தலைநகர் டெல்லியில் அதிநவீன வசதிகளுடன் சுமார் ரூ.1000 கோடி செலவில் புதிய பாராளு மன்ற கட்டிடம் கட்டப் பட்டுள்ளது. - Agnipuratchi

தலைநகர் டெல்லியில் அதிநவீன வசதிகளுடன் சுமார் ரூ.1000 கோடி செலவில் புதிய பாராளு மன்ற கட்டிடம் கட்டப் பட்டுள்ளது.

Share This

தலைநகர் டெல்லியில் அதிநவீன வசதிகளுடன் சுமார் ரூ.1000 கோடி செலவில் புதிய பாராளு மன்ற கட்டிடம் கட்டப் பட்டுள்ளது.

இந்த கட்டிடத்தின் திறப்பு விழா வருகிற 28-ந்தேதி (ஞாயிற்றுக் கிழமை) நடைபெற உள்ளது. புதிய பாராளுமன்ற கட்டி டத்தை பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளார்.

19 கட்சிகள் புறக்கணிப்பு

பாராளுமன்ற கட்டி டத்தை ஜனாதிபதிதான் திறந்து வைக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. பிரதமர் மோடி திறப்பதற்கு எதிர்ப்பு தெரி வித்து புதிய பாராளுமன்ற திறப்பு விழாவை புறக்க ணிக்கப் போவதாக காங்கி ரஸ், தி.மு.க. உள்ளிட்ட 19 எதிர்க்கட்சிகள் அறிவித்து உள்ளன.

என்றாலும் புதிய பாராளுமன்ற கட்டிடத்தை திட்டமிட்டபடி ஞாயிற்றுக் கிழமை திறப்பதற்கு மத்திய அரசு ஏற்பாடு செய்து வருகிறது. இது தொடர்பாக மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா நேற்று நிருபர்க ளுக்கு பேட்டியளித்த போது விரிவான தகவல்களை வெளியிட்டார்.

தமிழக செங்கோல்

அமித்ஷா கூறுகையில், “1947-ம் ஆண்டு இந்தியா வுக்கு சுதந்திரம் கிடைத்த போது ஆங்கிலேயர்களிடம் இருந்து இந்தியாவுக்கு அதி கார பரிமாற்றம் நடந்ததை குறிப்பிடும் வகையில் பிரதமர் நேருவிடம் தமிழக செங்கோல் வழங்கப்பட்டது. அந்த செங்கோல் புதிய பாராளுமன்ற கட்டிடத்தில் நிறுவப்படும்” என்று தெரி வித்தார்.

புதிய பாராளுமன்றத்தில் இந்தியாவின் விடுதலை சின்னமாக தமிழக செங் கோலை பிரதமர் மோடி நிறுவுவார். அந்த செங்கோல் பாராளுமன்ற சபாநாயகர் இருக்கை அருகே வைக் கப்படும் என்றும் அமித்ஷா விளக்கம் அளித்தார்.

தமிழக கலாசாரப்படி

மத்திய அரசின் இந்த அறிவிப்பு மூலம் தமிழக செங்கோல் பற்றிய தக வல்களை அறிந்து கொள்ளும் ஆர்வம் நாடு முழுவதும் ஏற்பட்டுள்ளது. தற்போது அந்த தமிழக செங்கோல் அலகாபாத் நேரு அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது. அந்த செங்கோலை புதுப்பித்து டெல்லிக்கு கொண்டு வர உள்ளனர்.

அந்த செங்கோலை பிரதமர் மோடி பாராளுமன் றத்தில் நிறுவும் வைபவம் மிகவும் கோலாகலமாக நடத்தப்பட உள்ளது. 1947-ம் ஆண்டு இந்தியா சுதந்திரத்தின் அடையாள மாக நேருவிடம் அந்த செங்கோல் எத்தகைய நிகழ்ச்சிகளுடன் வழங்கப் பட்டதோ அதே போன்ற நிகழ்ச்சிகளுடன் வருகிற 28-ந்தேதியும் விழாவை நடத்த மத்திய அரசு அதி காரிகள் தீவிர ஏற்பாடுகள் செய்து வருகிறார்கள்.

குறிப்பாக தமிழக செங் கோலை நிறுவும் நிகழ்ச்சியை முழுக்க முழுக்க தமிழக கலாசார பண்பாட்டை பிரதிபலிக்கும் வகையில் நடத்து வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சோழ மன்னர்களின் ஆட்சி காலத்தில் ஆட்சி அதிகாரம் மாற்றங்கள் செங்கோல் வழங்கப்படுவதன் மூலமே உறுதிப்படுத்தப்பட்டது. தமிழக மூதாதையர்களின் அந்த பாரம்பரிய சிறப்பை பாராளுமன்றத்தில் நவீன முறையில் பிரதமர் மோடி நிகழ்த்த இருப்பது குறிப்பிடத்தக்கது.

கோளறு பதிகம் பாடப்படும்

28-ந்தேதி காலை பாராளு மன்றத்தில் தமிழக செங்கோல் நிறுவப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. முன்னதாக அலகா பாத் மியூசியத்தில் இருந்து எடுத்து வரப்படும் அந்த செங்கோல் கங்கை நீரால் சுத்தப்படுத்தப்படும். பிறகு அதை தமிழகத்தின் 20 ஆதீனங்கள் புடைசூழ பாராளுமன்ற சபாநாயகர் இருக்கை பகுதிக்கு எடுத்து செல்வார்கள்.

அப்போது தமிழர்களின் கலாசார சிறப்பை கொண்ட மேளதாளங்கள் இசைக்கப் படும். அந்த மேளதாளங்கள் முழங்க பிரதமர் மோடியும் அழைத்துச் செல்லப்படு வார். நிகழ்ச்சி நடக்கும் இடம் அருகே வந்ததும் அந்த செங்கோல் பிரதமர் மோடியிடம் வழங்கப்படும்.

இதையடுத்து கோளறு பதிகத்தில் இடம் பெற்றுள்ள “அடியார்கள் வானில் அரசாள்வர் ஆணை நமதே” என்ற பாடல் வரிகள் பாடப்படும். அந்த சமயத்தில் தமிழக செங்கோலை புதிய பாராளுமன்றத்தில் பிரதமர் மோடி நிறுவுவார்.

அப்போது ஓதுவார்கள் தொடர்ந்து கோளறு பதிகம் பாடிக் கொண்டே இருப் பார்கள். நாதசுவரமும் இசைக்கப்படும். இதன் மூலம் இந்திய ஜனநாயக வர லாற்றில் புதிய அத்தியா யத்தை பிரதமர் மோடி தொடங்கி வைப்பதாக கருதப்படுகிறது.

JOIN US: https://t.me/agnipuratchi1

கவர்னர் மாளிகை

புதிய பாராளுமன்றத்தில் தமிழக செங்கோல் நிறுவப் படுவது தொடர்பாக சென்னை கவர்னர் மாளிகையில் கவர்னர்கள் ஆர்.என்.ரவி, தமிழிசை சவுந்தரராஜன், இல. கணேசன், மத்திய மந்திரிகள் நிர்மலா சீதாராமன், எல்.முருகன், அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆகியோர் பங்கேற்ற கூட்டம் நடந்தது. அப்போது மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.அவர் கூறியதாவது:-
மக்கள் ஆளுமை

பாராளுமன்ற புதிய கட்டிடத்தை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் போது 1947-ல் நடந்த ஒரு முக்கிய மான சம்பவம். ஆங்கிலே யர்கள் ஆட்சி முடிந்து அவர்கள் கையில் இருந்து நமது மக்கள் கையில் ஆளுமை கிடைத்தபோது, அந்த ஆளுமையை, பரி மாற்றத்தை எப்படி செய்கி றார்கள் என்பதை எடுத்துக் காட்டக்கூடிய ஒரு நிகழ்ச்சி.

அதை நாட்டின் முதல் பிரதமராக இருந்த ஜவகர் லால் நேருவே அதில் பங்கேற்று அந்த பரிமாற் றத்துக்கு முக்கியத்துவம் கொடுத்துஅந்த பரிமாற்றம் நடந்திருக்கிறது. செங்கோல் தான் அந்த பரிமாற்றம். அது நடந்த சமயம் இரவு 10.30 மணி முதல் 12 மணிக் குள்ளாக நடந்த விஷயம். அந்த பரிமாறுதல் அப்போது தான் நடந்திருக்கிறது.

செங்கோல் பரிமாறுதல்

நாம் கொண்டாடக்கூடிய சுதந்திரம், அந்த பரிமாற்றத் தால் கிடைத்தது. அந்த சுதந்திரத்தை நாம் கொண்டாடுகிறோம். ஆளுமை பரிமாறுதல் பூர்வீகத்தில் எப்படி நடந்தது என்பதை தேடி கண்டு பிடித்து இன்று வரை செய்கி றார்கள்.

நாம் எந்த ஆங்கிலேயர்க ளிடம் இருந்து சுதந்திரம் அடைந்தோமோ அந்த ஆங்கிலேயர்கள் கூட இன்று அவர்களின் நாட்டில் 1670-ம் ஆண்டு வாக்கில் நடந்த அதே பாணியில் இன்றும் அங்கு அரசு பரி மாறுதல் நடக்கிறது. சுதந்தி ரம் என்பது செங்கோல் பரிமாற்றத்தால் கிடைத்தது.

தமிழ்நாட்டுக்கு பெருமை

இந்த பரிமாறுதல் நிகழ்ச்சியில் தமிழ்நாட்டுக்கு மிகப்பெருமையான பங்கு இருக்கிறது. ஆங்கிலேயர்கள் ஆட்சியை மாற்றும் போது இதை எப்படி செய்ய வேண்டும் என்று கேட்டு இருக்கிறார்கள்.

இந்தியாவில் எப்படி செய்தால் ஏற்புடையதாக இருக்கும் என்று கேட்டனர். அந்த ஏற்புடையது என்ன என்பதை விவரிக்க அப்போதைய பிரதமர் நேரு, ராஜாஜியிடம் கலந்து ஆலோசனை செய்தார். ராஜாஜி பின்னர் ஆதீனங் களை கலந்தாலோசனை செய்து திருவாவடுதுறை ஆதீனத்தின் மூலமாக அது தரும தண்டம் எனப்படும் செங்கோல் என கூறப்பட்டது.
அழகாக

அந்த செங்கோலை அன்றைக்கு உற்பத்தி செய்ய வில்லை. தமிழ்நாட்டின் பாரம்பரியம், கலாச்சா ரத்தில் இருக்கக் கூடிய ஒரு விஷயத்தை அழகாக எடுத்து சொல்லி அதை இன்னும் நமது நல்ல காலமாக அதை தயார் செய்த உம்மிடி ஜூவல்லர்ஸ் பெரியவர்கள் இருவரும் இன்றும் இருக்கிறார்கள். அவர்களும் இந்த நிகழ்ச்சி பற்றி பேச தயாராக இருக்கி றார்கள்.

புதிய கட்டிடத்தை நிர்மாணம் செய்த தொழிலா ளர்களையும், செங்கோலை செய்து கொடுத்த உம்மிடி பெரியவர்களையும், பிரதமர் நரேந்திர மோடி 28-ந்தேதி பாராளுமன்றத் தில் கவுரவிப்பார்.

அனைவருக்குமான ஆட்சி

புதிய பாராளுமன்ற மக்களவையில் சபாநாயகருக்கு அருகே செங்கோல் நிறுவப்பட உள்ளது. ஒரு தலைபட்சமாக இல்லாமல் அனைவருக்குமான ஆட்சி யாக நடத்த செங்கோல் உறுதுணையாக இருக்கும். பாராளுமன்ற கட்டிட திறப்பு விழாவில் பங்கேற்க தருமபுர, திருவாவடுதுறை உள்ளிட்ட 20 ஆதீனங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. நாடு சுதந்திரம் பெற்றதை செங்கோல் குறிக்கிறது.

ஆட்சி பரிமாற்றத்தை குறிக்க செங்கோல் பரிமாற்றம் செய்யும் முறை இன்னும் பல நாடுகளில் அமலில் உள்ளது.

பங்கேற்க வேண்டும்

புதிய பாராளுமன்றத்தில் செங்கோல் நிறுவப்படுவது தமிழ்நாட்டிற்கு பெருமை. செங்கோல் நிறுவப்படுவதில் அரசியல் செய்ய எதுவும் இல்லை. அடுத்த 100 வருடத் திற்கு நாட்டின் சின்னமாக செங்கோல் இருக்கப் போகிறது. மக்களுக்காக வாவது பாராளுமன்ற கட்டிட திறப்பு விழாவில் எதிர்க்கட்சிகள் கலந்து கொள்ள வேண்டும்.

ஜனாதிபதி பதவியை மிகவும் உயர்வாக கருதுகி றோம். அது ரப்பர் ஸ்டாம்ப் பதவி அல்ல. ஜனநாயகத்தின் கோவிலான பாராளுமன்ற கட்டிடத்தை திறக்கும் நிகழ்ச்சியில் எதிர்க்கட்சிகள் உள்பட அனைவரும் பங் கேற்க வேண்டும். பிரதமரை பிடிக்கவில்லை என்றாலும் பாராளுமன்றத்துக்கு உரிய மரியாதையை கொடுக்க வேண்டும்.

செங்கோல் என்பது தமிழகத்துக்கு கவுரவமான, மிகப்பெரிய கவுரவம். புதிய பாராளுமன்ற திறப்பு விழாவை எதிர்க்கட்சிகள் புறக்கணிக்க கூடாது. முன்பு ஜனாதிபதியை விமர்சித்த வர்கள்தான் தற்போது அவரை கொண்டு விழாவை நடத்த வேண்டும் என்கின்றனர்.
திருக்குறளில்

சைவ மதத்தை சார்ந்து செங்கோல் வைக்கப்பட வில்லை. திருக்குறளில் செங்கோல் பற்றிய குறிப்பு உள்ளது. இந்தியா சுதந்திரம் அடைந்த போது நிகழ்ந்த ஆட்சி பரிமாற்றத்தை மறு உருவாக்கம் செய்கிறோம்.

எந்தவித மத அடையாள மும் இல்லாமல் மரபு ரீதி யாக செங்கோல் வைக்கப் படுகிறது.

நேரு பிரதமராக இருந்த போது அவரிடம் வழங்கப்பட்ட செங்கோல் பாராளுமன்றத்தில் வைக் கப்படவில்லை. அது அருங்காட்சியகத்தில் வைக் கப்பட்டுள்ளது. ஆனால் அந்த செங்கோலுக்கு உள்ள பெருமையை உணர்த்தும் வகையில் பிரதமர் மோடி பாராளுமன்றத்தில் வைக்கிறார்.

மதுரைக்கே அரசியாக விளங்கும் மீனாட்சி அம்மன் கையில் கூட செங்கோல்தான் உள்ளது. திருவிழா நேரங்களில் செங்கோலுடன் தான் மீனாட்சி அம்மன் காட்சி அளிப்பார். மதுரை எனது பிறந்த மண் என்பதால் இதை சொல்கிறேன்.

புதிய பாராளுமன்றத்தை ஜனாதிபதியை வைத்து திறக்கவில்லை என்று விவாதம் எழுகிறது. சமீபத்தில் சத்தீஷ்கரில் புதிய தலைமை செயலகத்தை சோனியா காந்தி திறந்து வைத்தார். தெலுங்கானாவில் சட்ட சபை கட்டிட திறப்பு விழா வுக்கு அம்மாநில கவர்னர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு அழைப்பு விடுக்கப்பட வில்லை. முதல்-அமைச்சர் தான் திறந்தார். ஆனால் இப்போது மட்டும் விமர்சனம் செய்கிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages