அக்னிப்புரட்சி இன்றைய (05.2.2023) முக்கிய செய்திகள். - Agnipuratchi

அக்னிப்புரட்சி இன்றைய (05.2.2023) முக்கிய செய்திகள்.

Share This

அக்னிப்புரட்சி இன்றைய (05.2.2023)  முக்கிய செய்திகள்.

* தைப்பூசத் திருவிழா : விழாக்கோலம் பூண்ட முருகன் கோவில்கள்.

தைப்பூசத்தையொட்டி அறுபடை வீடுகள் உள்ளிட்ட முருகன் கோவில்களில் இன்று சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன.

இதையொட்டி, பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக வந்து குவிந்துள்ளனர்.

மயில் காவடி, மச்சக்காவடி, பால்காவடி, பறவைக்காவடி, தீர்த்தக்காவடி ஏந்திய பக்தர்கள் முருகன் கோவில்களுக்கு வந்தவண்ணம் உள்ளனர்.

திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, சுவாமிமலை, திருத்தணி, பழமுதிர்ச்சோலை ஆகிய அறுபடை வீடுகளில் நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக பக்தர்கள் குவிந்துள்ளனர்.

மலேசியா, சிங்கப்பூர், மொரிஷியஸ், இலங்கை ஆகிய நாடுகளிலும் தைப்பூசத் திருவிழா கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது.

* பிரபல திரைப்பட இயக்குநரும், நடிகருமான டி.பி.கஜேந்திரன் காலமானார்.

எங்க ஊரு காவல்காரன், மிடில் கிளாஸ் மாதவன், பட்ஜெட் பத்மநாதன் உள்ளிட்ட பல வெற்றி படங்களை இயக்கியவர் டி.பி. கஜேந்திரன்.

டி.பி.கஜேந்திரன்(72) சென்னையில் உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்தநிலையில் காலமானார்.

கடலூர்: வடலூர் சத்தியஞான சபையில், ஏழு திரைகள் நீக்கி தைப்பூச ஜோதி தரிசனம் வழங்கும் நிகழ்வு.

'அருட்பெருஞ்ஜோதி, தனிப்பெருங்கருணை' என்ற கோஷத்துடன் பக்தர்கள் பங்கேற்பு.

* சீன உளவு பலூனை சுட்டு வீழ்த்தியது அமெரிக்கா.

அமெரிக்க வான்பரப்பில் பறந்த சீன உளவு பலூன், அட்லாண்டிக் கடல் பகுதியில் சுட்டு வீழ்த்தப்பட்டதாக பெண்டகன் அறிவிப்பு.

அமெரிக்காவின் மொண்டானா மாகாணத்தில் உள்ள அணு ஆயுத ஏவுதளத்தின் மீது சீனாவின் ராட்சத உளவு பலூன் ஒன்று பறந்ததாக இரு தினங்களுக்கு முன் பரபரப்பு தகவல் வெளியானது.

பாதுகாப்பு காரணங்களுக்காக மூன்று விமான நிலையங்களை மூடியது அமெரிக்கா.

* வாணி ஜெயராம் அவர்களின் கடைசி வீடியோ!

WATCH: https://youtu.be/A89jPcEj6cc

மறைந்த பாடகி வாணி ஜெயராமுக்கு சமீபத்தில் தான் இந்தியாவின் உயரிய விருதான பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் பத்ம பூஷண் விருது வழங்கிய மத்திய அரசுக்கு வாணி ஜெயராம் நன்றி தெரிவிக்கும் அவரது கடைசி வீடியோவை ரசிகர்கள் பலரும் பகிர்ந்து தங்கள் சோகத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

* டெல்டா மாவட்டங்களில் நெற்பயிர் சேதம் குறித்து அமைச்சர்கள் குழு ஆய்வு.

தஞ்சையில் வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம், உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி மற்றும் அதிகாரிகள் ஆய்வு.

அம்மாப்பேட்டை, ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் நேரடி ஆய்வு.

* பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் (78) உடல்நலக்குறைவு காரணமாக துபாயில் இன்று காலமானார்.

1999இல் ராணுவ புரட்சி மூலம் நவாஸ் ஷெரீப் ஆட்சியை கவிழ்த்து பாக்., அதிபராக தேர்வானார்.

உடல்நலக் குறைவு ஏற்பட்டு துபாயில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று உயிரிழப்பு!

TELEGRAM: t.me/agnipuratchi1

* அக்னிபத் திட்டத்தில் ஆட்சேர்ப்பு முறை மாற்றம்!

முப்படைகளில் அக்னிபத் திட்டத்தின் கீழ் ஆட்சேர்ப்பு| இனி நுழைவுத்தேர்வு, உடற்தகுதி தேர்வு, மருத்துவசோதனை என்ற வரிசையில் நடக்கும்!

முதலில் உடற்தகுதி தேர்வு நடப்பதால் ஏராளமானோர் திரள்கின்றனர்; பதிலாக ஆன்லைன் நுழைவுத்தேர்வை முதலில் நடத்தினால், தேர்ச்சி பெறுவோரை மட்டும் அழைக்க முடியும் என்பதால் இந்த ஏற்பாடு.

* பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்:

டெல்டா பகுதிகளில் தொடர் மழையால் நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளது.

நெல் கொள்முதல் விதிமுறைகளில் தளர்வுகளை வழங்கிட வேண்டும்.

22% வரை ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்ய அனுமதிக்க வேண்டும்.

முதிர்ச்சியடையாத, சுருங்கிய நெல்லின் குறைந்தபட்ச வரம்பை 3%-லிருந்து 5% வரை தளர்த்த வேண்டுமெனவும் முதல்வர் கோரிக்கை.

மறைந்த பின்னணி பாடகி வாணி ஜெயராம் உடலுக்கு காவல்துறை மரியாதை செலுத்த டி.ஜி.பி-க்கு முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு.

காவல்துறை மரியாதையுடன் பாடகி வாணி ஜெயராம் உடலுக்கு இறுதி அஞ்சலி; வாணி ஜெயராமின் இறுதி ஊர்வலம் துவங்கியது.

* சென்னை பல்கலைக்கழகத்தில் இன்று (05.02.2023)நடைபெற்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பசுமைத்தாயகம் தலைவர் முனைவர் சௌமியா அன்புமணி அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரை உரையாற்றினார். உடன் ஓய்வு பெற்ற நீதிபதி மதிவாணன், சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் கௌரி, பாரதி மேட்ரிமோனி நிறுவனர் முருகவேல் ஜானகிராமன், சென்னை பல்கலைக்கழக பதிவாளர் ஏழுமலை உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

* திண்டிவனம் அடுத்த கோனேரி குப்பத்தில் அமைந்துள்ள டாக்டர் இராமதாசு கல்வி அறக்கட்டளையில் உள்ள சரஸ்வதி பொறியியல் மற்றும் தொழில் நுட்பக்கல்லூரியில் மாணவ மாணவிகளுக்கு  இலவச வேலைவாய்ப்பு முகாமில் தேர்ச்சி பெற்ற மாணவ மாணவியருக்கு நிறுவனர் மருத்துவர் இராமதாசு அய்யா அவர்கள் பணி நியமன சான்றிதழ்கள் வழங்கினார். பாமக கௌரவத் தலைவர் ஜிகே மணி, சமூக முன்னேற்றம் சங்க தலைவர் சிவப்பிரகாசம், வன்னியர் சங்க மாநில தலைவர் பு.த.அருள்மொழி, மாநில செயலாளர் கார்த்திக் மற்றும் கல்லூரி முதல்வர் பேராசிரியர்கள் உடன் இருந்தனர்.

* முல்லை பெரியாறு அணை விவகாரம்!

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள முல்லை பெரியாறு அணை, தமிழக நீர்வளத்துறையின் பராமரிப்பில் உள்ளது. இந்த அணையின் பராமரிப்பு பணிகளைச் செய்வதற்காக, நான்கு மினி லாரிகளில் சில நாட்களுக்கு முன்பு ஜல்லி கற்கள், மணல், சிமெண்ட் போன்றவற்றை வல்லக்கடவு வனப்பாதை வழியாகக் கொண்டு சென்றனர்.

மினி லாரி ஓட்டுநர்களுடன், அவர்களுக்குத் துணையாக மூன்று லோடுமேன்கள் தடையை மீறிச் சென்றதாக கேரள காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். ஆபத்தான வனப்பகுதியில் செல்லும்போது ஓட்டுநர்களுக்குத் துணையாக லோடு மேன்கள் செல்வது அவசியம் என்ற நிலையில், கேரள காவல்துறையின் இந்த நடவடிக்கைக்கு தமிழக விவசாயிகள் சங்கம் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. போராட்டம் மேற்கொள்ளப் போவதாகவும் அறிவித்துள்ளது.

முல்லைப் பெரியாறு அணையை நம்பி ஒரு கோடி மக்களின் குடிநீர் ஆதாரம் இருப்பதாகவும், 10 லட்சம் விவசாயிகளின் வாழ்க்கை இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ள விவசாயிகள் சங்கம், அணையின் கட்டுப்பாடு முழுவதையும் தமிழக நீர்வளத்துறை எடுத்துக் கொள்வதற்கான பணிகளில் இறங்க வேண்டும் என்றும், அணையில் உள்ள கேரள மாநில காவல்துறையினரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளது.

TELEGRAM: t.me/agnipuratchi1

* சுட்டு வீழ்த்திய அமெரிக்கா... பதிலடி கொடுப்போம்: சீனா

அமெரிக்காவில் சீனாவின் உளவு பலூன்கள் பறந்த விவகாரம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வடக்கு அமெரிக்க மேலே சீனாவின் இந்த ராட்ஷச பலூன் பறந்து கொண்டு இருந்தது.

அமெரிக்காவின் ராணுவ தளவாடங்களுக்கு மேலே இவை பறந்து இருக்கின்றன. முதலில் இதை சீனா தங்களுடைய பலூன் இல்லை என்றது. அதன்பின் இது எங்களுடைய பலூன்தான். அட்லாண்டிக் கடலில் சர்வதேச எல்லையில்தான் இது பறந்து கொண்டு இருந்தது. இது வானிலைகக்காக பறக்க விடப்படும் பலூன். வானிலையை கணிப்பது மட்டுமே இதன் வேலை என்றது.

அதன்பின்தான் பலூனில் கீழே சென்சார்கள் இருப்பதும், கேமரா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதோடு அதில் பல தொலைத்தொடர்பு சாதனங்கள் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த சாதனங்களை அனைத்தும் சோலார் பேனல்கள் உதவியுடன் இயங்கி வந்துள்ளன.

இதையடுத்து அட்லாண்டிக் கடலுக்கு மேலே சென்ற பின் அமெரிக்க போர் விமானமான எப் 22 விமானங்கள் 3 இதை சுற்றி பறந்து சுட்டு வீழ்த்தின.

தெற்கு கரோலினாவில் இருக்கும் மைர்ட்டல் கடல் பகுதியில் இதன் பாகங்கள் விழுந்துள்ளன. அமெரிக்க கடலோர பாதுகாப்பு படை இந்த பாகங்களை மீட்க சென்றுள்ளது. சீனாவின் உளவு பலூனை அமெரிக்கா சுட்டு வீழ்த்திய வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளது.

இந்த பலூனை சுட்டு வீழ்த்தும் முன் என்ன நடந்தது என்பது தொடர்பான விவரங்களும் கூட வெளியாகி உள்ளன. இந்த பலூனை சுட்டு வீழ்த்தும் முன் அதை சென்சார்கள் மூலம் ஆய்வு செய்து எப்படி தாக்க வேண்டும் என முடிவு செய்துள்ளனர். அதேபோல் அது என்ன மாதிரியான தகவல்களை சீனாவுடன் பகிர்கிறது என்றும் இடைமறித்து கண்டறிந்து உள்ளனர்.

உள்ளே ஏதாவது ஆபத்தான வாயு, குண்டுகள் இருக்கிறதா என்று ஆய்வு செய்துள்ளனர். அதன்பின்பே இந்த பலூன் கடலுக்கு மேலே சென்றதும், அதன் மீது குண்டுகளை வீசி உள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள சீனா, இந்த தாக்குதல் காரணமாக நாங்கள் கடுமையான அதிருப்தி உள்ளோம். இதற்கு தேவையான பதிலடியை கண்டிப்பாக கொடுப்போம். எங்கள் இறையாண்மைக்கு எதிரான தாக்குதல் இது. இதை ஏற்றுக்கொள்ளவே முடியாது, இந்த நடவடிக்கையை சீனா கடுமையாக விமர்சனம் செய்துள்ளது. இது மிகவும் தவறான நடவடிக்கை. அமெரிக்கா இந்த விவகாரத்தில் சர்வதேச விதிகளை மீறிவிட்டதாக சீனா குற்றஞ்சாட்டி உள்ளது

சீனாவிற்கு கருத்திற்கு பதிலடி கொடுத்த அமெரிக்கா, சீனாவின் இந்த பலூன் சிவிலியன் பலூன் கிடையாது. இந்த பலூன் சர்வதேச நடைமுறையை தெளிவாக மீறி வந்தது மற்றும் சர்வதேச வான்வெளிகளை தீவிரமாக மீறி உள்ளது. இதையடுத்தே பலூன் சுட்டு வீழ்த்தப்பட்டது. அமெரிக்க மக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் அந்த பலூனை சுட்டு வீழ்த்தி இருக்கிறோம். என தெரிவிக்கப்பட்டுள்ளது.

* அதிகாரப்பூர்வ வேட்பாளர் தென்னரசு என தன்னிச்சையாக அறிவித்துள்ளார் அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன்; பொதுக்குழுதான் வேட்பாளரை தேர்வு செய்ய வேண்டுமே தவிர, முன் கூட்டியே அவைத்தலைவர் முடிவு செய்வது தவறு.

அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் அனுப்பியுள்ள கடிதம் அதிர்ச்சியை அளிக்கிறது. அந்த கடிதத்தில் ஓபிஎஸ் தரப்பு வேட்பாளர் பெயர் இல்லாதது தவறு.

நடுநிலை தவறி ஒருசிலரின் கைப்பாவையாக அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் செயல்பட்டுள்ளார்.

பொதுக்குழுதான் வேட்பாளரை தேர்வு செய்ய வேண்டுமே தவிர, முன் கூட்டியே அவைத்தலைவர் முடிவு செய்வது தவறு-ஓ.பன்னீர்செல்வம்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages