தர் பிச்சை பணியாற்றி வருகிறார்.

சர்வதேச பொருளாதார நெருக்கடியின் காரணமாக உலக முழுவதும் மிகவும் செல்வாக்கு மிக்க நிறுவனங்கள் கூட, தங்களது நிறுவனத்தில் பணியாற்றும் மொத்த பணியாளர்களில் 10 சதவீதம் அளவிற்கு வெளியேற்றி வருகின்றன.

அந்த வகையில் கூகுள் நிறுவனத்தில் பணியாற்றும் மொத்த ஊழியர்களில் 12,000 பேரை பணிநீக்கம் செய்யப்போவதாக சமீபத்தில் அறிவித்திருந்தது. இந்த அறிவிப்பை, அதன் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை நியாயப்படுத்தி கருத்து தெரிவித்தார்.

இதுகுறித்து கூகுள் அதிகாரிகள் கூறுகையில், ‘கூகுள் நிறுவனத்தின் நிறுவனர்கள் மற்றும் பங்குதாரர்களுடன் கலந்தாலோசித்து எடுக்கப்பட்ட முடிவின்படி, அனைத்து உயர் அதிகாரிகளின் சம்பளத்தையும் குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் அனைத்து மூத்த அதிகாரிகளின் போனஸ் குறைக்கப்படும்.

ஊழியர்களின் செயல்திறன் சிறப்பாக இல்லாவிட்டால், அவர்களின் ஈக்விட்டி மானியம் குறைக்க வாய்ப்புள்ளது. ஆனால் இத்திட்டம் இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படவில்லை’ என்றார். அனைத்து மூத்த நிர்வாகிகளின் சம்பளமும் குறைக்கப்படும் என்று சுந்தர் பிச்சை கூறியதால், அவரது சம்பளமும் குறைக்கப்பட உள்ளது.

TELEGRAM: t.me/Agnipuratchi1

இதுகுறித்து கூகுளின் தலைமை மக்கள் அதிகாரி ஃபியோனா சிசோசியின் கூறுகையில், ‘கூகுள் நிறுவனத்தின் முடிவெடுக்கும் அதிகாரம் படைத்தவர்கள் பட்டியலில் சுமமுடிவெடுக்கும்n நிர்வாகிகள் உள்ளனர். அவர்களுக்கும் சம்பளம் குறைக்கப்படும். எத்தனை ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என்பதை முடிவு செய்ய இன்னும் சில வாரங்கள் ஆகும்’ என்றார்.

* ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ தென்னரசு போட்டி - இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு.

ஈரோடு மாநகர் மாவட்ட எம்‌.ஜி.ஆர் மன்ற செயலாளராக உள்ள தென்னரசு, அதே தொகுதியில் 2 முறை எம்.எல்.ஏவாக இருந்தவர்.

* "எங்கள் கைகள் பூ பறித்துக் கொண்டிருக்குமா?"

மெரினாவில் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் பேனா சிலையை வைத்தால் உடைப்பேன் என சீமான் பேசிய நிலையில்

'சீமான் பேனா சிலையை உடைக்கும் வரை எங்கள் கைகள் பூ பறித்துக் கொண்டிருக்குமா?' என அமைச்சர் சேகர்பாபு பதிலடி

( சீமான் பேசியது: https://youtu.be/jzUTMtjDzDo )

* தேசிய ஜனநாயக முற்போக்கு கூட்டணி என்ற பெயரில் ஈபிஎஸ் தரப்பு தேர்தல் பணிமனை திறப்பு

இதுவரை அதிமுக பணிமனை என்ற பெயரில் இருந்த அலுவலகம் தற்போது தேசிய ஜனநாயக முற்போக்கு கூட்டணி என குறிப்பிடப்பட்டுள்ளது

தேர்தல் பணிமனையை திறந்து வைத்து ஈபிஎஸ் தரப்பு வேட்பாளராக கே.எஸ்.தென்னரசு அறிவிக்கப்பட்டார்.

* "கள ஆய்வில் முதலமைச்சர்" என்ற திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

முதல் கட்டமாக வேலூர் மண்டலத்தில் ஆய்வு செய்ய உள்ளார் முதலமைச்சர்

சென்னை சீரடி விரைவு ரயில் மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேலூர் புறப்பட்டார்

இரண்டு நாட்கள் அரசு முறை பயணமாக வேலூர் செல்கிறார் முதல்வர்

* “வேட்டிய மடிச்சு கட்டுனா தாங்க முடியாது”

“அன்புமணி என்றால் Decent And Development Politicsனு நினைக்காதீங்க வேட்டிய மடிச்சு கட்டுனா தாங்க முடியாது”

கடலூரில் என்.எல்.சி. நிறுவனத்திற்கு எதிராக கண்டன பொதுக்கூட்டத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேச்சு.

கத்தியெல்லாம் கொடுக்காதீங்க, அடுத்தமுறைக்கு மண்வெட்டிய கொடுங்க - பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ் நிர்வாகிகளுக்கு வேண்டுகோள்.

* ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள வேட்பாளர் பலமானவர். மக்களிடையே நன்கு அறிமுகமானவர் - பாஜக மாநில தலைவர் அண்ணாமலை திருச்சியில் பேட்டி.

இடைத்தேர்தலில் பாஜகவின் நிலைப்பாட்டை வெகு விரைவில் அறிவிப்போம்.

பேனா சிலை எதிர்ப்பு விவகாரத்தில் சீமானுடன் மட்டுமல்ல, தமிழர்களோடும் கை கோர்க்க தயார்.

இந்த பட்ஜெட், தமிழகத்திற்கு தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தும் பட்ஜெட்டாக இருக்கும் என நம்புகிறேன் - அண்ணாமலை.

* கள்ளக்குறிச்சி மாணவி மரண வழக்கில் விசாரணை நிறைவு; 4 வாரங்களில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யபடும் - உயர் நீதிமன்றத்தில் சிபிசிஐடி தரப்பில் பதில்

மாணவியின் செல்போன் தடயவியல் ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது; அறிக்கைக்காக காத்திருக்கிறோம் - சிபிசிஐடி

* ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் செந்தில் முருகன் போட்டி - ஓ.பி.எஸ் அறிவிப்பு.

பாரதிய ஜனதா வேட்பாளரை அறிவித்தால், தங்களின் வேட்பாளர் திரும்ப பெறப்படுவார் - ஓ.பி.எஸ்

தேர்தல் ஆணைய ஆவணப்படி அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் நான் தான் - ஓ.பி.எஸ் அறிவிப்பு.

* கன்னியாகுமரி - பிப்.6 உள்ளூர் விடுமுறை

தக்கலை பீர் முஹம்மது ஒலியுல்லா தர்கா ஆண்டு விழாவை முன்னிட்டு
வரும் 6ம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை - மாவட்ட ஆட்சியர்

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages