ரயில் டிக்கெட்டை எப்போது கேன்சல் எவ்வளவு பிடித்தம் செய்யப்படும்? - Agnipuratchi

ரயில் டிக்கெட்டை எப்போது கேன்சல் எவ்வளவு பிடித்தம் செய்யப்படும்?

Share This

ரயில் டிக்கெட்டை எப்போது கேன்சல் எவ்வளவு பிடித்தம் செய்யப்படும்?

திட்டமிட்டபடி ரயில் பயணம் மேற்கொள்ள முடியாத சூழல், இருக்கை ஒதுக்கப்படாத அல்லது உறுதியாகாத நிலையில் முன்பதிவு செய்து வைத்திருந்த ரயில் டிக்கெட்டை கேன்சல் செய்ய நேரிடுகிறது.
ஆனால், அப்படி கேன்சல் செய்யும்போது எவ்வளவு பணம் பிடித்தம் செய்யப்படுகிறது என்பது பலருக்கும் புரிவதில்லை.

இதனால் எப்போது கேன்சல் செய்தால் இழப்பு குறையும் என்பதும் தெரியவில்லை.
இது குறித்து நாம் இந்த பதிவில் தெரிந்துக்கொள்ளலாம்...

ஐஆர்டிசியில் முன்பதிவு செய்திருந்த டிக்கெட்டை கேன்சல் செய்யும்போது வரி மற்றும் சேவைகளுக்காக சிறிது கட்டணம் பிடித்தம் செய்யப்படுவது இயல்பானதே.

அதிலும் ஆப்கள் மூலம் முன்பதிவு செய்யப்பட்டு இருந்தால் அதற்கான அபராத தொகையும் வசூலிக்கப்பட்டு மீதி மட்டுமே வழங்கப்படுகிறது.

மேலும் டிக்கெட் கேன்சல் செய்தால் அதன் கட்டணம், நேரம், எந்த வகுப்பு ஆகியவை பொறுத்து கட்டணம் பிடித்தம் செய்யப்படுகிறது.

2 ஆம் வகுப்புக்கு 48 மணி நேரத்துக்கு முன்பே டிக்கெட்டை கேன்சல் செய்தால் ரூ. 60 பிடிக்கப்படும். ஏசி 2 டயர் அல்லது ஃப்ர்ஸ்ட் கிளாஸ் டிக்கெட்டுகளுக்கு ரூ. 200 கட்டணமும், ஏசி 3 டயர், ஏசி சேர் கேர், ஏசி 3 எக்னாமி ஆகிய வகுப்புகளுக்கு டிக்கெட் ரத்து கட்டணம் ரூ. 180 வசூலிக்கப்படும்.

கேன்சலேசனுக்காக அபராதக் கட்டணம் 48 மணிநேரம் முன்னதாக குறைவாக இருக்கும். 12 மணிநேரத்துக்கு மேலாக இருந்தால் பிடித்தத்தில் மாறுபாடு ஏற்படும்.

இந்த நேரத்தில் டிக்கெட் தொகையிலிருந்து சுமார் 25 சதவீதம் வரை அபராதமாக பிடித்தம் செய்யப்படுகிறது.

அதுவே 12 மணி நேரத்துக்கு குறைவாக மற்றும் 4 மணி நேரத்துக்கு அதிகமான நேரத்தில் டிக்கெட்டை ரத்து செய்தால் 50 சதவீதம் வரை அபராதமாக வசூலிக்கப்படும். இது அனைத்து வகுப்பு டிக்கெட்டுகளுக்கும் பொருந்தும்.

ரயில் புறப்படுவதற்கு 4 மணி நேரத்துக்குள் டிக்கெட்டை கேன்சல் செய்தால் ரீஃபண்ட் எதுவும் கிடையாது என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

வெயிட்டிங் லிஸ்டில் உள்ள பயணிகளின் டிக்கெட்டுகளை கேன்சல் செய்தால் அபராதக் கட்டணம் வசூலிக்கப்படாது, முழுமையான தொகையைத் திரும்பப் பெறலாம்.

TELEGRAM: t.me/agnipuratchi1

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages