அக்னிப்புரட்சி இன்றைய (03.02.2023) முக்கிய செய்திகள். - Agnipuratchi

அக்னிப்புரட்சி இன்றைய (03.02.2023) முக்கிய செய்திகள்.

Share This

அக்னிப்புரட்சி இன்றைய (03.02.2023) முக்கிய செய்திகள்.

* கனமழை காரணமாக தஞ்சை மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று ஒருநாள் மட்டும் விடுமுறை - மாவட்ட ஆட்சியர்.

மழையின் காரணமாக நாகை மாவட்டத்தில் 1 ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை- நாகை மாவட்ட ஆட்சியர்.

* பேரறிஞர் அண்ணாவின் 54 வது நினைவு தினம்; முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் திமுக அமைதிப்பேரணி.

சென்னை, வாலாஜா சாலையில் இருந்து பேரணியாக சென்று அண்ணா நினைவிடத்தில் மரியாதை.

* பேரறிஞர் அண்ணாவின் 54வது நினைவு தினத்தை முன்னிட்டு, நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் துரைமுருகன், உதயநிதி உள்ளிட்டோர் அஞ்சலி.

* எடப்பாடி பழனிசாமியுடன் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சந்திப்பு.

சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சந்திப்பு; ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் குறித்து ஆலோசனை.

* பேரறிஞர் அண்ணா நினைவு தினத்தை முன்னிட்டு எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்டோர் அண்ணா நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை

* ஈபிஎஸ் அணி வேட்புமனு தாக்கல் ஒத்திவைப்பு:

ஈபிஎஸ் அணி வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு வரும் 7ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார்.

இன்று வேட்பு மனு தாக்கல் செய்ய திட்டமிட்டிருந்த நிலையில், வரும் 7ஆம் தேதிக்கு மாற்றம்.

* நெல்லை தங்கராஜ் காலமானார்

பரியேறும் பெருமாள் திரைப்படத்தில் நடித்த திரைப்பட நடிகர் நெல்லை தங்கராஜ் உடல்நலக் குறைவால் காலமானார்

* புதுச்சேரியில் குளிர்கால சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியது.

பள்ளி சீருடையில் சட்டப்பேரவைக்கு வருகை தந்த திமுக சட்டமன்ற உறுப்பினர்கள்.

* ஓ.பன்னீர்செல்வம் உடன் பாஜக தலைவர் அண்ணாமலை சந்திப்பு.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக எடப்பாடி பழனிசாமியை சந்தித்த நிலையில், அடுத்ததாக ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து பேசி வருகின்றார் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை.

* தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.520 குறைந்து ரூ.43,520க்கு விற்பனை செயப்படுகிறது.

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.65 குறைந்து 5,440க்கு விற்கப்படுகிறது.

சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ.1.4 குறைந்து ரூ.76.40-க்கு விற்பனை செய்யபப்டுகிறது.

கடந்த 2 நாட்களாக தங்கம் விலை உயர்ந்து வந்த நிலையில் இன்று குறைந்துள்ளது.

* அதானி நிறுவனத்திற்கு நியூயார்க் பங்குச்சந்தை தடை

முறைகேடு புகார் காரணமாக Adani Enterprises நிறுவனத்திற்கு நியூயாக்க் பங்குச்சந்தையான Dow Jones தடை விதித்துள்ளது

* ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிட காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் வேட்புமனு தாக்கல் செய்தார்.

"என்னுடைய மகன் திருமகன் ஈவெரா விட்டுச் சென்ற பணியை தொடருவேன்"-வேட்புமனுவை தாக்கல் செய்த பின் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பேட்டி.

* பிபிசி ஆவணப்படத்துக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்த வழக்கில் மத்திய அரசு பதில் அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு.

2002ல் நடந்த குஜராத் கலவரம் தொடர்பான ஆவணப்படத்தை பிபிசி வெளியிட்டது; சமூக ஊடகங்களில் இருந்து ஆவணப்படத்தை மத்திய அரசு நீக்கி தடை விதித்தது.

* தேர்தல் ஆணையத்தை நாடும் இ.பி.எஸ். அணி.

ஜூலை 11ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு முடிவுகளை அங்கீகரிக்கக் கோரி தேர்தல் ஆணையத்திடம் முறையிட இ.பி.எஸ். அணி முடிவு.

பொதுக்குழு தீர்மானத்தை ஏற்க முடியாது என உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் நேற்று கூறியிருந்த நிலையில், தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை வைக்கவுள்ளனர்.

* அதிமுக-வில் அனைவரும் ஒன்றிணைந்தால் தான் திமுக-வை வீழ்த்த முடியும். அதிமுக-வில் அனைவரும் இணைவதற்கான
நேரம் நெருங்கிவிட்டது - சசிகலா.

* திமுக அரசை வீழ்த்த ஒருங்கிணைந்த அதிமுக வேண்டும் என்று வலியுறுத்தினோம் - பாஜக சார்பில் அண்ணாமலை மற்றும் பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி‌.ரவி பேட்டி.

ஓ.பி.எஸ் மற்றும் இ.பி.எஸ்-ஐ சந்தித்து, ஜே.பி. நட்டாவின் சில ஆலோசனைகளை அவர்களிடம் பகிர்ந்து கொண்டோம்.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பாஜகவின் நிலைப்பாடு வரும் 7-ஆம் தேதி தெரியும் - அண்ணாமலை மற்றும் பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி கூட்டாக பேட்டி.

* இரட்டை இலை சின்னம் தொடர்பாக பழனிசாமி தாக்கல் செய்த இடையீட்டு மனு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் தொடங்கியது.

அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக பழனிசாமியை அங்கீகரிக்க முடியாது என தேர்தல் ஆணையம் நேற்று பதில் மனு தாக்கல் செய்திருந்தது.

அதிமுக கட்சியின் சின்னம் இதுவரை முடக்கப் படவில்லை. ஆனால் அதுகுறித்து எந்த பிரச்சனைகளும் எழுப்பப்படவில்லை - தேர்தல் ஆணையம்

தேர்தல் ஆணையத்தின் கருத்துகளுக்கு எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் கடும் எதிர்ப்பு

பொதுக்குழு வழக்கில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், எந்த இடைக்கால உத்தரவும் பிறப்பிக்கக் கூடாது என ஓ.பி.எஸ். தரப்பு வாதம்

தற்போது நிலுவையில் உள்ள வழக்குகளை சுட்டிக்காட்டி தேர்தல் ஆணையம் முடிவு எடுக்க மறுக்கிறது

ஆனால், கடந்த முறை இரட்டை இலை சின்னம் தொடர்பான விசாரணை டெல்லி உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த போது, மாறுபட்ட நிலைப்பாட்டை தேர்தல் ஆணையம் எடுத்திருந்தது - இ.பி.எஸ். தரப்பு

இரட்டை இலை சின்னத்துக்காக எடப்பாடி பழனிசாமி கையெழுத்திட முன்வந்தால், எங்கள் தரப்பு வேட்பாளரை திரும்பப் பெற தயார் - ஓ.பி.எஸ் தரப்பு

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்காக ஒ.பி.எஸ் தரப்பையும் உள்ளக்கிய பொதுக்குழு கூட்டத்தை கூட்டி, வேட்பாளர் தேர்வு உள்ளிட்ட முடிவுகளை எடுக்கலாம் - உச்ச நீதிமன்றம்.

* ஈரோடு இடைத்தேர்தலில்  இருவருக்கும் உகந்த பொது வேட்பாளரை தேர்ந்தெடுக்க பொதுக்குழுவை கூட்ட வேண்டும்- உச்சநீதிமன்றம் அதிரடி.

ஜூலை 11-ஆம் தேதி பொதுக்குழுவில்
நீக்கப்பட்டவர்களை, சேர்த்து பொதுக்குழு கூட்ட வேண்டும்.

அதிமுக பொதுக்குழுவை கூட்டி வேட்பாளரை தேர்ந்தெடுக்க வேண்டும் - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு.

* அதிமுக வேட்பாளர் தேர்வு அடுத்து என்ன?

ஈரோடு இடைத்தேர்தல் 27ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் இந்தியாவே ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை உற்று நோக்குகிறது. காரணம் என்ன என்று பார்த்தால் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு நடைபெறும் முதல் இடைத்தேர்தல்.

திமுக ஆட்சி அமைந்த பிறகு நடைபெறும் இந்த இடைத்தேர்தல் மிக முக்கியமாக பார்க்கப்படுகிறது. இந்த தேர்தல் அறிவிக்கப்பட்ட உடனேயே காங்கிரஸ் கட்சி தொகுதியாக இருப்பதால் அது காங்கிரஸ் கட்சிக்கு திமுக விட்டுக்கொடுத்தது. அதனை தொடர்ந்து எப்போதுமே தாமதமாக வேட்பாளரை அறிவிக்கும் காங்கிரஸ் கட்சி இந்த முறை உடனடியாக காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக இளங்கோவனை அறிவித்தது. ஆனால் எப்போதுமே வேட்பாளர்களை முந்தி அறிவிக்கும் அதிமுக இந்த முறை மிகவும் தாமதப்படுத்தியது. காரணம் இபிஎஸ் அணி, ஓபிஎஸ் அணி என பிரிந்து இருப்பதால் இந்த காரணம் கூறப்பட்டது மேலும் சின்னம் ஒரு பிரச்சினையாக கருதப்பட்ட நிலையில் தற்போது அதிமுக இபிஎஸ் அணி சார்பில் தென்னரசு வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அதிமுகவில் இந்த முறை முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பாணி பின்பற்றப்படும் என பலரும் கூறி வந்தனர். அதாவது அடிமட்ட தொண்டனை இந்த தேர்தலில் களம் காண வைத்து அவரை வெற்றி பெற செய்வது தான் அந்த பாணி. அதன் அடிப்படையில் நந்தகோபால் என்பவரும் குணசேகரன் என்பவரும் வேட்பாளராக நிறுத்தப்படலாம் என ஈரோடு கிழக்கு தொகுதி முழுவதும் பேசப்பட்டு வந்தது. ஆனால் எதிர்பாராத வகையில் மீண்டும் தென்னரசுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு என்ன காரணம் எதனால் மனமாற்றம் அடைந்தார் இபிஎஸ் என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. அதேபோல் ஓபிஎஸ் அணியிலும் அதன் மாவட்ட செயலாளர் முருகானந்தம் வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஓபிஎஸ் அணி சார்பில் புது அடிமட்ட தொண்டனாக இருக்கும் செந்தில் முருகன் என்பவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

TELEGRAM: t.me/agnipuratchi1

இந்த நிலையில் இன்று உச்ச நீதிமன்றம் நீக்கப்பட்ட பொதுக்குழு உறுப்பினர்களையும் சேர்த்து புதிய பொதுக்குழுவை நடத்தி பொதுவான வேட்பாளர் தேர்ந்தெடுக்க உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில் புதிதாக பொதுக்குழு கூடுமா? அப்படி கூடினால் புதிய முகத்திற்கு வாய்ப்பு கிடைக்குமா? அல்லது ஓபிஎஸ் ஆதரவாளருக்கு வாய்ப்பா?இபிஎஸ் ஆதரவாளருக்கு வாய்ப்பா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

* வழக்கு நிலுவையை காரணம் காட்டி பொதுக்குழு தீர்மானங்களை ஏற்க மறுப்பதா? - தேர்தல் ஆணையத்திற்கு அதிமுக கேள்வி?

"அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை பதிவேற்றவில்லை என்ற தேர்தல் ஆணையத்தின் பதில் படு அராஜகம் என்றும், சசிகலா அவர்கள் சார்ந்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் தானே அணிகள் இணைந்த போது நடந்த பொதுக்குழு தீர்மானங்களை ஏற்று பதிவேற்றம் செய்தீர்கள் என்றும், சிவில் வழக்கு 20வருடம் நிலுவைஎனில் அதுவரை சின்னத்தை ஒதுக்காமல் கட்சியை முடக்குவீர்களா?" என அதிமுக வழக்கறிஞர் இன்பதுரை கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

* தெலுங்கு திரைப்பட உலகின் பிரபல இயக்குநா் கே.விஸ்வநாத் (92) ஹைதராபாதில் உள்ள தனியாா் மருத்துவமனையில் வியாழக்கிழமை (பிப்.2) காலமானாா்.

1992-இல் பத்மஸ்ரீ, 2016-இல் தாதாசாகேப் பால்கே விருது ஆகியவற்றைப் பெற்றவா் இயக்குநா் கே.விஸ்வநாத். சங்கராபரணம், சலங்கை ஒலி, சிப்பிக்குள் முத்து, ஸ்வா்ணகமலம் போன்ற சிறந்த திரைப்படங்களை இயக்கியவா்; யாரடி நீ மோகினி, சிங்கம் 2, உத்தம வில்லன், லிங்கா உள்ளிட்ட திரைப்படங்களிலும் நடித்துள்ளாா்.

3 நாளில் முடிவு - உச்சநீதிமன்றம் உத்தரவு

அதிமுக அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் பொதுக்குழுவை கூட்டி, நீக்கப்பட்ட பொதுக்குழு உறுப்பினர்களையும் சேர்த்து, பொது வேட்பாளருக்கு ஒப்புதல் பெற்று, அதை பிப் 6ம் தேதிக்குள் தேர்தல் ஆணையத்திற்கு அனுப்ப வேண்டும் - உச்சநீதிமன்றம்

* புதுச்சேரி சட்டப்பேரவை தொடங்கிய 23 நிமிடங்களில் முடிவடைந்தது!

பள்ளி மாணவர்களுக்கு சைக்கிள், லேப்டாப், மடிகணினி உள்ளிட்ட பொருட்கள் வழங்காததை கண்டித்து புதுச்சேரி சட்டமன்ற கூட்டத்தொடருக்கு பள்ளி சீருடை அணிந்து சைக்கிளில் வந்த திமுக சட்டமன்ற உறுப்பினர்கள்.

சட்டப்பேரவை தொடங்கிய 23 நிமிடங்களில் முடிவடைந்தது. காலை 9:30 மணிக்கு தொடங்கிய புதுச்சேரி சட்டப்பேரவையின் குளிர்கால கூட்டத்தொடர் காலை 09:53 மணிக்கு முடிவடைந்தது.

TELEGRAM: t.me/agnipuratchi1

* பாகிஸ்தான் குண்டுவெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து போலீசாருக்கே பாதுகாப்பில்லை எனக்கூறி பெஷாவர் போலீசார் மற்றும் அதிகாரிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் உள்ள மசூதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் 101 பேர் பலியாகினர். 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இறந்தவர்களில் பெரும்பாலானோர் போலீஸ்காரர்கள் ஆவர். குண்டுவெடிப்பு சம்பவத்தை அரங்கேற்றிய தீவிரவாதி, போலீஸ் சீருடையில் மசூதிக்குள் புகுந்து தொழுகை நடந்து கொண்டிருந்த போது தன்னைத்தானே வெடிக்கச் செய்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் போலீசுக்கே பாதுகாப்பு இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளதாக கூறி, பெஷாவர் போலீசார் மற்றும் அதிகாரிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், ‘எங்களின் கைகளை பாகிஸ்தான் அரசு கட்டிப்போட்டுள்ளது. ஒவ்வொரு நாளும் போலீஸ்காரர்கள் தீவிரவாதிகளால் கொல்லப்படுகிறார்கள்.

அந்த அதிர்ச்சியில் இருந்து எங்களால் மீள முடியவில்லை. போலீஸ்காரர்களுக்கே பாதுகாப்பு இல்லாதபோது, நாட்டில் யார் தான் பாதுகாப்பாக இருக்க முடியும்’ என்று கூறினர்.

TELEGRAM: t.me/agnipuratchi1

* ராணிப்பேட்டையில் மாவட்ட ஆட்சியரை தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளரும் பணியிட மாற்றம்; புதிய எஸ்.பி. ஆக கிரண் சுருதி நியமனம்.

கடலூர் மாவட்ட எஸ்.பி. உள்பட 5 ஐ.பி.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம்.

ராணிப்பேட்டையில் மாவட்ட ஆட்சியரை தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளரும் பணியிட மாற்றம்

கடலூர் மவட்ட எஸ்.பி. உள்பட 5 ஐ.பி.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம்

சென்னை சைபர் பிரிவு துணை ஆணையர் கிரன் சுருதி ராணிப்பேட்டை மாவட்ட எஸ்பியாக நியமனம்.

ராணிப்பேட்டை எஸ்.பி.தீபாசத்யன் சென்னை நவீன காவல் கட்டுப்பாட்டறை எஸ்.பியாக மாற்றம்.

கடலூர் மாவட்ட எஸ்.பி.சக்தி கணேசன் சென்னை சிலை கடத்தல் தடுப்பு புலனாய்வு பிரிவு எஸ்.பியாக மாற்றம்.

சென்னை கொளத்தூர் காவல் துணை ஆணையர் ராஜாராம் கடலூர் மாவட்ட எஸ்.பியாக நியமனம்.

காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருந்த எஸ்.பி ரவளி பிரியா தமிழ்நாடு காவல் சீருடை பணியாளர் தேர்வாணைய எஸ்.பியாக நியமனம்.

* சரிவில் இருந்து 50 சதவீதத்திற்கு மேல் உயர்ந்த அதானி எண்டர்பிரைசஸ்!.

அதானி குழும நிறுவனங்கள் அனைத்தும் ஹிண்டன்பர்க் அறிக்கைக்குப் பின்னர் கடும் சரிவைச் சந்தித்து வருகிறது.

அக்குழுமத்தின் முக்கிய நிறுவனமான அதானி எண்டர்பிரைசஸ் இன்று இன்ட்ராடே அளவில் 10.40 மணிக்கு 30% சரிந்திருந்தது.

ஒரு மாதத்தில் 60% சரிந்திருந்தது. ரூ.1017 என்ற விலையில் இருந்த பங்குகளை, பலரும் வாங்க ஆரம்பித்ததால், அந்த விலையிலிருந்து இன்றைய வர்த்தக நேர முடிவில் 50% அளவுக்கு உயர்ந்து ரூ.1,531 என்ற விலையில் நிறைவடைந்தது.

கெளதம் அதானியின் நிறுவனங்கள் பற்றி ஹிண்டன்பர்க் எனும் அமெரிக்க ஆராய்ச்சி நிறுவனம் ஒரு மோசமான அறிக்கையை சுமார் 10 நாட்களுக்குப் முன் வெளியிட்டது. இதனால் அதானி குழுமம், தனது வரலாற்றில் மோசமான நெருக்கடியை எதிர்த்துப் போராடி வருகிறது. ஜனவரி 24, 2023 முதல் அதானி குழுமங்கள் சந்தை மதிப்பில் பாதியை இழந்துள்ளன.

வியாழன் அன்று கிட்டத்தட்ட 23 சதவீதம் சரிவுடன், அதானி குழுமத்தின் பங்குகள் 52 வார குறைந்த நிலையைத் தொட்டன. இன்றும் அதன் பங்குளின் சரிவு நிலை தொடர்ந்தது.

இதனால் உலகப் பணக்காரர்களில் 2வது இடத்தில் இருந்த, கெளதம் அதானி இன்று 21வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.

குறுகிய காலத்தில் 50 சதவீதத்திற்கு மேல் சரிந்ததால், அதானிப் பங்குகளை வாங்க தற்போது பலரும் ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளனர். அதானி எண்டர்பிரைசஸ் இன்று 30% சரிந்த போதும், அந்த இடத்திலிருந்து 50% அளவிற்கு உயர்ந்து பச்சையில் முடிவடைந்தது.

அதானி துறைமுகங்கள் பங்குகளும் 14% இன்ட்ரா டே அளவில் சரிந்து, பின்னர் அந்த நிலையிலிருந்து 25% மீண்டன.

TELEGRAM: t.me/agnipuratchi1

* தங்க இதயம், தங்க நாக்குடன் 100 ஆண்டுகளாக கவனிப்பின்றி கிடந்த மம்மி

2,300 ஆண்டுகளுக்கு முன்பு பண்டைய எகிப்து நாகரிகத்தின் உயர் வகுப்பைச் சேர்ந்த பதின்ம வயது சிறுவன் ஒருவரின் உடல் தங்க இதயத்துடன் பதப்படுத்தப்பட்டிருப்பது ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 14 அல்லது 15 வயதில் இறந்ததாகக் கருதப்படும் இந்த சிறுவனின் உடல் 1916ஆம் ஆண்டு கண்டெடுக்கப்பட்டு, கெய்ரோவில் உள்ள எகிப்திய அருங்காட்சியகத்தில் டஜன் கணக்கான மம்மிகளுடன் வைக்கப்பட்டிருந்தது.

ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக இந்த உடல் வல்லுநர்களால் முழுமையாக ஆய்வு செய்யப்படாமல் இருந்த நிலையில், கெய்ரோ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சஹர் சலீம் தலைமையிலான குழு சிடி ஸ்கேனரை பயன்படுத்தி மம்மியை ஆய்வு செய்தபோது இந்த உண்மை தெரியவந்துள்ளது.

இந்த உடலில் 21 வகையான 49 தாயத்துகள் இருந்த நிலையில், அதில் பெரும்பாலானவை தங்கத்தால் ஆனவை. இதன் காரணமாகவே இந்த மம்மிக்கு தங்க பையன் என்று பெயரிட்டதாக ஃப்ரென்டியர்ஸ் இன் மெடிசின்(Frontiers in Medicine) என்ற சஞ்சிகையில் வெளியான கட்டுரையில் சலீம் கூறியுள்ளார்.

TELEGRAM: t.me/agnipuratchi1

* வடபழநி கோவிலில் நாளை தைப்பூசம்

சென்னை: ஆண்டுதோறும் தை மாதம், பூச நட்சத்திரமும் பவுர்ணமி திதியும் கூடிய நாளில் தைப்பூசம் கொண்டாடப்படுகிறது.

வடபழநி ஆண்டவர் கோவிலில், நாளை(பிப்.,4), தைப்பூசம் நடக்கிறது. இதை முன்னிட்டு அதிகாலை 4:30 மணிக்கு, திருப்பள்ளி எழுச்சி நடக்கிறது. தொடர்ந்து மூலவர், முத்தங்கி அலங்காரத்தில் அருள்பாலிக்கிறார். மதியம் 1:00 மணி முதல் மாலை 4:30 மணி வரை, பக்தர்கள் எடுத்து வரும் பாலால், முருகப் பெருமானுக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது. பின், செண்பகப்பூ அலங்காரத்தில் எழுந்தருள்கிறார்.

இரவு 8:30 மணிக்கு, பழநி ஆண்டவர் நான்கு மாடவீதிகளை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். கோவிலுக்கு வரும் பக்தர்கள் அனைவரும் கட்டாயம் முக கவசம் அணிந்து, சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டும் என, கோவில் நிர்வாகத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

TELEGRAM: t.me/agnipuratchi1

* திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல, உகந்த நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலிற்கு வரும் வரும் லட்சக்கணக்கான பக்தர்கள், பவுர்ணமிதோறும் கிரிவலம் சென்று, அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மனை வழிபடுகின்றனர்.

இந்நிலையில், தை மாத பவுர்ணமி திதி, நாளை இரவு, 10:41 மணி முதல், நாளை மறுநாள், 5ம் தேதி நள்ளிரவு, 12:48 மணி வரை உள்ளதால், இந்த நேரத்தில் பக்தர்கள் கிரிவலம் செல்லலாம் என, கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

TELEGRAM: t.me/agnipuratchi1

* அதிமுக வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள எழுத்துப்பூர்வமான உத்தரவு.

பொதுக்குழுவை கூட்ட வேண்டிய அவசியம் இல்லை.
பொதுக்குழு உறுப்பினர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி அவர்களின் வாக்கினை பெற்று அது தொடர்பான விபரங்களை அவைத்தலைவர் தமிழ்மகன் ஹுசைன் தேர்தல் ஆணையத்திடம் வழங்க வேண்டும்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages