என்.எல்.சிக்கு எதிராக கிராம சபைகளில் தீர்மானம்: மக்களின் உணர்வுகளை மதித்து நிலப்பறிப்பை தமிழக அரசு கைவிட வேண்டும் - பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தல் - Agnipuratchi

என்.எல்.சிக்கு எதிராக கிராம சபைகளில் தீர்மானம்: மக்களின் உணர்வுகளை மதித்து நிலப்பறிப்பை தமிழக அரசு கைவிட வேண்டும் - பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தல்

Share This

என்.எல்.சிக்கு எதிராக கிராம சபைகளில் தீர்மானம்: மக்களின் உணர்வுகளை மதித்து நிலப்பறிப்பை தமிழக அரசு கைவிட வேண்டும் - பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தல்

1. கடலூர் மாவட்டத்தில் இன்று நடைபெற்ற கிராம சபைக் கூட்டங்களில், பெரும்பான்மையான இடங்களில் என்.எல்.சி சுரங்க விரிவாக்கத்திற்காக நிலம் பறிப்பதை கைவிட வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்படுள்ளன. கடலூர் மாவட்ட மக்களின்  வலிகள் தான் தீர்மானத்தின் வரிகளாக வந்திருக்கின்றன!

2. உலக தண்ணீர் நாளான இன்று நடத்தப்பட்ட கிராமசபைக் கூட்டங்களின் கருப்பொருளே நீர்வளங்களைக் காக்க வேண்டும் என்பது தான். நீர்வளங்களை அழித்து வரும் என்.எல்.சிக்கு  எதிராக இன்றைய கிராமசபைக் கூட்டங்களில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருப்பது மிகவும் பொருத்தமானது; சரியானது!

3. இந்திய ஜனநாயகத்தின் வலிமையான அடையாளம் கிராமசபைகள் தான். நாடாளுமன்றத் தீர்மானத்திற்கும், சட்டப்பேரவைத் தீர்மானத்திற்கும் என்ன வலிமை உண்டோ, அதே வலிமை கிராமசபைகளுக்கும் உண்டு. இதை கடந்த காலங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களே கூறியிருக்கிறார்!

4.  கிராமசபை தீர்மானம் மூலம் மக்கள் வெளிப்படுத்தியிருக்கும் உணர்வுகளை தமிழக அரசு மதிக்க வேண்டும். என்.எல்.சி சுரங்க விரிவாக்கத்தை அனுமதிக்க முடியாது; அதற்காக நிலம் கையகப்படுத்தி தர மாட்டோம் என்பதை கொள்கை முடிவாக தமிழ்நாடு முதலமைச்சர் அறிவிக்க வேண்டும்!

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages