அக்னிப்புரட்சி இன்றைய (11.02.2023) முக்கிய செய்திகள்
* 🔍🔎 அறிவியலில் பெண்கள், மற்றும் சிறுமிகளுக்கான பன்னாட்டு நாள்.
* தாமஸ் ஆல்வா எடிசன் அமெரிக்கக் கண்டுபிடிப்பாளரும், தொழிலதிபரும் ஆவார். இவர் ஒளி விளக்கு, ஒலிவரைவி, திரைப் படக்கருவி உள்ளிட்ட பல கருவிகளை உருவாக்கினார். திரள் உற்பத்தி, ஒன்றுபட்ட பெரிய குழுப்பணி ஆகிய கோட்பாடுகளைப் பயன்படுத்திய முதல் கண்டுபிடிப்பாளர்களுள் ஒருவர். 1880 ல் எடிசன் அறிவியல் சார்ந்த இதழ் ஒன்றைத் தொடங்கியவர். இது 1900-ஆம் ஆண்டில் அறிவியல் முன்னேற்றத்துக்கான அமெரிக்கக் கழகத்தின் இதழானது. இவர் பிறந்த தினம் பிப்ரவரி 11 ஆண்டு 1847.
* 👉 வரதராஜுலு கைலாச சுப்பையா புதுச்சேரியின் விடுதலைப் போராட்டத்தின் தலைவர், முதல் தென் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கிளையை அமைத்தவர். எழுத்தாளர், பதிப்பாளர், மார்க்சிய சிந்தனையார், புது்ச்சேரி பிரதேச அமைச்சர், சட்டமன்ற உறுப்பினர், பிரெஞ்ச் இந்திய நாடாளுமன்ற உறுப்பினர், சுதந்திரம் பத்திரி்க்கையின் நிறுவனர், இந்திய சுதந்திர போராட்டத்தில் பங்கு ஏற்று இந்திய விடுதலைக்கு பாடுபட்டதிற்காக தாமரை பட்டயம் பெற்ற 97 சுதந்திர போராட்ட வீரர்களில் இவரும் ஒருவர். இவர் பிறந்த தினம் பிப்ரவரி 11 ஆண்டு 1911.
* ✍️ சிட்னி ஷெல்டன் ஓர் அமெரிக்க எழுத்தாளர் ஆவார். திரைப்படங்கள், தொலைக்காட்சித் தொடர்கள் போன்றவற்றிற்கு திரைக்கதை, வசனம் எழுதியதன் மூலம் பிரபலமானவர். தனது 50வது வயதின் பின்னர் எழுதிய நாவல்கள் உலகை இவரை நோக்கிப் பார்க்க வைத்தது. இவர் பிறந்த தினம் பிப்ரவரி 11 ஆண்டு 1917.
* 🧩 நெல்சன் மான்டலா சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட நாள்
பிப்ரவரி 11, 1990 அன்று நெல்சன் மண்டேலா 27 ஆண்டுகளுக்கு பிறகு அரசியல் கைதிகளாக தென் ஆப்பிரிக்காவில் உள்ள கேப் டவுனுக்கு வெளியே விக்டர் வெர்ஸ்டர் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டார்.
* 🤒 உலக நோயாளர் நாள் (World Day of the Sick) என்பது கத்தோலிக்க திருச்சபை ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதம் 11ஆம் நாள் கொண்டாடுகின்ற ஒரு சிறப்பு நினைவு ஆகும். இந்நாள் கொண்டாட்டத்தைத் திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுல் 1992ஆம் ஆண்டு மே மாதம் 13ஆம் நாள் ஏற்படுத்தி, ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதம் 11ஆம் நாள் கடைப்பிடிக்குமாறு பணித்தார்.
* ☦️தூய லூர்து அன்னை என்ற பெயர், பிரான்சு நாட்டின் லூர்து நகரில் 1858 பிப்ரவரி 11 முதல் 1858 ஜூலை 16 வரை புனித பெர்னதெத் சூபிரூஸ் என்ற பெண்ணுக்கு அன்னை மரியா அளித்த காட்சியின் அடிப்படையில் அவருக்கு வழங்கப்படுகின்ற பெயராகும். இந்த உலகின் பல்வேறு இடங்களில் மரியன்னை அளித்த சிறப்பு வாய்ந்த காட்சிகளில் ஒன்றாக லூர்து நகர் காட்சியும் விளங்குகிறது. லூர்து அன்னையின் திருவிழா பிப்ரவரி 11 ந்தேதி கொண்டாடப்படுகிறது. இன்றும் ஆண்டுதோறும் உலகெங்கும் இருந்து இலட்சக்கணக்கான திருப்பயணிகள் லூர்து அன்னை பேராலயத்தை நாடிச் செல்கின்றனர்.
* நிலநடுக்கம் - பலி 23,000ஐ தாண்டியது.
துருக்கி, சிரியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 23 ஆயிரத்தை தாண்டியது.
நிலநடுக்கத்துக்கு இதுவரை துருக்கியில் 20,213 பேரும், சிரியாவில் 3,553 பேரும் உயிரிழந்ததாக தகவல்.
* காஷ்மீரில் 5.9 மில்லியன் டன் ‛லித்தியம் கண்டுப்பிடிப்பு.
ஸ்ரீநகர் : ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில், 5.9 மில்லியன் டன் ‛லித்தியம்' உலோக பொருட்கள் இருப்பதை, தேசிய புவியியல் ஆராய்ச்சி மையம் கண்டுப்பிடித்துள்ளது.
தேசிய புவியியல் ஆராய்ச்சி மையம், 1851ல் உருவாக்கப்பட்டது.
இம்மையம் சார்பில், நாட்டில் உள்ள கனிம வளங்கள் குறித்து, 2018-2019ம் ஆண்டு துவங்கி, நேற்று வரை நடைபெற்ற ஆய்வில், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின், ரியாசி மாவட்டத்தில் உள்ள சலால்-ஹைமானா மலையில், 5.9 மில்லியன் டன் லித்தியம் உலோக பொருட்கள் இருப்பது தெரியவந்துள்ளதாக, நேற்று (பிப்.,9)ம் தேதி மத்திய சுங்கத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
இதனுடன், ஜம்மு-காஷ்மீர், ஆந்திரா, சட்டீஸ்கர், குஜராத், ஜார்கண்ட், மத்திய பிரதேசம், ஒடிசா, ராஜஸ்தான், தமிழ்நாடு மற்றும் தெலங்கானா மாநிலங்களில், பெட்டாசியரம், மாலிப்டினம் தாதுவளங்கள் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டு, அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இவை தவிர, நாடு முழுவதும் 7,897 மில்லியன் டன்கள் கொண்ட நிலக்கரி மற்றும் லிக்னைட் இருப்பது பற்றிய 17 அறிக்கைகளும், நிலக்கரி அமைச்சகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இதைதொடர்ந்து வரும், 2023-2024ம் நிதியாண்டில், 966 கனிம ஆய்வு திட்டங்களை, புவியியல் ஆராய்ச்சி மையம் மேற்கொள்ள உள்ளது.
TELEGRAM: t.me/agnipuratchi1
* வானில் பறந்த மர்மப் பொருளை சுட்டு வீழ்த்திய அமெரிக்கா.
அலாஸ்கா கடற்கரைப் பகுதியில் வானில் பறந்த மர்மப் பொருளை சுட்டு வீழ்த்தியுள்ளது அமெரிக்க போர் விமானம்.
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உத்தரவின் பேரில் போர் விமானத்தில் சென்ற ராணுவ வீரர்கள் சுட்டு வீழ்த்தினர்.
* 2 வயசாச்சு; என் உலகமே நாய் தான்" - தன் வளர்ப்பு நாயைக் காப்பாற்ற வீட்டை விற்கும் நபர்!
இங்கிலாந்தில் உள்ள சிறைச் சாலையில் பணிபுரிபவர் ஜாக்சன் ஃபீலி. இவர் ரேம்போ எனும் 2 வயது நாயை வளர்த்துவருகிறார். ரேம்போவுக்கு கடந்த மாதம் 20-ம் தேதி திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டிருக்கிறது. கால்நடை மருத்துவமனைக்கு கொண்டுசென்ற போது, ரேம்போவுக்கு ஹைபோவோலெமிக் ஷாக் என்னும் நோய் ஏற்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, ரேம்போவுக்கு சிகிச்சையளிக்க பெரும் தொகை தேவைப்பட்டிருக்கிறது.
இது தொடர்பாக அவர் தன் வலைபக்கத்தில்,"ரேம்போவுக்கு 2 வயதுதான் ஆகிறது. அவள் தான் என்னுடைய உலகம். ரேம்போ உலகின் மிக அழகான குட்டி ஆன்மா. பாட்டி, தாத்தாவிடம் அதிகம் விளையாடுவாள். ஆனால், இப்போது கடுமையான நோயால் நிலைகுலைந்திருக்கிறாள். 10 நாள்களாக தீவிர சிகிச்சையில் இருந்தாள். ரேம்போவின் காப்பீடு மூலம் 6,500 பவுண்ட் வரை கிடைத்தது. தற்போது அவளுக்கான மருந்துகள் கொடுக்கப்பட்டுவருவதால், ஓரளவு தேறிவருகிறாள்.
ஆனாலும், அவளுக்கு நுரையீரலில் அறுவை சிகிச்சை செய்யவேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியிருக்கிறார்கள். என் செல்லப்பிராணியின் உயிரைக் காப்பாற்ற 20,000 பவுண்ட் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.1,99,4503) தேவைப்படுவதால் என்னுடைய வீட்டை விற்க முடிவு செய்திருக்கிறேன்" எனத் தெரிவித்திருக்கிறார்.
ரேம்போவின் மருத்துவ உதவிக்காக தொடங்கப்பட்ட வலைதளபக்கத்தில் பலரும் பணம் அனுப்பி ஜாக்சன் ஃபீலிக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.
TELEGRAM: t.me/agnipuratchi1
* எகிப்தில் கடும் விலைவாசி உயர்வு
எகிப்தில் பணவீக்கம் அதிகரித்துள்ளதால் மக்கள் கடுமையான விலைவாசி உயர்வை சந்தித்து வருவதாக அந்நாட்டின் புள்ளியியல் அலுவலகம் தெரிவித்துள்ளது.
ரஷ்யா - உக்ரைன் போர் தொடங்கும்முன் கடந்தாண்டு ஜனவரியில் பணவீக்கம் 8% ஆக இருந்த நிலையில், 2023 ஜனவரியில் 26.5% ஆக அதிகரித்துள்ளது.
விலைவாசி உயர்வால் மக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்கவே சிரமப்படுகின்றனர். 30% மக்கள் ஏழ்மையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
* பிபிசிஎல் நிறுவனத்தில் டிப்ளமோ தகுதிக்கு வேலை..!
பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெடில் காலியாக உள்ள Graduate Apprentice, Diploma Apprentice வேலைக்கு பணியாளர்களை நியமிப்பதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நிறுவனத்தின் பெயர் - பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட்
பதவி -Graduate Apprentice, Diploma Apprentice
கல்வித்தகுதி -Diploma,BE
சம்பளம் -ரூ.18,000 முதல் ரூ.25,000 வரை
வயது வரம்பு - 18 முதல் 27 வயது வரை
விண்ணப்பிக்கும் முறை -ஆன்லைன்
விண்ணப்பக்கட்டணம் -இல்லை
தேர்வு முறை - நேர்காணல்
கடைசி தேதி - பிப்.17,2023
இணையதள முகவரி -http://bharatpetroleum.com/
TELEGRAM: t.me/agnipuratchi1
* இனி ஆண்டுதோறும் லைசென்ஸ் புதுப்பிக்கணும்; உணவு பாதுகாப்பு துறையில் புதிய நடைமுறை.
மத்திய அரசின் உணவு பாதுகாப்பு துறையின் கீழ், ஐந்தாண்டுகள் வரை 'லைசென்ஸ்' வழங்கிய நிலையில், தற்போது ஆண்டுதோறும் 'லைசென்ஸ்' புதுப்பிக்க வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
உணவு தானியம், மாவாக அரைப்பது, தின்பண்டம், பேக்கிங் உணவு தயாரிப்பு உட்பட எந்த வகையான உணவு தயாரிப்பில் ஈடுபடுபவர்களும், பொருளை வாங்கி பேக்கிங் செய்து விற்பவர்களும் ஆண்டுதோறும் 'லைசென்ஸ்' புதுப்பிக்க வேண்டும். ஆண்டுக்கு ரூ.12 லட்சத்திற்கு மேல் விற்பனை இருந்தால் 'லைசென்ஸ்' எடுக்க வேண்டும்.
அதற்கு குறைவாக இருந்தால் ஆண்டுக்கு ரூ.100 செலுத்தி பதிவுச்சான்றிதழ் பெறலாம்.
ரூ.500 செலுத்தினால் ஐந்தாண்டுகளுக்கு பதிவுச் சான்றிதழ் பெறலாம்.
'லைசென்ஸ்' பெற ஓராண்டு கட்டணம் ரூ.2000. 3 ஆண்டுகளுக்கு ரூ.6000, 5 ஆண்டுகளுக்கு ரூ.10ஆயிரம் செலுத்தி 3 முதல் 5 ஆண்டுகளுக்கு 'லைசென்ஸ்' பெறும் வசதி தற்போது மாற்றப்பட்டுள்ளது.
2023, ஜன.,12 லிருந்து புதிய நடைமுறை படி, இனி ஆண்டுதோறும் 'லைசென்ஸ்' புதுப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜன.,11க்கு முன்னதாக, ஐந்தாண்டுகளுக்கான 'லைசென்ஸ்' பெற்றிருந்தால் ஆண்டுதோறும் விண்ணப்பிக்க தேவையில்லை.
ஏற்கனவே 3 முதல் 5 ஆண்டுகளுக்கு 'லைசென்ஸ்' பெற்றவர்களின் உரிமம் காலாவதியாகும் பட்சத்தில் ஆண்டுதோறும் புதுப்பிக்க வேண்டும்.
பதிவுச்சான்றிதழ் அல்லது 'லைசென்ஸ்' இல்லாமல் தொழில் செய்தால் 6 மாத சிறை, ரூ.ஒரு லட்சம் அபராதம் விதிக்கலாம் என உயர்நீதிமன்ற மதுரை கிளையும் அறிவித்துள்ளது.
அதுமட்டுமின்றி பொருட்களின் பேக்கிங் லேபிளில் உற்பத்தி தேதி, காலாவதி, தயாரிக்கும் இடம், முகவரி, அலைபேசி உள்ளிட்ட 16 வகையான தகவல்கள் இடம்பெற்றிருக்க வேண்டும். லேபிளில் தகவல்கள் முழுமையாக இல்லாவிட்டால் டி.ஆர்.ஓ., நீதிமன்றம் மூலம் ரூ. 2 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும்.
காலாவதி தேதிக்கு முன்பாக 'லைசென்ஸ்' புதுப்பித்து அபராதத்தில் தப்பிக்கலாம் என உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
TELEGRAM: t.me/agnipuratchi1
* 🏏 இந்திய அணி அபார வெற்றி
முதல் டெஸ்ட் போட்டியின் 3ம் நாள் ஆட்டம்: முதல் இன்னிங்சில் இந்தியா 400 ரன்களுக்கு ஆல் அவுட்.
223 ரன்கள் பின் தங்கிய நிலையில் ஆஸ்திரேலியா 2வது இன்னிங்சை தொடங்கி 26 ரன்களுக்கு 2 விக்கெட்களை இழந்தது.
ஆஸ்திரேலியா உடனான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 132 ரன்கள் வித்தியாசத்தில் இன்னிங்ஸ் வெற்றி பெற்றது.
2வது இன்னிங்ஸில் 223 ரன்கள் பின் தங்கிய நிலையில் களமிறங்கிய AUS அணியில் வார்னர்(10), லாபுசேன்(17), ஸ்மித் (25), தவிர மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
இதனால் அந்த அணி 95/10 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
ஆஸ்திரேலியா அணியை தனது பவுலிங்கால் கதிகலங்க வைத்த அஸ்வின் 5 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.
நாக்பூரில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் போது நடத்தை விதிகளை மீறியதற்காக ரவீந்திர ஜடேஜாவுக்கு போட்டியின் சம்பளத்தில் 25% சதவீதம் அபராதம் விதிப்பு.
நடுவர்களிடம் தெரிவிக்காமல் கைவிரலில் வலி நிவாரணி மருந்தை பயன்படுத்தியதால் ஜடேஜாவுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
* தேவாளை மலர் சந்தையில் மல்லிகைப்பூ விலை ஒரே நாளில் கிலோவுக்கு ₹1000 உயர்ந்து ₹2300-க்கு விற்பனை.
பிச்சிப்பூ விலை கிலோவுக்கு ₹300 உயர்ந்து ₹2,300-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
* கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை சார்பில் நவீன சேமிப்பு தளங்கள்
சென்னை, தலைமை செயலகத்தில் காணொலி வாயிலாக திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
8 மாவட்டங்களில் ₹ 105.08 கோடி மதிப்பில் 1,42,450 மெட்ரிக் டன் கொள்ளளவில் மேற்கூரையுடன் அமைக்கப்பட்டுள்ள 106 நவீன நெல் சேமிப்புத் தளங்கள் திறந்து வைப்பு.
நிகழ்ச்சியில் தலைமை செயலாளர் இறையன்பு உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்பு.
🔴 கூகுள் பே, பேடிஎம், போன் பே பயன்படுத்தினால் இனி கட்டணம்!?
விவரம்: https://youtu.be/C5YuzB5OkQA
* இடைத்தேர்தல் நடைபெறும் ஈரோடு கிழக்கு தொகுதியில் பாதுகாப்பை உறுதிப்படுத்த, போலீசார் மற்றும் துப்பாக்கி ஏந்திய மத்திய பாதுகாப்பு படையினர் கொடி அணிவகுப்பு நடத்தினர்!
No comments:
Post a Comment