எதிர்க்கட்சிகளின் அவதூறுகள் எங்களை எதுவும் செய்யாது" மக்களின் நம்பிக்கையே பாதுகாப்பு கவசம்: பிரதமர் மோடி பரபரப்பு பேச்சு - Agnipuratchi

எதிர்க்கட்சிகளின் அவதூறுகள் எங்களை எதுவும் செய்யாது" மக்களின் நம்பிக்கையே பாதுகாப்பு கவசம்: பிரதமர் மோடி பரபரப்பு பேச்சு

Share This

எதிர்க்கட்சிகளின் அவதூறுகள் எங்களை எதுவும் செய்யாது"
மக்களின் நம்பிக்கையே பாதுகாப்பு கவசம்: பிரதமர் மோடி பரபரப்பு பேச்சு

மக்களவையில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு பதிலளித்து பேசிய பிரதமர் மோடி, ‘‘மக்கள் என்மீது வைத்துள்ள நம்பிக்கையே என்னை பாதுகாக்கும் கவசம். அதை எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளால் உடைக்க முடியாது’’ என்றார்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் எதிர்க்கட்சிகள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்து பிரதமர் மோடி நேற்று தனது உரையில் கூறியதாவது:

நூறு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கான கொடூரமான தொற்று நோய் மற்றும் மோதல்களால் உலகின் சில பகுதிகள் ஸ்திரமற்று இருக்கும் இந்த சூழலில், இந்தியாவை உலகம் நம்பிக்கையுடன் பார்க்கிறது. ஆனால், விரக்தியில் முழுவதும் மூழ்கிப் போன சிலர் இந்தியாவின் வளர்ச்சியை ஏற்க மறுக்கிறார்கள். அவர்களால் 140 கோடி இந்தியர்களின் சாதனைகளைப் பார்க்க முடியாது. நெருக்கடியான காலத்தில் மோடி தங்களுக்கு உதவ முன்வந்தார் என்பதை நாட்டு மக்கள் அறிந்துள்ளனர். அப்படியிருக்கையில், உங்கள் அவதூறுகளையும், குற்றச்சாட்டுகளையும் அவர்கள் எப்படி ஏற்றுக் கொள்வார்கள்?

என் மீது மக்கள் கொண்டிருக்கும் நம்பிக்கை ஏதோ செய்தித்தாள் தலைப்புச் செய்திகள், தொலைக்காட்சி செய்திகள் மூலம் வந்ததில்லை, மக்கள் சேவையில் பல ஆண்டுகளாக அர்ப்பணிப்புடன் நான் இருந்ததன் காரணத்தால் வந்தது. நான் 140 கோடி இந்தியர்களின் நம்பிக்கையை பாதுகாப்பு கவசமாக அணிந்துள்ளேன். அதை எதிர்க்கட்சிகளின் பொய்களால் உடைக்க முடியாது.

எதிர்க்கட்சிகள் ஆக்கப்பூர்வமான விமர்சனங்களை ஈடுபடுவதற்கு பதிலாக ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைப்பதில் கடந்த 9 ஆண்டுகளை வீணடித்து விட்டனர். தேர்தலில் தோல்வி அடையும் போது, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை குறை கூறுகின்றனர். தேர்தல் ஆணையத்தை விமர்சிக்கின்றனர். சாதகமான தீர்ப்பு தரவில்லை என்றால், உச்சநீதிமன்றத்தை விமர்சிக்கின்றனர். இப்படி 9 ஆண்டுகள் அனைத்தையும் எதிர்க்கும் கட்டாய விமர்சனத்தையே முன்வைத்துள்ளனர்.

TELEGRAM: t.me/agnipuratchi1

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் 10 ஆண்டுகள் இந்தியாவின் இழந்த சகாப்தமாகத்தான் நினைவு கூறப்படுகிறது. 2014க்கு பிறகை விட, 2004-14க்கு இடையில், பணவீக்கம் அதிகமாக இருந்தது.

சுதந்திரத்திற்குப் பின், அந்த பத்தாண்டுகள் மிகவும் ஊழல் நிறைந்தவை. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை, நாடு முழுவதும் தீவிரவாதத்தின் பிடியில் இருந்தது. ஜம்மு காஷ்மீர் முதல் வடகிழக்கு வரை, ஒட்டுமொத்த பிராந்தியமும் வன்முறையைத் தவிர வேறெதையும் காணவில்லை, அந்த 10 ஆண்டுகளில், உலக அரங்கில் இந்தியா மிகவும் பலவீனமாக இருந்தது, இந்தியாவின் பேச்சைக் கேட்க யாரும் தயாராக இல்லை. ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ஒவ்வொரு வாய்ப்பையும் நெருக்கடியாக மாற்றியது.

2008ல் நடந்த தாக்குதல்களை யாரும் மறக்க முடியாது. தீவிரவாதத்திற்கு எதிராக செயல்படும் தைரியம் இல்லாததால் ரத்தக்களரி மற்றும் அப்பாவி மக்களின் உயிர்கள் பறிக்கப்பட்டது. இது ஐமு கூட்டணி அரசின் தவறான ஆட்சிக்கு சான்று. ஆனால், 2030ம் ஆண்டு வரை இந்தியாவின் தசாப்தமாகும்.

இந்தியா ஒரு உற்பத்தி மையமாக வளர்ந்து வருகிறது. நாட்டின் வளர்ச்சியில் உலகமே தனது செழிப்பை காண்கிறது. ஜனாதிபதி திரவுபதி முர்மு நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரை அனைவருக்கும் உத்வேகம் அளிப்பதாக இருந்தது. இவ்வாறு பிரதமர் மோடி பதிலளித்தார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages