2023 -24ம் ஆண்டுக்கான மத்திய அரசு பட்ஜெட்டை - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். - Agnipuratchi

2023 -24ம் ஆண்டுக்கான மத்திய அரசு பட்ஜெட்டை - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.

Share This

2023 -24ம் ஆண்டுக்கான மத்திய அரசு பட்ஜெட்டை - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரை நேற்று (31.01.2023) குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரையாற்றித் தொடங்கி வைத்தார். இதையடுத்து 2022 -23ம் ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து இன்று (01.02.2023) நாடாளுமன்றத்தில் 2023 -24ம் ஆண்டுக்கான ஒன்றிய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அடுத்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளதால் பா.ஜ.க அரசு தாக்கல் செய்யும் கடைசி முழு பட்ஜெட் இதுவாகும். மேலும் ஐந்தாவது முறையாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்

நாடாளுமன்றத்தில் பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசிய ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், "இந்தியப் பொருளாதாரம் சரியான திசையில், வளமான எதிர்காலத்தை நோக்கிச் சென்று கொண்டிருப்பதாகத் தெரிவித்தார். உலக அளவில் வளர்ந்து வரும் பொருளாதாரத்தைக் கொண்ட நாடுகளில் முக்கிய இடத்தில் இந்தியா உள்ளதாகக் குறிப்பிட்ட அவர், நடப்பு நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி 7 சதவீதமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளதாகவும்" கூறினார்.

மேலும், சுதந்திரம் பெற்ற 75-ம் ஆண்டில், ஒளிரும் நட்சத்திரமாக இந்தியாவை உலகம் அங்கீகரித்துள்ளது. நமது பொருளாதார வளர்ச்சி விகிதம் 7% ஆக கணிக்கப்பட்டுள்ளது. உலக நாடுகளில் இது உயர்ந்த அளவாகும்.

கொரோனா பாதிப்பால் ஏற்பட்ட உலக பொருளாதார மந்தநிலை மற்றும் போர் போன்ற தடைகளுக்கு மத்தியில் இதனைச் சாதித்துள்ளோம். கடந்த 9 ஆண்டுகளில் உலகின் 10-வது பெரிய பொருளாதாரம் என்ற நிலையில் இருந்து 5-வது இடத்திற்கு முன்னேறி உள்ளோம் எனவும் அவர் தெரிவித்தார்.

TELEGRAM: t.me/agnipuratchi1

தொடர்ந்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் வாசித்து வரும் போது புதிய மின்சார வாகனம் குறித்து அறிவிப்பை வாசிக்கும்போது, Replacing old polluted vehicle மாற்றப்படும் என படிப்பதற்குப் பதிலாகத் தவறுதலாக Replacing old political vehicle என்று மாற்றிவாசித்தார்.

இதனால் அவையில் இருந்த பா.ஜ.க உறுப்பினர்கள் உட்பட அனைவரும் சிரித்து, அது political vehicle அல்ல polluted vehicle என கூறினர். தன் தவறை உணர்ந்த உடன் 'ஓ.. மன்னிக்கவும்' என கூறி மீண்டும் சரியாக அழுத்தி polluted vehicle என, பழைய மாசுபடுத்தும் வாகனங்களை மாற்றுவது நமது பொருளாதாரத்தைப் பசுமையாக்குவதில் ஒரு முக்கிய பகுதியாகும் என படித்து தொடர்ந்து பட்ஜெட் உரையை வாசித்தார். கிட்டத்தட்ட 1.26 மணி நேரம் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் உரையை வாசித்தார்.

* மத்திய பட்ஜெட் - நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உரை...

* முக்கிய அம்சங்கள்...

இந்திய பொருளாதாரம் சரியான பாதையில் செல்கிறது, ஒளிமையமான எதிர்காலத்தை நோக்கி பயணிக்கிறது

கோவிட் பெருந்தொற்றின் போது, ஒருவரும் பட்டினியுடன் தூங்கச் செல்லக்கூடாது என்பதற்காக, 28 மாதங்கள் சுமார் 80 கோடி பேருக்கு உணவு தானியங்கள் இலவசமாக வழங்கப்பட்டன

உணவு, தானியங்கள் வழங்கல் திட்டத்திற்கு ₹2 லட்சம் கோடி ஒதுக்கீடு

"நாட்டின் அடுத்த 100 ஆண்டுகளுக்கான புளூ பிரிண்ட்டாக இந்த பட்ஜெட் இருக்கும்"

9 ஆண்டுகளில் இந்தியாவில் பொருளாதாரம் உலக அளவில் 10ம் இடத்தில் இருந்து 5ம் இடத்திற்கு முன்னேறியுள்ளது. நாட்டின் வளர்ச்சி 7%-ஆக உள்ளது

உலகளாவிய சவால்கள் இருக்கும் இந்நேரத்தில், G20 தலைமையை இந்தியா ஏற்றது, உலக பொருளாதாரத்தில் இந்தியாவின் பங்கை வலுப்படுத்த ஒரு தனித்துவமான வாய்ப்பை வழங்குகிறது

2014 முதல் அரசின் முயற்சிகள் அனைத்து குடிமக்களுக்கும், சிறந்த வாழ்க்கைத் தரத்தை உறுதி செய்துள்ளது

தனிநபர் வருமானம் 2 மடங்காக அதிகரித்து ₹1.97 லட்சமாக உயர்ந்துள்ளது

102 கோடி பேருக்கு 220 கோடி கொரோனா டோஸ் தடுப்பூசி போட்டுள்ளோம்

9 ஆண்டுகளில் பொருளாதாரத்தில் 5-வது பெரிய நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது

நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 7% ஆக இருக்கும் என கணிப்பு

TELEGRAM: t.me/agnipuratchi1

11.4 கோடி விவசாயிகளுக்கு வங்கிகள் மூலம் நேரடியாக உதவி தொகை வழங்கப்பட்டுள்ளது

2023-ம் ஆண்டு மேலும் ஓராண்டுக்கு இலவசமாக உணவு தானியம் வழங்கப்படும்

சிறுதானியங்கள் உற்பத்தியில் இந்தியா உலகில் முதலிடம் வகிக்கிறது

"9.6 கோடி சமையல் எரிவாயு இணைப்புகள் உஜ்வாலா திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ளது

ஜம்மு & காஷ்மீர், லடாக் வளர்ச்சிக்கு பல்வேறு புதிய திட்டங்கள் அறிமுகம்"

மத்திய பட்ஜெட்: முக்கிய அம்சங்கள் - 1

47.8 கோடி ஜன்தன் வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன.

பிரதமரின் காப்பீட்டு திட்டத்தின்கீழ் 44.6 கோடி பேருக்கு காப்பீடு வழங்கப்பட்டுள்ளது

கிராமப்புறங்களில் வேளாண் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் தொடங்க ஊக்குவிப்பு

மீன்வளத்துறையை மேம்படுத்த ரூ6,000 கோடி

உஜ்வாலா திட்டத்தின்கீழ் 9.16 கோடி இலவச சமையல் எரிவாயு இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன

கால்நடை வளர்ப்பு, மீன் வளத்துறைக்கு ரூ20 லட்சம் கோடி ஒதுக்கீடு

தோட்டக்கலை துறைக்கு ₹2,200 கோடி நிதி ஒதுக்கீடு

தேசிய ஊரக வாழ்வாதார இயக்கம் மூலம் 1 லட்சம் சுய உதவிக்குழுக்களில் பெண்களை இணைத்து பெரும் வெற்றி கண்டுள்ளோம்

"விவசாயத்துறையில் புதிய ஸ்டார்ட் அப்கள் உருவாக்க ஊக்குவிக்கப்படும்

TELEGRAM: t.me/agnipuratchi1

வரும் நிதியாண்டில் 20 லட்சம் கோடி ரூபாய் விவசாய கடன் வழங்க இலக்கு

குழந்தைகள், இளைஞர்களுக்காக அனைத்து கிராமங்களிலும் நூலகங்கள் அமைக்கப்படும்

157 புதிய நர்சிங் கல்லூரிகள் உருவாக்கப்படும்

பசுமை எரிசக்தி
உற்பத்திக்கு தொடர்ந்து முன்னுரிமை

ஐசிஎம்ஆர் நிலையங்களை தனியாரும் பயன்படுத்தலாம்

740 ஏகலைவா பள்ளிகளுக்கு 38,000 ஆசிரியர்கள் நியமனம்

பிரதமர் வீட்டு வசதி திட்டத்துக்கு ரூ70,000 கோடி ஒதுக்கீடு

7 முக்கிய அம்சங்கள் இந்த பட்ஜெட்டில் உள்ளன - நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்

1. ஒருங்கிணைந்த வளர்ச்சி

2.  அனைவரையும் சென்றடைதல்

3. உள்கட்டமைப்பு முதலீடு

4. திறன் வெளிக்கொணர்தல்

5. பசுமை புரட்சி

6. இளைஞர் சக்தி

7. நிதித்துறை

9.6 கோடி சமையல் எரிவாயு கியாஸ் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன, 102 கோடி பேருக்கு 220 கோடி கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளன, 47.8 கோடி ஜன்தன் கணக்குகள் திறக்கப்பட்டுள்ளன

ரயில்வே துறைக்கான நிதி ஒதுக்கீடு - ₹2,04,000 கோடி

மாநிலங்களுக்கு வட்டியில்லா கடன் வழங்க ரூ1.3 லட்சம் கோடி ஒதுக்கீடு
  பழங்குடியினருக்கான ஏகலைவா பள்ளிகளில் 38,800 ஆசிரியர்கள் அடுத்த 3 ஆண்டுகளில் நியமிக்கப்படுவார்கள்

பிராந்தியங்களை இணைக்க 50 புதிய விமான நிலையங்கள்

கர்நாடகாவில் வறட்சி பாதித்த பகுதிகளில் ரூ5,300 கோடி ஒதுக்கீடு

கர்நாடகாவில் வறட்சி பாதிப்பு நிவாரணமாக ₹5,300 கோடி வழங்கப்படும்

ரயில்வே துறைக்கான நிதி ஒதுக்கீடு - ₹2,40,000 கோடி

50 ஆண்டுகளில் திருப்பிச் செலுத்தும் வகையிலான மாநிலங்களுக்கான வட்டியில்லா கடன் வழங்கப்படுவது மேலும் ஓராண்டு தொடரும்

"157 புதிய நர்சிங் கல்லூரிகள் நாடு முழுவதிலும் உள்ள முக்கிய மருத்துவ கல்லூரிகளில் அமைக்கப்படும்"

"நாடு முழுவதும் உள்ள கூட்டுறவு சங்கங்கள் குறித்த தரவு தளம் உருவாக்கப்படும்

கர்நாடகாவில் வறட்சி பாதித்த பகுதிகளுக்கு சிறிய நீர்பாசனங்களை ஊக்கப்படுத்தும் வகையில் பத்ரா மேலணை திட்டத்திற்கு ரூ5,300 கோடி ஒதுக்கீடு

பிரதமரின் வீட்டுவசதி திட்டத்திற்கு ₹79,000 கோடி ஒதுக்கீடு!

கட்டமைப்பு திட்டங்களுக்கு ₹10 லட்சம் கோடி ஒதுக்கீடு!

TELEGRAM: t.me/agnipuratchi1

பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட நிதிகள்

போக்குவரத்து துறைக்கு ₹78,000 கோடி ஒதுக்கீடு

மீன்வளத்துறைக்கு ₹6,000 கோடி ஒதுக்கீடு

பிரதரின் அவாஸ் யோஜனா திட்டத்திற்கு ₹79,000 கோடி ஒதுக்கீடு

பழங்குடியின மேம்பாட்டுக்கு ₹15,000 கோடி ஒதுக்கீடு

கர்நாடகாவுக்கு சிறப்பு நிதி ₹5,300 கோடி.

மாநிலங்களுக்கு வட்டியில்லா கடன் வழங்க ₹1.3 லட்சம் கோடி

மனித கழிவுகளை மனிதனே அகற்றுவதை ஒழிக்க புதிய இயந்திரங்கள் வாங்கப்படும்

"ரூ. 15,000 கோடி அடுத்த 3 ஆண்டுகளில் இலக்கு நிர்ணயித்து பழங்குடியினருக்கு திறன் மேம்படுத்தும் பயிற்சி வழங்கப்படும்"

இ-கோர்ட் திட்டத்தின் 3வது கட்டத்திற்கு ₹7000 கோடி ஒதுக்கீடு

கூடுதலாக 50 விமான நிலையங்கள், ஹெலிகாப்டர் தளங்கள் அமைக்கப்படும்

மீன்வளத்துறைக்கு 6000 கோடி

விவசாயத்துறை போலவே மீனவர்கள் பயன்பெற கூட்டுறவு மாடல் மீன்வளத்துறை திட்டங்களுக்கு 6000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என பட்ஜெட் உரையில் தெரிவித்தார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.

இதன்மூலம் மீன்வளத்துறைக்கு பல புதிய திட்டங்கள் கொண்டுவரப்படும் என்றார்.

பட்ஜெட்டில் அடிப்படை கட்டமைப்பு துறைக்கு மட்டும் 33% நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

அதன்படி, அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்த ₹10 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நகர்ப்புற கட்டமைப்புக்கு ₹10,000 கோடி, பிரதமரின் வீட்டு வசதி திட்டத்திற்கு ₹78,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. ரயில்வே துறைக்கு ₹2,04,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

3 கல்லூரிகளில் செயற்கை நுண்ணறிவு திறனாய்வு மையங்கள் அமைக்கப்படும்

மின்னணு நீதிமன்றங்கள் அமைக்க ரூ7,000 கோடி நிதி ஒதுக்கீடு

TELEGRAM: t.me/agnipuratchi1

"கடந்த 2013-14ம் ஆண்டை ஒப்பிடும்போது ரயில்வே துறைக்கு 9 மடங்கு அதிகமாக நிதி - ரூ. 2.4 லட்சம் கோடி ஒதுக்கீடு"

பிரதமரின் கவுசல் யோஜனா திட்டத்தின் கீழ் அடுத்த 3 ஆண்டுகளில் லட்சக்கணக்கான இளைஞர்கள் திறன்படுத்தப்படுவர்

பல்வேறு மாநிலங்களில் 30 சர்வதேச திறன் இந்தியா மையங்கள் அமைக்கப்படும்

ஆய்வகங்களில் தயாரிக்கப்பட்ட வைரங்களுக்காக, சுங்கவரி குறைக்கப்படும்

"இளைஞர்களின் திறனை வளர்க்க நாடு முழுவதும் 30 சர்வதேச தரத்தில் திறன் மேம்பாட்டு மையங்கள் அமைக்கப்படும்"

5ஜி சேவைகளுக்கான செயலிகளை உருவாக்க 100 ஆய்வகங்கள், பொறியியல் கல்வி நிறுவனங்களில் உருவாக்கப்படும்

மாசு ஏற்படுத்தும் பழைய வாகனங்களை புழக்கத்தில் இருந்து ஒழிக்க கூடுதல் நிதி

நகர்ப்புற வளர்ச்சி திட்டங்களுக்கு ₹10,000 கோடி ஒதுக்கீடு

போக்குவரத்து துறைக்கு ₹75,000 கோடி ஒதுக்கீடு

நாட்டின் முன்னணி கல்வி நிறுவனங்களில் 3 செயற்கை நுண்ணறிவு (AI) சென்டர்கள் நிறுவப்படும்

குறிப்பிட்ட அரசு நிறுவனங்களின் அனைத்து டிஜிட்டல் பணிகளுக்கும், பொதுவான அடையாள அட்டையாக PAN கார்டு பயன்படுத்தப்படும்

வங்கி செயல்முறையை மேலும் சிறப்பாக்க வங்கி முறைப்படுத்தும் சட்டத்தில் திருத்தங்கள் கொண்டுவர நடவடிக்கை

கூடுதலாக 50 விமான நிலையங்கள், ஹெலிகாப்டர் தளங்கள் அமைக்கப்படும் - பட்ஜெட்டில் அறிவிப்பு!

TELEGRAM: t.me/agnipuratchi1

தேக்னா அப்னா தேஸ் (உங்கள் நாட்டை பாருங்கள்) என்ற புதிய திட்டம் சுற்றுலாத்துறைக்காக கொண்டு வரப்படுகிறது.

நாடு முழுவதும் 50 முக்கிய இடங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு சுற்றுலாத்துறை என்பது மேம்படுத்தப்படும்.

ஒரு மாவட்டம் ஒரு தயாரிப்பு' (One District One Product) என்ற திட்டம் மூலம் பொருட்கள் மற்றும் புவியியல் குறியீட்டு பொருட்கள் தயாரிப்புகளை விளம்பரப்படுத்தவும், விற்பனை செய்யவும் மாநில அரசுகள் ஊக்குவிக்கப்படும்.

உள்நாட்டில் செல்போன் தயாரிப்புகளை ஊக்குவிக்கும் விதமாக, செல்போன் உதிரி பாகங்கள் இறக்குமதிக்கான சுங்கவரி குறைப்பு; 23 சதவீதத்திலிருந்து 13% வரை வரி குறைப்பு செய்யப்படுகிறது.

ரோபோடிக் ட்ரோன் கேமிராக்கள் பயன்பாடு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இளைஞர்களுக்கான திறன் மேம்பாடு வழங்கப்படும். தற்போது உள்ள திறன் மேம்பாடு பயிற்சியில் இந்த புதிய அமைப்புகளும் சேர்க்கப்படும்

சுற்றுலாத்துறைக்கு தனி செயலி

சுற்றுலாத்துறையை ஊக்குவிக்க தனி செயலி உருவாக்கப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து மாநிலங்களிலும் சுற்றுலாவை ஊக்குவிக்க சிறப்பு வணிக வளாகம் அமைக்கப்படும்.

அனைத்து பொருட்களும் கிடைக்கும் வகையில் நாடு முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் சிறப்பு வணிக வளாகம் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்திற்கான உச்சபட்ச வரம்பு ரூ.15 லட்சத்திலிருந்து ரூ.30 லட்சமாக உயர்வு

- நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

TELEGRAM: t.me/agnipuratchi1

செல்போன், டிவி விலை குறைகிறது

சைக்கிள், பொம்மைகளுக்கான இறக்குமதி வரி குறைக்கப்படுவதாக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

எலக்ட்ரிக் வாகன பேட்டரிக்கு பயன்படுத்தப்படும் லித்தியம் - அயன் மூலப் பொருட்களுக்கு வரி கிடையாது.

சில மொபைல் உதிரி பாகங்களுக்கு இறக்குமதி செய்வதற்கான சுங்க வரி குறைக்கப்படும்.

டிவி பேனல்களுக்கான சுங்க வரி 2.5%ஆக குறைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் டிவி, செல்போன், சைக்கிள் விலை குறையும்.

இனி பான் கார்டு பொது அடையாள அட்டை!

பான் கார்டை பொது அடையாள அட்டையாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் புதன்கிழமை அறிவித்தார்.

நாடாளுமன்றத்தில் 2023-24ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்து வருகிறார்.

அப்போது அவர் பேசுகையில்,
பான் கார்டு இனி பொது அடையாள அட்டையாக அறிவிக்கப்படுகிறது. ஆதார், பான், டிஜிலாக்கர் முறைகள், தனிநபர் பயன்பாட்டுக்காக பிரபலப்படுத்தப்படும் எனத் தெரிவித்தார்.

மேலும், வங்கிகளின் கேஒய்சி நடைமுறை எளிதாக்கப்படும் என அறிவித்துள்ளார்.

இதன்மூலம், நாடு முழுவதும் இனி பான் கார்டை அடையாள அட்டையாக பயன்படுத்த முடியும்.

அரசின் நிதி தொடர்பான அனைத்து செயல்பாடுகளுக்கும் பான் கார்டு பொது அடையாள அட்டையாக பயன்படுத்தப்படும்

- நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

TELEGRAM: t.me/agnipuratchi1

தனிநபர் வருமான வரி விலக்கிற்கான உச்சவரம்பு ₹7 லட்சமாக உயர்வு.

வருமான வரி உச்சவரம்பு ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.7 லட்சமாக அதிகரிப்பு

ஆண்டிற்கு ஏழு லட்சம் வரை தனிநபர் வருமானம் பெறுவருக்கு இனி வருமான வரி இல்லை.

தனிநபர் வருமானம் 2 மடங்காக அதிகரித்து ₹1.97 லட்சமாக உயர்ந்துள்ளது.

-பட்ஜெட்டில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் அறிவிப்பு

தங்கம், வெள்ளி மற்றும் வைரம் மீதான சுங்கவரி உயர்த்தப்பட்டது; தங்கம், வெள்ளி மற்றும் வைரம் விலை உயர்கிறது.

சிகரெட்களுக்கான வரி மற்றும் புகையிலை பொருட்களும் விலை உயர்கிறது. 16 சதவீதம் வரை வரி உயர்வு செய்யப்படுகிறது: நிதியமைச்சர் அறிவிப்பு

செல்போன், டிவி விலை குறைகிறது

சைக்கிள், பொம்மைகளுக்கான இறக்குமதி வரி குறைக்கப்படுவதாக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

எலக்ட்ரிக் வாகன பேட்டரிக்கு பயன்படுத்தப்படும் லித்தியம் - அயன் மூலப் பொருட்களுக்கு வரி கிடையாது.

சில மொபைல் உதிரி பாகங்களுக்கு இறக்குமதி செய்வதற்கான சுங்க வரி குறைக்கப்படும்.

டிவி பேனல்களுக்கான சுங்க வரி 2.5%ஆக குறைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் டிவி, செல்போன், சைக்கிள் விலை குறையும்.

🔴 வருமான வரி விதிப்பு முறையில் மாற்றம்

₹3 லட்சம் வரை - வரி இல்லை

₹3 முதல் ₹6 லட்சம் வரை - 5% வரி

₹6 முதல் ₹9 லட்சம் வரை - 10% வரி

₹9 முதல் ₹12 லட்சம் வரை - 15% வரி

₹12 முதல் ₹15 லட்சம் வரை - 20% வரி

₹15 லட்சத்துக்கு மேல் - 30% வரி

இதனால் வருமான வரி குறைய வாய்ப்பு உண்டு.

TELEGRAM: t.me/agnipuratchi1

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages