வன்னியர்களுக்கான 10.5 விழுக்காடு உள் இட ஒதுக்கீட்டை நடப்பு கல்வி ஆண்டு நிறைவடைதற்குள் தமிழக அரசு வழங்க வேண்டும்" - Agnipuratchi

வன்னியர்களுக்கான 10.5 விழுக்காடு உள் இட ஒதுக்கீட்டை நடப்பு கல்வி ஆண்டு நிறைவடைதற்குள் தமிழக அரசு வழங்க வேண்டும்"

Share This

"வன்னியர்களுக்கான 10.5 விழுக்காடு உள் இட ஒதுக்கீட்டை நடப்பு கல்வி ஆண்டு நிறைவடைதற்குள் தமிழக அரசு வழங்க வேண்டும்"

முதலமைச்சரை சந்தித்து பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி இராம்தாஸ் வலியுறுத்தல்

வன்னியர் உள் ஒதுக்கீட்டால் பிற சமூகத்தினருக்கு பாதிப்பு இல்லை என்றும் தமிழகத்தில் அரசுப்பணிகளில் இருப்போரின் சாதிவாரியான எண்ணிக்கை குறித்த தரவுகளை வெளியிடவும் அன்புமணி வலியுறுத்தல்

காவல்துறை அனுமதி பெறப்பட்டு வன்னியர் சங்கம் சார்பில் சித்திரை முழு நிலவுப்பெருவிழா நிகழ்ச்சி நடைபெறும் எனவும் அன்புமணி பேட்டி

சென்னை தலைமைச் செயலக வளாகத்தில் முதலமைச்சர் மு .க ஸ்டாலினை பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ், பாமக கௌரவத் தலைவர் ஜி கே மணி, பாமக வடக்கு மண்டல இணைப் பொதுச்செயலாளர் ஏ.கே மூர்த்தி, தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வெங்கடேஸ்வரன், பாமக செய்தி தொடர்பாளர்கள் வழக்கறிஞர் பாலு, வினோபா பூபதி ஆகியோர் உடன் இருந்தனர்  சந்திப்பின்போது உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலைப் பின்பற்றி வன்னிநர்களுக்கான 10.5 விழுக்காடு  உள் இட ஒதுக்கீட்டை  இந்த கல்வி ஆண்டுக்குள்  வழங்க வேண்டும் என பாமக சார்பில் வலியுறுத்தப்பட்டது.

அன்புமணி ராமதாஸ் பேட்டி

" வன்னியர் உள் இட ஒதுக்கீடு குறித்து முதல்வரை கூட்டாக இன்று சந்தித்தோம். மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் வன்னியர்களுக்கான 10.5 , சீர் மரபினருக்கு 2.5,  இதர பிறப்படுத்தப்பட்டோருக்கு   7 விழுக்காடு வழங்கப்பட்ட  இட ஒதுக்கீட்டை கடந்த மார்ச் மாதம் உச்ச நீதிமன்றம்  தடை செய்தது.

அதன்பிறகு கடந்த ஆண்டு தமிழக அரசு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தை மீண்டும் உருவாக்கினர் .

வன்னியர் உள் இட ஒதுக்கீடு தொடர்பாக இந்த ஆண்டு ஜனவரி மாதம் உச்ச நீதிமன்றம் வழங்கிய  தீர்ப்புக்கு ஏற்ப தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.

TELEGRAM: t.me/agnipuratchi1

அதன்படி பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் மூன்று மாதத்தில் 20 விழுக்காடு இட ஒதுக்கீடு தொடர்பான தரவுகளை சேகரித்து தமிழக அரசுக்கு பரிந்துரையாக  வழங்க வேண்டும் என தெரிவித்திருந்தது.  அதை விரைவுபடுத்தி இந்தக் கல்வியாண்டுக்குள் வன்னியர் உள் ஒதுக்கீட்பை  வழங்க வேண்டும் என முதல்வரை வலியுறுத்தினோம்.

வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு  வழங்கலாம் என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. இந்த கல்வி ஆண்டுக்கு முன்பாக வன்னியர் ஒதுக்கீட்டை வழங்க வேண்டும் ,

தமிழ்நாட்டில் தலித் மற்றும் வன்னியர் சமூகத்தினர்  40 விழுக்காடு இருக்கின்றனர் ,  இரண்டு சமூகமும் பின் தங்கியுள்ளனர். இரண்டு சமூகமும் முன்னேறினால் தமிழ்நாடு முன்னேறும். வன்னியர் தனி இட ஒதுக்கீட்டால் பிற சமூகங்களுக்கு பாதிப்பு கிடையாது , சீர் மரபினர் உட்பட யாருக்கும் எதிரானது கிடையாது.

தர்ம்புரி காவேரி உபரி நீர் திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும். கடந்த ஆண்டு காவிரி நீரில் 500 டிஎம்சி கடலில் வீணாக கலந்துள்ளது. காவிரி நீரில் 3 டிஎம்சியை தர்மபுரி மாவட்ட ஏரி குளங்களில்  நிரப்ப வேண்டும்.

கொள்ளிடம் உபரிநீரை அரியலூர் மாவட்ட ஏரி , குளங்களுக்கு நிரப்பும் வகையில் அரியலூர் சோழர் பாசன திட்டத்தையும் நிறைவேற்ற வேண்டும்.
கொள்ளிடம் ஆற்றில்  அளக்குடி பகுதியில் தடுப்ணை கட்டவும் முதல்வரிடம்  கோரிக்கை விடுத்துள்ளோம்.

போதைப் பொருள் தொடர்பாக முதல்வர் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என்று கூறி போதைப்பொருள்களை கட்டுப்படுத்துவது தொடர்பாக முதல்வர் மாவட்ட ஆட்சியர் , காவலர்களுடன் மாதாந்திர கூட்டம் நடத்த வேண்டும் என வலியுறுத்தினோம்.

சென்னை உயர்நீதிமன்றம் வன்னியர் உள் இட ஒதுக்கீட்டிற்கு தடை விதித்தபோது 7 காரணங்களை சொன்னது. அதில் 6 காரணங்கள் தவறு என உச்ச நீதிமன்றம் கூறிவிட்டது. சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு தரவுகளை சரிபார்த்து , இட ஒதுக்கீட்டை வழங்க  வேண்டும் என்ற காரணம் மட்டுமே சரியானது.

சாதிவாரியாக அனைத்து சமூகத்தினரும் அரசுப் பணிகளில் எத்தனை விழுக்காடு இருக்கின்றனர் என்ற தரவுகள் தனிப்பட்ட முறையில் எங்களுக்கு கிடைக்காது. ஆனால் தமிழக அரசு நினைத்தால்  2..3 நாளில் அந்த தரவுகளை எடுத்து விடலாம்.

அதிமுக முறையாகவே வன்னியர் உள் ஒதுக்கீட்டு சட்டத்தை நிறைவேற்றியது.

வன்னியர் சங்கம் சார்பில் சித்திரை முழு நிலவு விழா நிகழ்ச்சி நடத்துவது குறித்து காவல்துறையிடம் அனுமதி கேட்டுள்ளோம். காவல்துறை அனுமதி வழங்கினால் சித்திரை முழு நிலவு விழா நடைபெறும்.

நாடகக் காதல் தொடர்பாக இப்போது பேச நான் விரும்பவில்லை.

வன்னியர் உட்பட அனைத்து சாதிகளுக்கும் மக்கள் தொகை எண்ணிக்கைக்கும் ஏற்ப இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பதே எங்கள் நிலைப்பாடு

பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கான  இட ஒதுக்கீட்டில் எங்களுக்கு உடந்தை கிடையாது , அதில் தாழ்த்தப்பட்டோர் , பிற்படுத்தப்பட்டோர் ஏன் சேர்க்கப்படவில்லை ..? "
என்று கூறினர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages