ஈரோடு இடைத்தேர்தல் படுதோல்வியடைந்த அ.தி.மு.க., பரிதாபத்தில் தே.மு.தி.க., ஆதிக்கம் காட்டிய தி.மு.க.! முழுமையான இடைத்தேர்தல் முடிவுகள்... - Agnipuratchi

ஈரோடு இடைத்தேர்தல் படுதோல்வியடைந்த அ.தி.மு.க., பரிதாபத்தில் தே.மு.தி.க., ஆதிக்கம் காட்டிய தி.மு.க.! முழுமையான இடைத்தேர்தல் முடிவுகள்...

Share This

ஈரோடு இடைத்தேர்தல் படுதோல்வியடைந்த அ.தி.மு.க.,  பரிதாபத்தில் தே.மு.தி.க., ஆதிக்கம் காட்டிய தி.மு.க.! முழுமையான இடைத்தேர்தல் முடிவுகள்...

TELEGRAM: t.me/agnipuratchi1

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு கடந்த 27ம் தேதி நடைபெற்றது.

இடைத்தேர்தலில் 82 ஆயிரத்து 138 ஆண்கள், 88 ஆயிரத்து 37 பெண்கள், மூன்றாம் பாலினத்தவர் 17 பேர் என மொத்தம் 1 லட்சத்து 70 ஆயிரத்து 192 பேர் வாக்களித்தனர். 398 தபால் வாக்குகள் பதிவாகின.

இந்த தேர்தலில் பதிவான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்குத் தொடங்கி தற்போது முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

வாக்கு எண்ணிக்கை முடிவுகளின் படி 1,10,156 வாக்குகள் பெற்று தி.மு.க கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அமோக வெற்றி பெற்றுள்ளார்.

இவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் 43,923 வாக்குகள் மட்டுமே பெற்று படுதோல்வியடைந்துள்ளார். வித்தியாசம் 66,233 வாக்குகள். நோட்டாவுக்கு 798 வாக்குகள் கிடைத்துள்ளன.

அதேபோன்று நாம் தமிழகர் கட்சி 10,827 வாக்குகளும், தே.மு.தி.க 1432 வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளன. மேலும் காங்கிரஸ், அ.தி.மு.கவைத் தவிர மற்ற 75 வேட்பாளர்களும் டெபாசிட்டை இழந்துள்ளனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages