அக்னிப்புரட்சி இன்றைய (12.02.2023) முக்கிய செய்திகள். - Agnipuratchi

அக்னிப்புரட்சி இன்றைய (12.02.2023) முக்கிய செய்திகள்.

Share This

அக்னிப்புரட்சி இன்றைய (12.02.2023) முக்கிய செய்திகள்.

* வேலையின்மையை வெல்வோம்.

கடந்த ஆண்டில் மட்டும் சுமார் 2.5 லட்சம் பொறியியல் பட்டதாரிகளுக்கு, டி.சி.எஸ்., விப்ரோ, எச்.சி.எல்., டெக் மகேந்திரா, அமேசான்  போன்ற  பன்னாட்டு நிறுவனங்கள் கல்லூரி வளாகங்களில்  நேர்முகத்  தேர்வு நடத்தி  தங்கள் நிறுவனங்களில் பணியில் அமர்த்தின.

தற்போது சர்வதேச அளவில் ஐ.டி. நிறுவனங்களில் உபரியாக  பணியாளர்கள்  உள்ளதாகக்  கூறி பெரும் எண்ணிக்கையிலான பணியாளர்கள் வேலை நீக்கம் செய்யப்பட்டு வருகின்றனர்.

சமீபத்தில் கூகுள் நிறுவனம் தனது 12,000 பணியாளர்களையும், விப்ரோ நிறுவனம் 450 பணியாளர்களையும் பணியில் இருந்து நீக்குவதாக அறிவித்துள்ளன. சாப் (எஸ்.ஏ.பி.)நிறுவனம் உலக அளவில் 3,000 அல்லது 2.5% பணியாளர்களையும்,  ஐ.பி.எம். 3,900 பணியாளர்களையும் பணி நீக்கம் செய்ய  திட்டமிட்டுள்ளன. 

கடந்த ஆண்டு நவம்பர் முதல் இதுவரையில் சுமார் 2 லட்சம் தகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்க நாளிதழ் 'வாஷிங்டன் போஸ்ட்'  தெரிவித்துள்ளது.

இவர்களில்  30 % முதல் 40 % பேர் இந்தியர்கள் என்பது வேதனைக்குரிய செய்தி. அடுத்த ஆறு மாதங்களில் 80 ஆயிரம் முதல் ஒரு லட்சத்து 20 ஆயிரம் வரையிலான  பணியாளர்கள் வெளியேற்றப்பட வாய்ப்புள்ளது .

நம் நாட்டில், 2018 -19 நிதி ஆண்டில் வேலையின்மை 5.8 % ஆக இருந்து, 2020-21 நிதி ஆண்டில் 4.2% ஆகக் குறைந்துள்ளது. எனினும் வேலையின்மை நம் நாட்டில் மிகப்பெரிய பிரச்னையாக உருவெடுத்து உள்ளதை மறுக்க இயலாது.

மத்திய தொழிலாளர் அமைச்சகம், அமைப்புசாரா தொழிலாளர்களின் நலனுக்காக, சமூக பாதுகாப்பிற்காக நிறுவியுள்ள 'இஷ்ராம்' செயலியில்  டிசம்பர் 2022 வரை சுமார் 28.5 கோடி அமைப்பு சாரா தொழிலாளர்கள் பதிவு செய்துள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர்  வேலையில்லாதவர்களே.

தமிழ்நாட்டில் மட்டும் அரசு வேலை வாய்ப்பு அலுவலகங்களில் வேலைக்காக சுமார் 67.75 லட்சம் பேர் பதிவு செய்துள்ளனர்.

இவர்களில் மருத்துவம், பொறியியல், வேளாண்மை, வேளாண்மை பொறியியல், கால்நடை அறிவியல், சட்டம் போன்ற படிப்புகளில் இளநிலை மற்றும் முதுகலை பட்டம் பெற்றவர்களும் அடங்குவர். அரசு வேலைக்காக பதிவு செய்திருப்பவர்களில் சுமார் 28 லட்சம் பேர் 19 வயது முதல் 30 வயது வரையிலான   இளைஞர்களே

இதற்கு தீர்வு.

தொழில் தொடங்க வங்கிகள் தரும் கடன், அரசின் மானியம் ஆகியவற்றோடு சரியான திட்டமிடல், தன்னம்பிக்கை கொண்டு இளைய தலைமுறையினர் சிறந்த தொழில் முனைவோராகி வேலை தேடும் பலருக்கு வேலை வாய்ப்பு அளிக்க முன்வர வேண்டும்.

* UPI பண பரிமாற்றத்திற்கு கட்டணம் வசூல்.

கடந்த 2016ஆம் ஆண்டு ஏப்ரல் 11ஆம் தேதி அப்போதைய ரிசர்வ் வங்கி ஆளூநர் ரகுராம் ராஜனால் இந்த யூபிஐ(Unified Payment Interface) வசதி அறிமுகப்படுத்தப்பட்டது.

பொதுமக்கள் வங்கிக்கு சென்று நேரத்தை செலவிட வேண்டாம் என்ற நோக்கத்திலும், இருந்த இடத்தில் பணத்தேவையைப் பூர்த்தி செய்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் ஆரம்பிக்கப்பட்டது.

தற்போது இதன் வளர்ச்சி என்பது அபரிவிதமாக உள்ளது. முற்றிலும் இலவசமாக இருந்த இடத்திலிருந்து கொண்டே அனைத்துப் பகுதிகளுக்கும் பணம் அனுப்ப வசதியாக உள்ளது. இதற்குத் துணையாக ஜீ-பே,போன்-பே, பேடிஎம் ஆப்களும் ஆதரவு செய்கின்றன.

இனி பண பரிவர்த்தனை செயலி மூலம் பணம் அனுப்பினால் கட்டணம் பிடிக்கப்படும் என பல தகவல்கள் வெளியான நிலையில் தற்போது அது உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

கட்டண விவரம்: https://youtu.be/C5YuzB5OkQA

ஆம், ஜீ-பே, போன்-பே, பேடிஎம் மூலம் 90 முறைக்கு மேல் பணம் பரிமாற்றம் செய்தால் கட்டணம் வசூலிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது ஆறுமாதத்திற்குள் 90முறைக்கு மேல் தாண்டும் ஒவ்வொரு பண பரிமாற்றத்திற்கும் கட்டணம் பிடிக்கப்படும்.

இது அனைத்து வங்கிகளிலும் தற்போது செயல்படுத்தப் போவதில்லை என்றும், ஒரு சில வங்கிகளில் மட்டும் இந்த நடைமுறை கொண்டுவரப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை both folio charges என்று சொல்லப்படுகிறது.

90 முறைக்கு மேல் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் ரூ.2.25+ ஜிஎஸ்டி(ரூ.2.65பைசா) கட்டணமாக வசூலிக்கப்படுமாம்.

இந்த கணக்கீடு ஆறு மாதத்திற்கு ஒருமுறை மேற்கொள்ளப்படும் எனவும், அப்போது 90 முறைக்கு மேல் பண பரிவர்த்தனை செய்துள்ள வங்கி கணக்கிலிருந்து ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும், ரூ.2.65பைசா பிடித்தம் செய்யப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

இது அதிகம் ஜீ-பே,போன்-பே, பேடிஎம் செயலிகளைப் பயன்படுத்துவோருக்கு அதிர்ச்சியான செய்தியாக மாறும்.

* உடைந்த சூரியன்.." வீடியோ வெளியிட்டு மிரள வைத்த ஆராய்ச்சியாளர் முழு விவரம்

சூரியனின் ஒரு பகுதி திடீரென தனியாக உடைந்து அதன் மேற்புறத்தில் சுற்றி வருகிறது. இது தொடர்பான புகைபடங்கள் , வீடியோக்கள் இணையத்தில் வைரல் ஆகின்றது

சூரியனின் ஒரு பெரிய பகுதி அதன் மேற்பரப்பில் இருந்து உடைந்து அதன் வட துருவத்தைச் சுற்றி ஒரு சூறாவளி போன்று சுழற்சியை உருவாக்கியுள்ளது.. இது எப்படி நிகழ்ந்தது என்பதைக் கண்டறியும் முயற்சியில் ஆய்வாளர்கள் இறங்கியுள்ளனர்

ஆய்வாளர் டாக்டர் தமிதா ஸ்கோவ் என்பவர் தனது ட்விட்டரில்

சூரியினில் வடக்கின் முக்கியப் பொருள் பிரிந்து இப்போது நமது நட்சத்திரத்தின் (சூரியன்) வட துருவத்தைச் சுற்றி ஒரு பெரிய சூறாவளி போன்ற ஒன்றை உருவாக்கி வருகிறது. அங்கு ஏன் இப்படி நடந்துள்ளது என்பதைக் கண்டறியும் முயற்சியில் இறங்கியுள்ளோம்" என்று பதிவிட்டுள்ளார்.

சூரியனில் இருந்து எப்போதும் சோலார் பிளார்ஸ் வெளியாகும்.. இது சில நேரங்களில் பூமியில் உள்ள தகவல்தொடர்புகளைக் கூட பாதிக்கும். எனவே, சூரியனில் என்ன நடந்தாலும் அது ஆய்வாளர்களுக்குக் கவலையையே ஏற்படுத்தும்.. இதன் காரணமாகவே ஆய்வாளர்கள் இது தொடர்பாகத் தீவிரமான ஆய்வில் இறங்கியுள்ளனர்.என குறிப்பிட்டுள்ளார்.

TELEGRAM: t.me/agnipuratchi1

👍 டார்வின் நாள் (Darwin Day) என்பது ஒவ்வோர் ஆண்டும் பெப்ரவரி 12 ஆம் நாளன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நாளிலேயே 1809 ஆம் ஆண்டில் பரிணாமத் தத்துவத்தை உலகுக்கு அளித்த சார்ல்ஸ் டார்வின் பிறந்தார். அறிவியலையும் அறிவியலை மேம்படுத்தவும் உதவிய டார்வினின் பணிகளை இந்நாளில் நினைவு கூறுகிறார்கள்.

🔴🟥 செங்கை நாள் அல்லது சிவப்புக் கை நாள் என்பது வருடாந்தம் பிப்ரவரி 12 ஆம் திகதியில் அனுட்டிக்கப்படும் நாள் ஆகும். இந்நாள் சிறுவர்களை இராணுவத்தில் அல்லது போர்களில் அரசியல் தலைமைகள் தமக்கு சாதகமாகப் பயன் படுத்துவதற்கு எதிரான நாள் ஆகும். போர் வீரச்சிறுவர் பயன்பாட்டிற்கு எதிரான பன்னாட்டு நாள் எனவும் இது அறியப் படுகின்றது. இந்நாளின் முக்க்கிய நோக்கம், போர்ச்சிறுவர்களுக்க்கு ஆதரவு அளித்து, அவர்களை பாதுகாப்பதே ஆகும்.

👍 இந்தியாவில் ஆண்டு தோறும் பிப்ரவரி 12ஆம் தேதி அன்று தேசிய உற்பத்தித் திறன் தினம்  பிப்ரவரி 12 முதல் 18 ஆம் தேதி வரை தேசிய உற்பத்தி திறன் வாரமும் தேசிய உற்பத்தித்திறன் குழுவால் (National Productivity Council) கொண்டாடப் படுகின்றது.

👍 1502 – ம் ஆண் பிப்ரவரி 12 ம் தேதி  இந்தியாவுக்கான தனது இரண்டாவது கடற் பயணத்தை வாஸ்கோட காமா லிஸ்பனில் இருந்து ஆரம்பித்தார்.

👍 தயானந்த சரசுவதி சுவாமிகள்  தத்துவவாதியாகவும், இந்து சமயத்தின் தீவிரச் சிந்தனையாளராகவும் இருந்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தியவர். 19 ஆம் நூற்றாண்டில் தோன்றிய சமய சீர்திருத்த இயக்கங்களில் முக்கியமான ஆரிய சமாஜ இயக்கத்தினை நிறுவியவர். இவர் பிறந்த தினம்  பிப்ரவரி 12, 1824.

👍 ஆபிரகாம் லிங்கன் ஐக்கிய அமெரிக்காவின் 16 வது குடியரசுத் தலைவர் ஆவார். இவர் அடிமை முறைக்கு எதிர்ப்புத் தெரிவித்து அதனை ஒழிக்க முனைந்தவர்களில் ஒருவர். 1860ல் மேற்கு மாநிலங்களில் தலைவராக இருந்த இவர் குடியரசுக் கட்சியின் வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு அமெரிக்காவின் குடியரசுத் தலைவராக வெற்றி பெற்றார். இவர் பிறந்த தினம் பிப்ரவரி 12, ஆண்டு 1809.

👍 ஜி. யு. போப்   கனடாவில் பிறந்து கிறிஸ்தவ சமய போதகராகத் தமிழ் நாட்டிற்கு வந்து 40 ஆண்டு காலம் தமிழுக்குச் சேவை செய்தவர். திருக்குறள், நாலடியார், திருவாசகம் ஆகிய நூல்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர். இவர் இறந்த  தினம் பிப்ரவரி 12,ஆண்டு  1908.

* துருக்கி மற்றும் சிரியாவில், நிலநடுக்கத்தால் பலியானோர் எண்ணிக்கை 25 ஆயிரத்தைத் தாண்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேற்காசிய நாடுகளான துருக்கி மற்றும் சிரியாவில், 6ம் தேதி அடுத்தடுத்து சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது, ரிக்டர் அளவுகோலில் 7.8 ஆக பதிவானது.

இதைத் தொடர்ந்து ஏற்பட்ட வலுவான நிலநடுக்கம் மற்றும் நில அதிர்வுகளால், 12 ஆயிரத்திற்கு மேற்பட்ட கட்டடங்கள் தரைமட்டமாகின.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் இடிபாடுகளில் சிக்கி உள்ளோரை மீட்கும் பணி இரவு, பகலாக நடந்து வருகிறது.

இன்று நடந்த மீட்பு பணியின் போது , பிறந்து 10 நாட்களே ஆன பச்சிளம் குழந்தை 90 மணி நேரத்திற்கு பின் கட்டிட இடிபாடுகளில் இருந்து உயிருடன் மீட்கப்பட்டது.

அந்த பச்சிளம் குழந்தையின் தாயாரும் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்

இந்த நிலநடுக்கத்திற்கு இதுவரை பலியானோர் எண்ணிக்கை 25 ஆயிரத்தை தாண்டியதாக தகவல் வெளியாகியுள்ளது.இடிபாடுகளில் சிக்கி சிலர் உயிருடன் மீட்கப்பட்டு வருகின்றனர்.

எனினும் பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

TELEGRAM: t.me/agnipuratchi1

* பி.எஸ்சி பட்டதாரிகளுக்கு ரூ.75 ஆயிரம் சம்பளத்தில் அரசு வேலை.

தமிழ்நாடு மாற்றுத் திறனாளிகள் நலத்துறையில் காலியாக உள்ள Program Officer & Data Analyst வேலைக்கு பணியாளர்களை நியமிப்பதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நிறுவனம் -மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல ஆணையரகம்

பதவி -Program Officer & Data Analyst

காலியிடங்கள் - 53

கல்வித்தகுதி -B.Sc

சம்பளம் -ரூ.25,000 முதல் ரூ.75,000

விண்ணப்பிக்கும் முறை - ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம் -இல்லை

தேர்வு முறை - Short Listing, Interview

இணையதள முகவரி - https://www.scd.tn.gov.in/

கடைசி தேதி - 23/02/2023

TELEGRAM: t.me/agnipuratchi1

* ஆசிய உள்ளரங்கு தடகள சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய வீராங்கனை ஜோதி யாராஜி புதிய சாதனை படைத்தார்.

60 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் 8.16 வினாடிகளில் இலக்கை கடந்து ஜோதி யாராஜி தேசிய சாதனை படைத்தார்.

அமெரிக்காவை தொடர்ந்து கனடாவின் வான்பரப்பில் பறந்த மர்ம பொருள் சுட்டு வீழ்த்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அமெரிக்காவின் உதவியுடன் மர்ம பொருள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ டுவீட்டரில் பதிவு செய்துள்ளார்.

* பேச்சு சுதந்திரம் இல்லை

நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும், வெளியிலும் பேச்சு சுதந்திரம் கிடையாது. யாராவது உண்மையைப் பேசினால் அவர்களை சிறைக்கு அனுப்புவதாக காங். தலைவர் மல்லிகார்ஜூன கார்கே விமர்சித்துள்ளார்.

பிரதமர் அதானிக்காக பணியாற்றுகிறார், ஏழை மக்களுக்காக அல்ல. அதானிக்கு LIC ₹16,000 கோடியும், SBI ₹82,000 கோடியும் வழங்கி உள்ளது. இதை ராகுல் நாடாளுமன்றத்தில் எழுப்பினார். அது அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளது என்றார்.

* மாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று திறக்கப்பட உள்ளது.

இன்று சபரிமலை கோயில் நடை திறக்கப்பட்டு நாளை முதல் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.

மண்டல, மகரவிளக்கு கால பூஜைகளுக்கு பின்னர் ஜன.20-ம் தேதி சபரிமலை ஐயப்பன் கோயில் நடை சாத்தப்பட்டது.

* ஜார்கண்ட் மாநில ஆளுநராக தமிழ்நாட்டைச் சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன் நியமனம்.

ஆந்திரா ஆளுநராக ஓய்வுபெற்ற நீதிபதி அப்துல் நசீர் நியமனம்.

மணிப்பூர் மாநில ஆளுநர் இல.கணேசன் நாகாலாந்துக்கு மாற்றம்.

ஆந்திர ஆளுநராக இருந்த ஹரிச்சந்தன் சத்தீஸ்கர் மாநிலத்துக்கு மாற்றம்.

ஜார்க்கண்ட் மாநில ஆளுநர் ரமேஷ் பயஸ், மகாராஷ்டிரா ஆளுநராக மாற்றம்.

சத்தீஸ்கர் ஆளுநர் சுஸ்ஸ்ரீ அனுசுயா மணிப்பூர் ஆளுநராக மாற்றம்.

இமாச்சல் ஆளுநர் ராஜேந்திர ஆர்லேகர், பீகார் ஆளுநராக மாற்றம்!

பீகார் மாநில ஆளுநர் சவுகான், மேகாலயா ஆளுநராக நியமனம்.

* செவ்வாய் கிரகத்தில் ஆறு இருந்ததா? புதிய ஆதாரம் கிடைத்தது!

வாஷிங்டன் :செவ்வாய் கோளில் நீர் இருந்ததற்கான ஆதாரங்கள் நிறைய கிடைத்துள்ளன.

தற்போது முதல்முறையாக அங்கு ஒரு ஆறு இருந்ததற்கான ஆதாரம் கிடைத்துள்ளது. அமெரிக்க விண்வெளி ஆய்வு அமைப்பான 'நாசா' செவ்வாய் கோளில் ஆய்வு செய்து வருகிறது.

இதற்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ள, 'கியூரியாசிட்டி' என பெயரிடப்பட்டுள்ள 'ரோவர்' எனப்படும் ஆய்வு வாகனம், செவ்வாய் கோளின் பல்வேறு பகுதிகளில், 2014ம் ஆண்டு முதல் ஆய்வில் ஈடுபட்டு வருகிறது.

அங்கு, 'மவுன்ட் ஷார்ப்' எனப்படும் மிகப் பெரிய மலை மீது கியூரியாசிட்டி ஆய்வு செய்து வந்தது.

இந்த மலை பல கனிமங்களால் உருவானது தெரியவந்தது.
மேலும், செவ்வாய் கோளில் ஒரு காலத்தில் நீர் இருந்திருக்கலாம் என்பதற்கான ஆதாரங்களும் கிடைத்தன.

இந்நிலையில், 18 ஆயிரம் அடி உயரமுள்ள இந்த மலையின் மறுபக்கத்துக்கு கியூரியாசிட்டி சென்றுள்ளது.

அங்கு, பல நுாற்றாண்டுகளுக்கு முன்பு ஆறு ஓடியதற்கான ஆதாரம் கிடைத்துள்ளது.இது குறித்து நாசாவின், கியூரியாசிட்டி திட்ட மூத்த விஞ்ஞானியான அஸ்வின் வசவாடா கூறியுள்ளதாவது:

செவ்வாய் கோளில், முன்னொரு காலத்தில் ஆறு ஓடியுள்ளதற்கான ஆதாரங்கள் தற்போது கிடைத்துள்ளன. இது, நம் ஆய்வின் முயற்சிக்கு கிடைத்துள்ள புதிய தகவலாகும்.

அதாவது ஒரு ஆறு ஓடி, வறண்ட பின், அந்தப் பகுதியில் மணல் உள்ளிட்டவற்றை அரித்து சென்ற தடங்கள் தெரியும்.இதுபோன்ற தடங்கள் தற்போது கிடைத்துள்ளன.

இது செவ்வாயில், பல நுாற்றாண்டுகளுக்கு முன், நீர் மட்டுமல்ல, ஆறு ஓடியுள்ளது என்பதை நிரூபிக்கும் வகையில் உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

TELEGRAM: t.me/agnipuratchi1

* திருவண்ணாமலையில் ஒரே இரவில் 4 ஏடிஎம்களில் ₹ 75 லட்சம் கொள்ளை.

ஆந்திர பதிவெண் கொண்ட காரை கொள்ளையர்கள் பயன்படுத்தியதாக போலீசாரின் விசாரணையில் தகவல்.

தமிழக - ஆந்திர எல்லையில் உள்ள சிசிடிவி பதிவுகளை கைப்பற்றி தீவிர விசாரணை.

* 13 மாநிலங்களுக்கு ஆளுநர்களை நியமித்து குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு உத்தரவு!..

டெல்லி: மகாராஷ்டிரா, சீக்கிம், இமாச்சல பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்களை நியமித்து குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உத்தரவிட்டுள்ளார்.

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இன்று காலை மகாராஷ்டிரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்களை நியமித்து உத்தரவிட்டுள்ளார். இதில் மகாராஷ்டிரா, சீக்கிம், இமாச்சல பிரதேசம், அருணாச்சலபிரதேசம், ஜார்கண்ட் உள்ளிட்ட மாநிலங்கள் அடங்கும். அதன்படி மகராஷ்டிரா மாநில புதிய ஆளுநராக ரமேஷ் பாசிஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

அம்மாநிலத்தின் ஆளுநராக இருந்த பகத் சிங்கின் ராஜினாமாவை ஏற்றுக்கொண்ட குடியரசு தலைவார் திரௌபதி முர்மு ரமேஷ் பாசிஸை புதிய ஆளுநராக நியமித்துள்ளார். ஆந்திரா ஆளுநராக ஓய்வுபெற்ற நீதிபதி அப்துல் நசீர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மணிப்பூர் மாநில ஆளுநர் இல.கணேசன் நாகாலாந்துக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

ஆந்திர ஆளுநராக இருந்த ஹரிச்சந்தன் சத்தீஸ்கர் மாநிலத்துக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். ஜார்க்கண்ட் மாநில ஆளுநர் ரமேஷ் பயஸ், மகாராஷ்டிரா ஆளுநராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.  

சத்தீஸ்கர் ஆளுநர் சுஸ்ஸ்ரீ அனுசுயா மணிப்பூர் ஆளுநராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இமாச்சல் ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் பீகார் ஆளுநராக மாற்றப்பட்டுள்ளார்.  பீகார் மாநில ஆளுநர் சவுகான், மேகாலயா ஆளுநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இதேபோல் அருணாச்சல பிரதேச ஆளுநராக கைவல்யா திரிவிக்ரம் பர்நாயக், சிக்கிம் ஆளுநராக லக்ஷ்மண் பிரசாத் ஆச்சார்யா, ஜார்கண்ட் ஆளுநராக சிபி ராதாகிருஷ்ணன், அசாம் ஆளுநராக குலாப் சந்த் கட்டாரியா, ஹிமாச்சல பிரதேச ஆளுநராக சிவ பிரதாப் சுக்லா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

TELEGRAM: t.me/agnipuratchi1

* பாரம்பரியம், வளர்ச்சியில் நாடு புதிய உயரம்"

பாரம்பரியம், வளர்ச்சி ஆகிய இரண்டிலும் நாடு புதிய உயரங்களை எட்டியுள்ளது.

நாட்டில் பெண்களும் ரஃபேல் போர் விமானங்களில் பறக்கின்றனர்.

ஏழைகள் மற்றும் ஒதுக்கப்பட்டவர்களை மேம்படுத்துவதே அரசின் முதன்மையான நோக்கம்- டெல்லியில் மகரிஷி தயானந்த சரஸ்வதியின் 200வது பிறந்தநாள் விழாவில் பிரதமர் மோடி பேச்சு.

* 4 மாநில உயர்நீதிமன்றத்திற்கு தலைமை நீதிபதிகள் நியமனம்.

குஜராத், அசாம், திரிபுரா, ஜம்மு - காஷ்மீர் & லடாக் உயர்நீதிமன்றங்களுக்கு தலைமை நீதிபதிகள் நியமனம்.

குஜராத் - சோனியா கிரிதர் கோகனி, திரிபுரா - ஜஸ்வந்த் சிங், அசாம் - சந்தீப் மேத்தா, ஜம்மு - காஷ்மீர் & லடாக் - கோட்டீஸ்வர் சிங் நியமனம் - மத்திய சட்ட அமைச்சகம்.

* வாணியம்பாடி அருகே பட்டாசு கடையில் பயங்கர தீ விபத்து.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே பட்டாசுக் கடையில் தீ விபத்து சிறுவன் உட்பட 2 பேர் பலி, 3 பேர் மருத்துவமனையில் அனுமதி.

இறுதி ஊர்வலத்திற்காக பட்டாசு வாங்கிக் கொண்டிருந்த போது தீ விபத்தில் சிக்கி 5 வயது குழந்தை உட்பட இருவர் உயிரிழப்பு.

* ஜார்க்கண்ட் மாநில ஆளுநராகப் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள நண்பர் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துகள்.

அரசியலமைப்புச் சட்டத்தின்படி தனது கடமைகளை நிறைவேற்றி தமிழ்நாட்டுக்கு பெருமை சேர்த்திட விழைகிறேன்-முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

* ராஜஸ்தான்: டெல்லி - மும்பை இடையிலான விரைவுச் சாலையின் முதல் பகுதியை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

ரூ.12,150 கோடியில் அமைக்கப்படும் விரைவுச்சாலையில் 246 கி.மீ. தொலைவிலான முதல் பகுதி திறக்கப்பட்டுள்ளது.

புதிய சாலையால் டெல்லி - ஜெய்ப்பூருக்கு செல்லும் பயணம் நேரம் 3.5 மணி நேரமாக குறையும் என்று தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages