12-ஆம் வகுப்பு கணிதப்பாடத்தில்  சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்திலிருந்து வினாக்கள்: மாணவர்களுக்கு கூடுதல் மதிப்பெண்கள் வழங்கப்பட வேண்டும். பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு அய்யா வலியுறுத்தல். - Agnipuratchi

12-ஆம் வகுப்பு கணிதப்பாடத்தில்  சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்திலிருந்து வினாக்கள்: மாணவர்களுக்கு கூடுதல் மதிப்பெண்கள் வழங்கப்பட வேண்டும். பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு அய்யா வலியுறுத்தல்.

Share This

12-ஆம் வகுப்பு கணிதப்பாடத்தில்  சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்திலிருந்து வினாக்கள்: மாணவர்களுக்கு
கூடுதல் மதிப்பெண்கள் வழங்கப்பட வேண்டும். பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு அய்யா வலியுறுத்தல்.

1. தமிழ்நாட்டில் நேற்று நடைபெற்ற மாநிலப் பாடத்திட்டத்தின்படியான 12-ஆம் வகுப்பு கணிதப்பாடத் தேர்வில்  கடினமான வினாக்கள் கேட்கப்பட்டிருப்பதாக மாணவர்கள்  தரப்பில் கூறப்படுகிறது. இந்தக் குற்றச்சாட்டை கணித ஆசிரியர்களும் உறுதி செய்திருக்கின்றனர்!

2. கணிதப்பாடத் தேர்வில் குறைந்தது 3 வினாக்கள் மத்திய இடைநிலை கல்வி வாரிய பாடத்திட்டத்திலிருந்து (சி.பி.எஸ்.இ) கேட்கப்பட்டுள்ளன. மாநிலப் பாடத்திட்ட நூல்களை மட்டும் படித்து தேர்வு எழுதிய மாணவர்களால் முழு மதிப்பெண்களை  எடுக்க முடியாது என்று கூறப்படுகிறது. இது நியாயமல்ல!

3. கணிதத்தில் 100% மதிப்பெண் பெறுவது தான் மாணவர்களின் இலக்கு. ஆனால், சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தையும் படித்தால் தான் 100% மதிப்பெண் எடுக்க முடியும் என்பது அறமல்ல. வினாத்தாள் தயாரிப்புக் குழுவினர்  அவர்களின் திறமையை காட்டுவதற்காக மாணவர்களின் எதிர்காலத்தை சீர்குலைக்கக்கூடாது!

4. 12-ஆம் வகுப்பு கணிதத் தேர்வில் பாடத்திட்டத்திற்கு வெளியிலிருந்து வினாக்கள் கேட்கப்பட்டது குறித்து தமிழக அரசின் தேர்வுத்துறை விசாரணை நடத்த வேண்டும். மாணவர்கள் பாதிக்கப்படுவதைத் தடுக்க அவர்களுக்கு உரிய அளவில்  கூடுதல் மதிப்பெண்கள்  வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்!

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages