அக்னிப்புரட்சி இன்றைய (09.02.2023) முக்கிய செய்திகள். - Agnipuratchi

அக்னிப்புரட்சி இன்றைய (09.02.2023) முக்கிய செய்திகள்.

Share This

அக்னிப்புரட்சி இன்றைய (09.02.2023) முக்கிய செய்திகள்.

* பம்மல் சம்பந்த முதலியார் பிறந்த தினம். வழக்கறிஞர், நீதியரசர், நாடகாசிரியர், மேடை நாடக நடிகர், எழுத்தாளர், நாடக இயக்குனர் என்ற பல அவதாரங்களில் திளைத்தவர் பம்மல் சம்பந்தம் முதலியார்.
தமிழ் நாடகங்களின் தந்தை. சட்டம் பயின்று வழக்கறிஞராகப் பணியாற்றினார். நீதிபதியாகவும் பணியாற்றினார். தமிழ் நாடகம் மக்களின் பார்வையில் உயர்ந்த மதிப்புக்குரியதாகத் திகழ்வதற்கு முதற்காரணமானார். தன் நாடகங்களில் சிலவற்றில் செய்யுள், கீர்த்தனை முதலியவற்றையும் அறிமுகப் படுத்தினார்.
22வது வயதில் அவருடைய முதல் நாடகம் ‘லீலாவதி-சுலோசனா’ என்ற பெயருடன் அரங்கேறியது.
மொத்தம் 80 நாடகங்கள் எழுதி உள்ளார். இவர் பிப்ரவரி 9,1873ல் பிறந்தார்.

* டேவிசுக் கோப்பை ஆண்கள் டென்னிசு விளையாட்டில் ஓர் முதன்மையான பன்னாட்டு அணி விளையாட்டுப் போட்டி ஆகும். இதனை பன்னாட்டு டென்னிசு கூட்டமைப்பு  நடத்துகிறது. இப்போட்டி இக்கூட்டமைப்பின் அங்கத்தினர் நாடுகளுக்கிடையே தோல்வியுறும்  வடிவத்தில் நடைபெறுகிறது. இது துவக்கத்தில் இங்கிலாந்து மற்றும் ஐக்கிய அமெரிக்க நாடுகளின் அணிகளிடையே சவால் போட்டியாக 1900ஆம் ஆண்டு நடைபெற்றது. நடைபெற்ற தினம் பிப்ரவரி 09, ஆண்டு 1900.

* 1959 – ம் ஆண்டு பிப்ரவரி 9 ம் தேதி  முதலாவது கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை ஆர்-7 சோவியத் ஒன்றியத்தில் வெற்றிகரமாகச் சோதிக்கப்பட்டது.

🪁* சி. பஞ்சரத்தினம்   என்பவர் இந்திய இயற்பியலாளர் ஆவார். பஞ்சரத்தினம் வடிவியற்கட்டம் எனப்படும் வெவ்வேறு தளவிளைவுற்ற ஒளிக்கதிர்கள் குறுக்கிட்டுவிளைவு ஏற்பட்டு வெளிவரும் ஒளிக்கதிரில், தளவிளைவு வடிவியலைச் சார்ந்து ஒரு கட்ட வேறுபாடு உள்ளதைக் கண்டறிந்தார். இவருடைய ஆய்வுகள் பெரும்பாலும், படிக ஒளியியற் துறையைச் சார்ந்தது.
இவர் பிறந்த தினம் பெப்ரவரி 9 ஆண்டு 1934.

* ச. ராஜாபாதர்  விடுதலைப் போராட்டத்திலும், இந்தியப் பொதுவுடைமை இயக்கத்திலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர்.
ராஜாபாதர் இந்திய தேசிய ராணுவத்தில் இருந்த போது, மலேயா கணபதியுடன் ஏற்பட்ட நட்பினால் பொதுவுடைமை இயக்கத்தில் ஈடுபட்டார். இதனால், இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டார்.
இவர் இறந்த தினம் 9 பிப்ரவரி 1986.

* நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட துருக்கி, சிரியாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15,000-ஐ தாண்டியது.

கட்டிட இடிபாடுகளில் சிக்கியிருப்பவர்களை மீட்கும் பணியில், மீட்பு படையினர் தீவிரம்.

* பேருந்துகளில் ஆபத்தான பயணத்தை மேற்கொள்ளும் மாணவர்கள் மீது புகார் அளிக்கலாம் - போக்குவரத்துத்துறை உத்தரவு

பேருந்தின் படியில் நின்று மாணவர்கள் பயணம் செய்தால் பேருந்தை நிறுத்தி விட்டு காவல் நிலையத்தில் புகார் அளிக்க போக்குவரத்துத்துறை அறிவுறுத்தல்

பேருந்துகளில் பள்ளி, கல்லூரி மாணவர்களின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்வது ஓட்டுநர், நடத்துநர்களின் பொறுப்பு - போக்குவரத்துத்துறை

* இன்று (09/02/23) முதல் மார்ச் 01 வரை 16848 செங்கோட்டை - மயிலாடுதுறை "முழுவதும் முன்பதிவில்லா(UR)" விரைவு ரயில் புதுக்கோட்டை வழியாக இயக்கப்படவுள்ளது.மேலும் இந்த ரயிலுக்கு புதுக்கோட்டை ரயில் நிலையத்திற்கு நிறுத்தம் வழங்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டையில் இந்த ரயில் இன்று முதல் காலை 11:50 முதல் 12:30 மணிக்கு இடைப்பட்ட நேரத்தில் நின்று செல்லலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

காலை 10:30 மணிக்கு பிறகு திருச்சி செல்பவர்களும், பாபநாசம், கும்பகோணம், ஆடுதுறை, குத்தாலம், மயிலாடுதுறை செல்பவர்கள் இந்த ரயிலை பயன்படுத்திக்கொள்ளலாம்.

செங்கோட்டை, தென்காசி, கடையநல்லூர், சங்கரன்கோவில், ராஜபாளையம்,சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், விருதுநகர், மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி போன்ற பகுதிகளிலிருந்து புதுக்கோட்டை வருபவர்களும் இதே ரயிலை பயன்படுத்தலாம்.

TELEGRAM: t.me/agnipuratchi1

* கண்ணதாசனே கொஞ்சம் இங்கே  பார்
————————————————————
பாடல்: https://youtu.be/-wG_wCQFjY4

கவியரசு கண்ணதாசனைப் போன்ற எளிமையும் வாழ்க்கையினுடைய அடிநாதமும் கலந்த பாடல் சுகாவுக்கு  கைவந்திருப்பது உண்மையிலேயே வாழ்த்துக்குறியது.
சுகா நெல்லை கண்ணன் அவர்களினுடைய மகன் என்பதை விட ,சுகாவின்  தந்தை நெல்லை கண்ணன் என்று கூட சொல்லலாம்.
தம்மின் தம்மக்கட் பெரியர்தானே!
வாழ்க்கையில் மனிதம் நிறைந்த மகரந்தச் சொற்களோடு இயங்கிக் கொண்டிருக்கிற இன்னொரு நம்பிக்கைக்குறிய படைப்பாளர் சுகா.

இப்போது இயக்குனர் வெற்றிமாறனின் “விடுதலை “படத்தில் இளையராஜா இசையமைக்க பாடல் ஆசிரியராக  உருவாகி நிற்கிறார்.

எதார்த்த வரிகளோடு புகழ் பெற்று விளங்குகிற “மயக்கமா கலக்கமா மனதிலே குழப்பமா வாழ்க்கையில் நடுக்கமா?”என்ற பாடலுக்கு இணையான ஒரு பாடலை சுகா அளித்திருக்கிறார் என்று தான் கூறத் தோன்றுகிறது.

திணிக்காத வண்ண சொற்களை விடுத்து எளிமையான , வாழ்க்கையின் சமகாலப் பாதையில் நடக்கிற ஒரு மனிதனின் வாழ்க்கைச் சூழலை சுமந்து கொண்டு இந்தப் பாடல் - காற்றில்  கரைந்து வருகிறது .

இசைஞானி இளையராஜா தன் அற்புதமான இசையால் சுகாவை தூக்கிச் சுமக்கிறார் அல்லது கொண்டாடுகிறார்.

நடிகர் இயக்குனர் என்பதைத் தாண்டி நல்ல பாடகராகவும் மாறி இருக்கிறார் தனுஷ். பெண்குரலும் கச்சிதம்.
இசைஞானி குரல்வழி புதிய உலகை சித்தரித்து த் தருபவர் தந்திருக்கிறார்.

நான் என்னவென்று சொல்ல ? கூர்ந்து கவனிக்க வைக்கிறார் .
தொடர்ந்து பயணிக்க வேண்டும் என்று அவர் குரல் நம்மை அழைத்துக் கொண்டு செல்கிறது.

ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் என்ன விதமாய் இச்சூழலை உள்வாங்கி வென்றெடுப்பார்  என்று நான் இப்போதே கனவு கண்டு காத்துக் கொண்டிருக்கிறேன்.

ஊரும் உலகமும் உறவுகளும் கைவிட்ட நிலையில் நிலா வெளிச்சத்தில் நடந்து போகிற ஒரு மனிதனுக்கு நம்பிக்கை கொடுக்கிற வரிகளாகவும் இசையாகவும் அமைந்திருக்கிறது இந்தப் பாடல்.

இந்த வாய்ப்பை வெற்றிமாறன் சுகாவுக்கு தந்திருக்கிறார் என்பது உண்மையில் வெற்றி மாறனை கொண்டாடத் தோன்றுகிறது .
பாராட்ட தோன்றுகிறது. மனிதமும் நட்பும் ஒன்றான படைப்பாளி.

இப்படித்தான் அந்தப் பாடல் வரிகள் துவங்குகிறது .

“உன்னோடு நடந்தா  கல்லான காடு
பூத்தாடும் பூவனம் ஆகிடுதே "

என்று தொடங்கி  நெஞ்சைத் தொடும் சொற்களை பின்னாலே தருகிறார்.

“காத்து வரும் புழுதியப்  போல்
தூத்துகிற ஊரு இது
துக்கத்தில் துவண்டிருந்தால்
அது தூக்கிவிட நினைக்காது
முன்னேறிப் போக முட்டுக்கட்டை ஏது
பின் திரும்பி பார்க்காதே !
உன் துணைக்கு நான் தான் எந்துணைக்கு நீதான் என்றும் இது மாறாதே !

நல்வாக்கு ஊர் சொல்லும் காலம் வரும்
அல்லல்இருளை விரட்டும் விடியல் வரும்”

சுகா தனித்து நிற்கவில்லை மனிதத்தோடு இணைந்து  இசைந்து பேசுகிறார் .இவ்வாறாக…

ஏத்தி வச்ச தீப மொண்ணு
எந்த சாமிகளும் பாக்கலையே!
சேத்து வைச்ச கனவுகளை
நிறைவேத்திட யாருமில்லையே!
நிக்காத காலம் நேராக ஓடும்
எப்போதும் மாறாது
இல்லார்க்கும் ஏற்றம் என்றேனும் கொடுக்கும் இல்லாமல் போகாது
நம்பிக்கை கொண்டார்க்கு நாளை உண்டு! நம் வாழ்வில் என்றென்றும் சந்தோஷம் பொங்கி வரும்!

கல்லான காடு உன்னோடு நடந்தா
பூத்தாடும் பூவனம் ஆகிடுமே “

என்று உச்சத்தை தொடுகிறார் .
நெஞ்சை தொடுகிறார் சுகா.
இசைஞானி இளையராஜா மண்ணின் மைந்தர்களின் தாகம் தீர்க்கும் மேகம்.

TELEGRAM: t.me/agnipuratchi

காற்றே உன்னுள் ஒரு உலகம் இருப்பின் அதில் இளையராஜாவின் இசையும் இவ்வாறான சொற்களும் என்றும்  வாழ்ந்து கொண்டே இருக்கும்.
என் போன்றோர் அங்கே கயிற்றுக்கட்டிலில் அமர்ந்து நீராகாரம் குடித்தபடி கேட்டுக் கொண்டே இருப்போம். விடுதலை விடுதலை
இசைமலர்ந்த சொற்களோடு கவலை விலகும் விடுதலை வேறென்ன சொல்ல வாழ்த்துக்கள்!
- ராசி அழகப்பன் எழுத்தாளர், திரைப்பட இயக்குனர்

* ஆந்திர மாநிலம் காக்கிநாடா அருகே விஷ வாயு தாக்கி 7 பேர் உயிரிழப்பு.

எண்ணெய் தொழிற்சாலையில் டேங்கரை சுத்தம் செய்த போது, விபத்து.

டேங்கரை 9 பேர் சுத்தம் செய்த நிலையில், 7 பேர் மூச்சு திணறி உயிரிழப்பு.

* ஈரோடு கிருஷ்ணன்பாளையத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்திற்கு சீல் வைத்த அதிகாரிகள்.

உரிய அனுமதியின்றி திருமண மண்டபத்தில் அதிமுக-வினர் ஆலோசனை என புகார்.

புகாரை தொடர்ந்து மண்டபத்தில் நேரில் ஆய்வு செய்தனர் தேர்தல் நடத்தும் அலுவலர்கள்.

அதிமுக-வினரை வெளியேற்றிய பிறகு மண்டபத்தை இழுத்து மூடி சீல் வைத்த அதிகாரிகள்

* பலி எண்ணிக்கை 16,000
துருக்கி, சிரியா நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 16,000-ஐ தாண்டியுள்ளது.

இதனால் அங்கு இடிபாடுகளுக்கிடையே குவியல் குவியல்களாக மனித சடலங்கள் மீட்கப்பட்டு வருகின்றன.

கடந்த திங்கள் அன்று துருக்கி, சிரியாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கங்களால் ஏராளமானோா் பலியாகினர்.

லட்சக்கணக்கான மக்கள் தங்கள் இருப்பிடம், உடைமைகளை இழந்து நிற்கதியாகியுள்ளனர்.

* இந்தியா - ஆஸ்திரேலியா அணிக்களுக்கு இடையேயான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி: ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 177 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளை இழந்தது.

இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக ஜடேஜா 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

* டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேகமாக 450 விக்கெட்கள் - சாதனை படைத்த அஷ்வின்!

டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேகமாக 450 (89 ஆட்டம்) விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்தியரானார் சுழற்பந்து வீச்சாளர் அஷ்வின்; உலகளவில், 2வது வீரர்!

முதலிடத்தில் இலங்கை வீரர் முத்தையா முரளிதரன் 80 ஆட்டத்தில் இந்த மைல்கல்லை எட்டியிருந்தார்!

* பார்டர் புரோட்டா கடை குடோனுக்கு சீல்:

தென்காசி: பிரானூரில் பார்டர் புரோட்டா கடை குடோனுக்கு உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.

கலப்பட மற்றும் கெட்டுப்போன உணவுப் பொருட்களை கொண்டு சமைப்பதாக வந்த புகாரில் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

சோதனை செய்வதற்கு குடோனை திறக்க உரிமையாளர் மறுத்ததால் அதிகாரிகள் சீல் வைத்தனர்

* ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பான கருத்துக்கணிப்புகளை பிப்.,16 முதல் 27 வரை வெளியிட தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.

* சக்திவாய்ந்த நில நடுக்கத்தால் துருக்கி 5 முதல் 10 மீட்டர் வரை நகர்ந்து இருக்க வாய்ப்பு உள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்து உள்ளனர்.

துருக்கி - சிரியா எல்லையில் கடந்த 6 ந்தேதி அதிகாலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. துருக்கி காசியான்டெப் மாகாணத்தில் உள்ள நூர்டகிக்கு கிழக்கே 23 கிலோமீட்டர் (14.2 மைல்) தொலைவில் 24.1 கிலோமீட்டர் (14.9 மைல்) ஆழத்தில் நிலநடுக்கம் தாக்கியது. மேலும் 100 ஆண்டுகளுக்கு பிறகு இப்பகுதியைத் தாக்கிய சக்தி வாய்ந்த நிலநடுக்கம் இதுவாகும். ரிக்டர் அளவில் 7.8 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் துருக்கி, சிரியாவின் எல்லை நகரங்களில் கட்டிடங்கள் குலுங்கின. இந்த நிலநடுக்கம் இஸ்ரேல், லெபனான் போன்ற அண்டை நாடுகளிலும் உணரப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்க பாதிப்பால் இறந்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. துருக்கி, சிரியா நிலநடுக்கத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 17000 தாண்டி உள்ளது.துருக்கியில் குறைந்தது 14,000 பேர் இறந்துள்ளனர் என்று அந்நாட்டின் ஜனாதிபதி ரெசெப் தையிப் எர்டோகன் தெரிவித்துள்ளார், அதே நேரத்தில் சிரியாவில் குறைந்தது 3,162 பேர் பலியாகி உள்ளனர்.

பலி எண்ணிக்கை 25 ஆயிரத்தை தாண்டும் என்று அஞ்சப்படுகிறது. துருக்கியில் மட்டுமின்றி சிரியாவிலும் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டு உள்ளன.சிரியாவில் நிலநடுக்கம் காரணமாக 8 ஆயிரம் பேர் பலியாகி உள்ளனர். துருக்கியைத் தாக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் அது அமர்ந்திருக்கும் டெக்டோனிக் தகடுகளை மூன்று அடி (10 மீட்டர்) வரை நகர்த்தியிருக்கலாம் என்று நிபுணர் ஒருவர் கூறியுள்ளார். இத்தாலிய நில அதிர்வு நிபுணர் பேராசிரியர் கார்லோ டோக்லியோனி இதுபற்றி கூறும்போது, துருக்கி மேற்கு நோக்கி சிரியாவுடன் ஒப்பிடும்போது ஐந்து முதல் ஆறு மீட்டர் வரை நழுவியிருக்கலாம் என்று கூறினார். தொடர்ந்து பேசிய பேராசிரியர் டோக்லியோனி, சிரியாவுடன் ஒப்பிடுகையில், மதிப்பீடுகளில் துருக்கி உண்மையில் ஐந்து முதல் ஆறு மீட்டர் வரை நழுவியுள்ளது. லெபனான் தலைநகர் பெய்ரூட், சிரியா தலைநகர் டமாஸ்கஸ் மற்றும் எகிப்து நாட்டின் கெய்ரோ நகர் வரை நிலநடுக்கம் உணரப்பட்டு உள்ளது என்று கூறினார்.

TELEGRAM: t.me/agnipuratchi1

இத்தாலியின் தேசிய புவி இயற்பியல் மற்றும் எரிமலைக் கழகத்தின் தலைவர், இவை அனைத்தும் ஆரம்ப தரவுகளின் அடிப்படையில் அமைந்தவை என்றும், மேலும் துல்லியமான தகவல்கள் வரும் நாட்களில் செயற்கைக்கோள்களில் இருந்து கிடைக்கும் என்றும் கூறினார். இதையடுத்து பேசிய பேராசிரியர் டோக்லியோனி, 190 கிலோமீட்டர் நீளமும் 25 அகலமும் கொண்ட இந்த சிதைவு, நிலத்தை கடுமையாக உலுக்கி, 9 மணி நேர இடைவெளியில் இரண்டு மிகத் தீவிரமான சிகரங்களை எட்டிய வரிசையை ஏற்படுத்தியது. உண்மையில், பூமி தொடர்ந்து நடுங்கியது. ரிக்டர் அளவுகோலில் 5 -6 டிகிரி அளவுக்கு குறிப்பிடத்தக்க தீவிரத்துடன் அழிந்தது. இதற்கிடையில், எண்ணற்ற சிறிய அதிர்வுகளும் சேர்க்கப்பட்டுள்ளன. இவை எல்லாம் சில நொடிகளில் நடந்தது. அரேபிய தட்டுக்கு தென்மேற்கு நோக்கி துருக்கி நகர்ந்தது போல் உள்ளது. நாங்கள் மத்தியதரைக் கடலில் மிகவும் ஆபத்தான பகுதிகளில் ஒன்றான அதிக நில அதிர்வுப் பகுதியைப் பற்றி பேசுகிறோம். கடந்த நூற்றாண்டுகளில் மிகவும் கடுமையான பூகம்பங்கள் ஏற்பட்டுள்ளன என்றும் கூறினார். நிலநடுக்கத்தில் இருந்து தப்பியவர்களில் 90 சதவீதத்திற்கும் அதிகமானோர் முதல் மூன்று நாட்களுக்குள் மீட்கப்பட்டுள்ளனர் என்று லண்டன் பல்கலைக்கழக கல்லூரியின் பேரிடர் மற்றும் சுகாதார பேராசிரியர் இலன் கெல்மன் தெரிவித்தார்.

* தமிழகம் மட்டுமல்ல இந்தியாவே ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை பார்த்துக் கொண்டிருக்கிறது என ஈரோட்டில் நடைபெறும் அதிமுக வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெறும். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வெற்றி அடுத்த நாடாளுமன்ற தேர்தல் வெற்றியை எதிரொலிக்கும் எனவும் கூறினார்.

* பிப்ரவரி 11, 12 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு ஆசிரியர் தகுதி தேர்வு (TET) நடக்க இருப்பதால் அதே தேதியில் நடக்கவிருந்த இறுதி பருவத்தேர்வுகள் வரும் மே மாதம் 06, 07 தேதிகளுக்கு ஒத்திவைப்பு! -தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம்

* Article 356
356 வது பிரிவை பயன்படுத்தி 90 முறை மாநில அரசுகளை  கலைத்தது மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சி.

சரத் பவார் , ஆந்திராவில் என்டிஆரின் ஆட்சியை கலைத்தது காங்கிரஸ். திமுகவின் ஆட்சியை கலைத்தது யார் காங்கிரஸ் தானே என பிரதமர் மாநிலங்களவையில் பேச்சு. - ஏறத்தாழ 125 முறை பிரிவு 356யை பயன்படுத்தப்பட்டது. முதன் முறை பஞ்சாப் மாநிலத்தில் நடந்தது.

Art 356 was used for the first time in Punjab on 20 June 1951. It was also used in the state of Patiala and East Punjab States Union (PEPSU) and during the Vimochana Samaram to dismiss the democratically elected Communist state government of Kerala on 31 July 1959.

-கே.எஸ்.ராதாகிருஷ்ணன், மூத்த வழக்கறிஞர்

TELEGRAM: t.me/agnipuratchi1

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages