திருநெல்வேலி நடைபெற்ற அக்னிப்புரட்சி இதழின் ஆலோசனைக் கூட்டம்.
அக்னிப்புரட்சி இதழ் பத்தாம் ஆண்டை முன்னிட்டு விருது வழங்கும் விழா சம்பந்தமாக. 12.04.2023 புதன் கிழமை அன்று திருநெல்வேலி புதிய பேருந்து நிலையம் எதிரே உள்ள ஹோட்டல் லாரா பாரடைஸ் யில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது முதல் முறையாக அக்னிப்புரட்சி சார்பில் 50 பேருக்கு விருது வழங்கப்பட உள்ளது. இந்த ஆலோசனை கூட்டம் அக்னிப்புரட்சி ஆசிரியர் த.நாராயணசாமி முன்னிலையில், துணை ஆசிரியர் நெல்லை மூ.மகாராஜன் தலைமையில் நடைபெறுகிறது. இந்த ஆலோசனை கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக பாமக மாநில பொதுச் செயலாளர் திரு வடிவேல் இராவணன் மற்றும் தென்காசி மாவட்ட செயலாளர் இசக்கி முத்து காலந்து கொண்டார். விருது பெறும் 50 பேரை தேர்வு செய்வதற்காக 11 பேர் கொண்ட குழுவை தேர்வு செய்யப்பட்டனர். அதன்படி தலைவராக ஆசிரியர் த.நாராயணசாமி, செயலாளராக துணை ஆசிரியர் நெல்லை மூ.மகாராஜன், பொருளாளராக ஆடிட்டர் எம்.பிரசாந்த், துணைத் தலைவராக சு.செல்வகுமார், துணை செயலாளராக ஆற்காடு ம.செல்வம், செயற்குழு உறுப்பினராக தலைமைச் செய்தியாளர் D.B.நந்தகுமார், கம்பம் மாவட்ட செய்தியாளர் தமிழ் இராவணன், சேலம் மாவட்ட செய்தியாளர் டி.எஸ்.லட்சுமணன், திருப்பூர் மாவட்ட செய்தியாளர் ஆர்.பூவரசன், நாமக்கல் மாவட்ட செய்தியாளர் பாரத், அக்னிப்புரட்சி விளம்பர விற்பனை மேலாளர் பி.லட்சுமணன், உள்ளிட்ட 11 பேர் தேர்வு செய்யப்பட்டனர். மேலும் இந்த விருது எந்தெந்த துறைக்கு விருது வழங்கலாம் என்றும், விருது வழங்கும் விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக யார் யாரை அழைப்பது என்றும், மேலும் விருது விழாவிற்கான தேதியை 11 பேர் கொண்ட குழு முடிவு செய்து பின்னர் அறிவிக்கப்படும் என்றும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு தென்காசி மாவட்ட செய்தியாளர் சதீஷ், ராசிபுரம் செய்தியாளர் பூபாலன், அம்பாசமுத்திரம் செய்தியாளர் மாரி சிதம்பரம் கணேசன், உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர் இறுதியாக அனைவருக்கும் மதிய உணவு அளிக்கப்பட்டு திருநெல்வேலி இருட்டுக்கடை அல்வா அனைவருக்கும் வழங்கப்பட்டது.
No comments:
Post a Comment