என்ன படிக்கலாம்? வேலைவாய்ப்பு மிகுந்த நிதித்துறைப் படிப்புகள்!
ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு மிகவும் பிரதான பங்கு வகிப்பது, நிதித் துறை. நாட்டின் வளத்தை நிதித்துறைதான் நிர்ணயிக்கும். அந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த நிதித்துறையில் பிற துறைகளைக் காட்டிலும் ஏராளமான வேலை வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன.
நிதித்துறை சார்ந்த உயர்படிப்புகளைப் பல்வேறு நிதித்துறை நிறுவனங்கள் வழங்குகின்றன. வேலைவாய்ப்பு மிகுந்த அப்படிப்புகளையும், வழங்கும் நிறுவனங்களையும் பற்றிய சிறு கண்ணோட்டம்.
National Stock Exchange (NSE)
NSE நிறுவனம், Wealth Management, Financial Sector Management, Global Financial Markets, Financial Market போன்ற நிதித்துறை தொடர்பான முதுகலைப் படிப்புகளை வழங்கிவருகிறது. Financial Market படிப்பில் டிப்ளமா படிப்பும் வழங்கிவருகிறது. மேலும் ஐந்து வருட ஒருங்கிணைந்த MBA Capital Markets படிப்பும் வழங்கப்படுகிறது.
இந்த ஒருங்கிணைந்த படிப்பில் +2 தேர்ச்சி பெற்றவர்கள் சேரலாம். பிற முதுகலைப் படிப்புகளில் சேர, பினான்ஸ் துறை சார்ந்த இளநிலைப் பட்டப் படிப்புகளில் குறைந்தபட்சம் 50% மதிப்பெண்களோடு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். CAT, MAT, XAT போன்ற தேர்வுகளை எழுதியுள்ளவர்களும் விண்ணப்பிக்கலாம்.
NSE FinBasics என்ற ஆன்லைன் படிப்பையும் இந்நிறுவனம் அளித்து வருகிறது. இந்தப் பயிற்சி பினான்ஸ் துறையை சார்ந்து உள்ளவர்கள்தான் படிக்க வேண்டும் என்பதில்லை. அந்தத் துறையைச் சேராதவர்கள், கல்லூரி மாணவர்கள், இல்லத்தரசிகள் என அனைவரும் படிக்கலாம். இந்தப் படிப்பில் நிதித்துறை சார்ந்த அடிப்படை பயிற்றுவிக்கப்படும். வருமானம், வரிவிகிதம், சேமிப்பு, செலவு, முதலீடு, வரவு செலவு திட்டமிடுதல் போன்றவற்றை இப்படிப்பின் மூலம் அறிந்துக் கொள்ளலாம்.
நாம் அன்றாட வாழ்வில் எவ்வாறு செலவை கட்டுப்படுத்த வேண்டும் என்பதை இந்தப் பயிற்சி மூலம் தெளிவாகத் தெரிந்து கொள்ளமுடியும் முதுகலை பட்டப் படிப்புக்கான கட்டணம் ரூ.3 முதல் 4 லட்சம் வரை செலவாகும். இப்படிப்பை முடித்தவர்கள் வங்கிகள், மியூச்சுவல் பண்ட் நிறுவனங்கள், தரகு மையங்கள், மூலதன சந்தை நிறுவனங்கள் ஆகிய துறைகளில் வேலைவாய்ப்புகள் பெற முடியும். மேலும் விவரங்களுக்கு: www.nseindia.com.
Bombay Stock Exchange (BSE)
இந்நிறுவனமும் பல்வேறு முதுநிலைப் படிப்புகளை வழங்கி வருகிறது. Banking and Finance, Business journalism, Global Financial Markets ஆகிய படிப்புகள் முக்கியமானவை. இவைதவிர, தொலைநிலைக்கல்வியில் ஸ்டாக் மார்க்கெட் துறையில் ஓராண்டு அடிப்படை மற்றும் அட்வான்ஸ்டு படிப்பும் அளிக்கப்படுகிறது.
Business journalism பிரிவில் முதுநிலை டிப்ளமா படிப்பையும் அறிமுகம் செய்துள்ளனர். மாணவர்கள் மற்றும் தொழில் நிபுணர்களுக்கு கேப்பிடல் மார்க்கெட்டிங் மற்றும் கமோடிட்டி, வெல்த் இன்வெஸ்ட்மென்ட் மற்றும் கரன்சி மார்க்கெட் போன்ற சான்றிதழ் படிப்புகளும் உள்ளன. இதனுடன் மாஸ்டர் ஆப் பினான்ஸ், குளோபல் பினான்ஸ் மற்றும் பிசினஸ் அட்மினிஸ்ட்ரேஷன் போன்ற படிப்புகளும் இங்கு வழங்கப்படுகின்றன.
இந்தப் படிப்புகளை முடிப்பவர்கள் முதலீட்டு வங்கிகள், கேப்பிடல் மார்க்கெட்ஸ் துறையில் பணிபுரியலாம். சுய தொழிலும் செய்யலாம். ரூ.45 ஆயிரம் முதல் 1.40 லட்சம் வரை இப்படிப்புகளுக்கு செலவாகும். மேலும் விவரங்களுக்கு; www.bseindia.com.
JOIN US: https://t.me/agnipuratchi1
CRISIL Certified Analyst Programme (CCAP)
கிரிசல் நிறுவனம் ரேட்டிங் ஏஜென்சியாக மட்டுமின்றி வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுக்கு ஆராய்ச்சி குறித்த பயிற்சிகள், படிப்புகளையும் வழங்கி வருகிறார்கள். கிரிசல் சர்டிபை அனலிஸ்ட் புரோகிராம் என்ற இரண்டு வருடப் படிப்பு முக்கியமானது. இந்தப் படிப்பை முடிக்கும் மாணவர்களில் திறமையானவர்களைத் தேர்வு செய்து அவர்களுக்குத் தங்களின் நிறுவனத்தில் வேலையும் அளித்துவருகிறது கிரிசல் நிறுவனம். பயிற்சிக் கட்டணம் ரூ.1.38 லட்சம்.
இந்தப் படிப்பு படிக்க ஏதாவது ஒரு பாடப்பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்று இருக்க வேண்டும். 60 சதவீதம் மதிப்பெண்கள் தேவை. இறுதியாண்டு படிக்கும் மாணவர்களும் விண்ணப்பிக்கலாம். NMAT, CAT, XAT, கிரிசல் ஆப்டிடியூட் தேர்வுகளின் அடிப்படையில் மாணவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். இப்படிப்பை முடித்தவர்கள் வருடத்திற்கு ஆறு லட்சம் வரை சமபளம் பெறலாம்.
மேலும் விவரங்களுக்கு www.crisil.com/ccap.
The Institute of Chartered Accountants of India (ICAI)
இந்திய சார்டர்ட் அக்கவுண்டன்ட் கல்வி நிறுவனம், சார்டர்ட் அக்கவுண்டன்டுகளை உருவாக்கும் கல்வி நிறுவனமாகும். ICAI என்ற அழைக்கப்படும் இந்த நிறுவனம் அக்கவுண்டிங் டெக்னிஷியன் பயிற்சியை அளித்து வருகிறது. இது 15 மாத பயிற்சி.
சி.ஏ படிப்பு படிக்க வேண்டும் என்று லட்சியத்தை அடைய முடியாத மாணவர்களுக்கு இந்தப் படிப்பு ஒரு வரப்பிரசாதம். +2 தேர்ச்சி பெற்றவர்கள் இப்படிப்புக்கு விண்ணப்பிக்கலாம். இதற்கான பயிற்சிக் கட்டணம் ரூ.10 ஆயிரத்துக்குள்தான் வரும்.
ஒவ்வொரு வருடமும் 50 ஆயிரம் அக்கவுண்டிங் டெக்னிஷியன்களை உருவாக்க வேண்டும் என்பது இந்நிறுவனத்தின் நோக்கம். இந்தப் பயிற்சியில் அக்கவுண்டிங், சட்டம், காஸ்ட் அக்கவுண்டிங் மற்றும் பைனான்சியல் மேனேஜ்மென்ட், டேக்சேசன், பிசினஸ் கம்யூனிகேஷன் போன்ற பாடத்திட்டங்கள் உள்ளன. இப்படிப்பை முடித்தவர்கள் சார்டர்ட் அக்கவுண்டன்ட்களிடம் பணிபுரியலாம். அக்கவுண்ட்ஸ் மற்றும் பைனான்ஸ் துறையிலும் பணி வாய்ப்புகள் உள்ளன. மேலும் விவரங்களுக்கு www.icai.org.
Institute Of Insurance and Risk Management(IIRM)
ஹைதராபாத்தில் இயங்கும் இந்நிறுவனம் முதுநிலை மற்றும் டிப்ளமா படிப்புகளை வழங்கிவருகிறது. இன்சூரன்ஸ் பற்றிய ஒரு வருட முதுநிலைப் படிப்பு முக்கியமானது. இதில் தேர்ச்சி பெறும் மாணவர்கள் இன்சூரன்ஸ் நிறுவனங்கள், வங்கிகள், ஐ.டி மற்றும் இதர தனியார் நிறுவனங்களில் பணியில் சேரலாம். அனாலிடிக்ஸ் அண்ட் ஆக்சுவரியல் சயின்ஸ் என்ற ஒன்றரை வருடப் படிப்பும் இங்கு உண்டு. இப்படிப்பை முடித்தவர்களுக்கு பினான்சியல் மற்றும் ஐ.டி துறைகளில் வேலை வாய்ப்புகள் உள்ளன. இப்படிப்பில் ஒன்றரை மாத இன்டர்ன்ஷிப்பும் அடக்கம்.
இன்சூரன்ஸ் மேனேஜ்மென்ட் துறையில் முதுநிலைப் படிப்பையும் இந்நிறுவனம் அளிக்கிறது. இப்படிப்புக்கும் நிறைய வேலை வாய்ப்புகள் உண்டு. பொறியியல் உள்ளிட்ட அனைத்துப் பிரிவு இளநிலைப் பட்டதாரிகளும் இப்படிப்புக்கு விண்ணப்பிக்கலாம். 50 சதவிகித மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். CA, ICWAI, CS போன்ற தொழில்முறை படிப்பை முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம். இதற்கான கட்டணம் 1.5 லட்சம் முதல் 5.5 லட்சம் வரை ஆகலாம்.
மேலும் விவரங்களுக்கு: www.iirmworld.org.in/contact_us.html.
National Institute of Securities Markets (NISM)
இந்நிறுவனம் செக்யூரிட்டீஸ் மார்க்கெட் துறையில் பல்வேறு முதுநிலை டிப்ளமா படிப்புகளை வழங்கி வருகிறது. செக்யூரிட்டி மார்க்கெட்டிங் துறையில் வழங்கப்படும் ஓராண்டு முழுநேரப்படிப்பு முக்கியமானது. இதில் சேர விரும்புபவர்கள் இளநிலைப் படிப்பில் குறைந்த பட்சம் 50 சதவிகித மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ரூ.2.5 லட்சம் வரை செலவாகும். இப்படிப்பை முடித்தவர்கள் செக்யூரிட்டி ஆராய்ச்சி மையங்கள், முதலீட்டு வங்கிகள், பங்கு நிறுவனங்கள், நிதி நிறுவனங்களில் வேலைபெறலாம். மேலும் விவரங்களுக்கு:
www.nism.ac.in.
Institute Of Finance Banking & Insurance (IFBI)
இந்தக் கல்வி நிறுவனம் நிதித்துறை சார்ந்த பல்வேறு முதுநிலை மற்றும் டிப்ளமா படிப்புகளை வழங்கிவருகிறது. பேங்கிங் ஆபரேஷன் துறையில் வழங்கப்படும் முதுநிலை டிப்ளமா படிப்பு முக்கியமானது. பேங்கிங் பிசினஸ் மற்றும் சேல்ஸ் துறையில் டிப்ளமா, சான்றிதழ் படிப்புகளும் உள்ளன.பேங்கிங் ஆபரேஷன் முதுநிலைப் படிப்பில் சேர ஏதாவது ஒரு பிரிவில் இளநிலைப் படிப்பை முடித்திருக்க வேண்டும். +2 முடித்தவர்கள் டிப்ளமா படிப்பிலும் 10ம் வகுப்பு முடித்தவர்கள் சான்றிதழ் படிப்பிலும் சேரலாம்.
அனைத்திலும் 50 சதிவிகிதம் மதிப்பெண் பெற்றிருப்பது முக்கியம். 26 வயதுக்குள் இருக்க வேண்டும். இரண்டு வருடம் பேங்கிங் துறையில் அனுபவமுள்ளவர்களுக்கு முன்னுரிமை உண்டு. பயிற்சியில் சேர விரும்பும் மாணவர்கள் நுழைவுத்தேர்வு எழுத வேண்டும். முதுநிலை மற்றும் டிப்ளமா பயிற்சிக்கான கல்விக் கட்டணம் ரூ.50 ஆயிரம் முதல் ரூ.60 ஆயிரம் வரை ஆகலாம். இப்படிப்பை முடிக்கும் மாணவர்களுக்கு வங்கித் துறையில் வேலை வாய்ப்புகள் நிறைந்துள்ளன,
மேலும் விவரங்களுக்கு http://www.ifbi.com
No comments:
Post a Comment