முதல்வரின் பாவங்களில் இருந்து மக்களை மீட்கும் யாத்திரை அண்ணாமலை, தமிழக பா.ஜ., தலைவர் - சிறப்பு கட்டுரை
புண்ணிய பூமியான ராமேஸ்வரத்தில், 'என் மண் என் மக்கள்' நடைபயணத்தை, ஜூலை, 28ல், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா துவக்கி வைத்தார். வீரத் துறவி விவேகானந்தரை, உலகுக்கு வெளிப்படுத்திய பெருமைக்குரிய ராமநாதபுரம் மண் தேசத்தின் பக்கமே என்பதை, கூடியிருந்த மக்கள் அளித்த வரவேற்பின் வாயிலாக உணர முடிந்தது. தமிழக அரசியலில் மாற்றத்துக்கான முதல் புள்ளி இது.
மன்னர் பாஸ்கர சேதுபதி மண்ணில் துவக்கப்பட்டது பெரும் மகிழ்ச்சி, பெருமை. நடைபயண துவக்க விழாவில், மாநிலம் முழுதும் பல ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
பொது மக்களும், பா.ஜ., தொண்டர்களும் எழுச்சியுடன் பங்கேற்ற, இந்த விழா திடல், 50,000 பேர் அமரும் வகையில் அமைக்கப்பட்டது. ஆனால், பல ஆயிரம் மக்கள் ராமேஸ்வரம் மண்டபம் சாலையிலேயே காத்திருந்தனர்.
இளைஞர்கள், இந்திய தேசத்துக்காக சிந்தித்து, தனக்கென வாழாது, நாட்டுக்காக வாழ்ந்து காட்டிய மாபெரும் அறிஞர், அறிவியல் விஞ்ஞானி, குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாம்.
• JOIN US: https://t.me/agnipuratchi1
அவர் காட்டிய வழியில், என் நடைபயணத்தை துவக்குகிறேன். இனி, அடுத்து வரும் மாதங்களில், நான் அனைவருடனும் பயணிக்க இருக்கிறேன். உங்கள் அனைவரையும் சந்திக்கும் வாய்ப்பை நல்கும், என் நீண்ட கால கனவான பாத யாத்திரை, நாட்டின் உள்துறை அமைச்சர் அமித் ஷாவால், இனிதே துவக்கி வைக்கப்பட்டது சிறப்புக்குரியது.
'நடக்கப்போவது வெறும் பாத யாத்திரை மட்டுமல்ல; ஒரு மிகப்பெரிய அரசியல் மாற்றம்' என்று கூறி, தன் நல்வாழ்த்துகளை வழங்கி, வாழ்த்தியிருக்கிறார் உள்துறை அமைச்சர்.
எதற்காக, இந்த பாதை யாத்திரை; நான் எதற்காக உங்களை சந்திக்க நினைக்கிறேன்; இந்த பாதை யாத்திரை சென்று சேர இருக்கும் இலக்கு என்ன என்றெல்லாம் என் எண்ண ஓட்டங்கள் சிறகடித்து பறந்து கொண்டிருக்க, நான் சிந்தித்து பார்க்கிறேன்...
உங்கள் உணர்வுகளை, உள்ளங்களை புரிந்து கொள்ள, உங்கள் இல்லத்தில், நான் உங்களை சந்திப்பது மிகவும் அவசியம். என் இலக்கை தீர்மானிக்க, உங்கள் இதயங்களை, இடங்களை, இடர்களை, உணர்ந்து கொள்வது அவசியம்.
மக்கள் நன்மைக்காக, மேன்மைக்காக, உண்மையாககாக, நேர்மையாக உழைத்து கொண்டிருக்கும் பிரதமரின் சீடனாக, தமிழக மக்களின் துயரங்களைத் துடைக்க, உங்களில் ஒருவனாக, உங்களுக்கான ஒருவனாக, உங்கள் உரிமைகள் காக்க நான் தயாராக இருக்கிறேன் என்று அறிவிக்கவே இந்த நடைபயணம்.
தமிழகத்தில் நடந்து வரும் தி.மு.க., ஊழல் ஆட்சிக்கு எதிராக, மக்கள் அனுபவித்து வரும் தொடர் துன்பங்களை, அவலங்களை கண்டித்து குரல் கொடுக்க... ஊழல் இல்லா உன்னத தமிழகத்தை உருவாக்கவே என் மண் என் மக்கள் நடைபயணம்.
தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து, தி.மு.க., ஆட்சியின் மக்கள் விரோதப் போக்கை, ஆட்சியின் அவலங்களை, இந்த நடைபயணம் வாயிலாக மக்கள் மத்தியில் கொண்டு சேர்ப்போம்.
பிரதமர் மோடியின் ஒன்பது ஆண்டு கால ஆட்சியில், தமிழகம் பெற்ற நலத் திட்டங்கள், அவற்றின் வாயிலாக மக்கள் பெற்ற பலன்களை, மக்களிடம் கொண்டும் சேர்க்கும் விதமாக, இந்த நடைபயணம் நடக்கிறது.
ஒன்பது ஆண்டுகளில், நேரடி நிதி மற்றும் உள் கட்டமைப்பை மேம்படுத்த, 10 லட்சத்து, 69,673 கோடி ரூபாயை, தமிழகத்துக்கு பிரதமர் மோடி வழங்கி உள்ளார். இந்த உண்மையை, மக்களிடம் கொண்டு சேர்ப்பேன்.
இப்போது போல, எப்போதும் மீனவர்கள் பாதுகாப்புடன் இருப்பதை உறுதி செய்யவும், தமிழகம் இழந்த பாரம்பரிய பெருமைகளை மீட்டெடுத்து, மாநிலத்தை தலை நிமிர செய்யவே நடைபயணம்.
நாட்டின் கடைக்கோடி முனையாக ராமநாதபுரம் மண்ணில், இந்த நடைபயணம் வாயிலாக, பொது மக்களை சந்திக்கும் நல்வாய்ப்பு கிடைத்தது. தமிழக மக்கள், பிரதமர் மீது கொண்ட அன்பை வெளிப்படுத்தியதை கண்டு மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன்; பெருமையாக உணர்ந்தேன்.
பா.ஜ., மற்றும் பிரதமர் மீது, தமிழக மக்கள் காட்டும் அன்புக்கும், ஆதரவுக்கும் என்ன கைமாறு செய்யப் போகிறோம்?
இந்த யாத்திரையை, தமிழக முதல்வர் ஸ்டாலின், 'பாவ யாத்திரை' என்று புலம்பும் அளவுக்கு வெகுவாக அவரை கலங்கடித்துள்ளது என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.
• JOIN US: https://t.me/agnipuratchi1
தமிழக மீனவர்களுக்கு அளிக்கப்பட்ட தேர்தல் வாக்குறுதிகள் பெரும்பாலானவை நிறைவேற்றப்படாத நிலையில், ஊழல் அமைச்சர்களை காப்பாற்றுவதிலும், தி.மு.க., முதல் குடும்பத்தின் நிதிகளை பெருக்குவதிலும் மட்டுமே அரசு இன்று கவனம் செலுத்துகிறது.
தமிழகத்தில் ஒரு குடும்பம் தாங்கள் செய்த எண்ணற்ற பாவங்களை போக்கிக் கொள்ள, புனித நீரில் மூழ்க வேண்டும் என்றால், அது, தி.மு.க.,வின் முதல் குடும்பமாக மட்டுமே இருக்க முடியும். தி.மு.க., - காங்., கட்சிகள், கச்சத்தீவை இலங்கைக்கு அன்பளிப்பாக வழங்கியதால், கடலில் இருக்கும் தமிழக மீனவர்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் ஏற்பட்டது.
மத்தியில், 10 ஆண்டு கால தி.மு.க., - காங்., கூட்டணி ஆட்சியில் 80க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள், இலங்கை கடற்படையினரால் கொல்லப்பட்டனர். தி.மு.க.,வினர் இதை பார்த்து வாய்மூடி மவுன பார்வையாளர்களாகவே இருந்தனர்.
மீனவர்களின் உயிர்களை விட, வளமான அமைச்சரவை பதவிகள், அவர்களுக்கு முக்கியமாக இருந்தன.
கடந்த 2009ம் ஆண்டில், இலங்கையில், 1.5 லட்சத்துக்கும் அதிகமான தமிழ் சகோதர, சகோதரிகள் கொல்லப்பட்டபோது, அவர்களுக்கு உதவுவது போல நடிப்பதில் மட்டும் தான், தமிழக முதல்வர் ஸ்டாலின், தன் தந்தையுடன் மும்முரமாக இருந்தார்.
பாவமன்னிப்பு கேட்கும் அளவுக்கு எத்தனையோ பாவங்களை தி.மு.க., செய்துள்ளது.
இந்நிலையில், தன் குடும்பம் சொத்து குவிப்பதற்காக, தமிழ் மக்களின் நலனை அடகு வைக்கும் தமிழக முதல்வர் ஸ்டாலின், நிறைய பாவங்களை செய்து வருகிறார். அவர் செய்து வரும் பாவங்களில் இருந்து மக்களை மீட்கும் யாத்திரை தான் இந்த யாத்திரை.
ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் ஒன்றியம், கோவில்வாடி கிராமத்துக்கு சென்று, அங்குள்ள மீனவ சமுதாய மக்களை சந்தித்தோம். பிரதமரின் ஒன்பது ஆண்டு கால ஆட்சியில், மீனவர்களுக்காக கொண்டு வந்த நலத்திட்டங்கள் குறித்தும், மீனவ சகோதர, சகோதரிகளுடன் அரசு சார்ந்த தேவைகள் குறித்தும், பா.ஜ., மூத்த நிர்வாகிகளுடன் கலந்துரையாடினோம்.
• JOIN US: https://t.me/agnipuratchi1
நேர்காணலில் பேசுவதை விட, மக்களை நேரில் காண்பதே சிறப்பு. அதற்காகத் தான் யாத்திரை துவக்கப்பட்டது. தமிழக பா.ஜ.வின் நடைபயண துவக்க விழாவில் பங்கேற்று சிறப்பித்த தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி தலைவர்கள், பா.ஜ., மூத்த தலைவர்கள், நிர்வாகிகள் என, அனைவருக்கும், உங்கள் வருகைக்கும், பங்களிப்பிற்கும், மனமார்ந்த நன்றி.
பயணத்தை மாபெரும் வெற்றி பயணமாக்க, பா.ஜ., நிர்வாகிகள், தொண்டர்கள், கூட்டணி கட்சிகளின் தொண்டர்கள், பொதுமக்கள் உற்சாகம் அளித்து, துணை நிற்க வேண்டும்.
கன்னியாகுமரியில் இருந்து ராமேஸ்வரத்துக்கு, 1893ல் நடைபயணமாக வந்தவர் சுவாமி விவேகானந்தர். பின், ராமநாதபுர மன்னர் பாஸ்கர் சேதுபதி கேட்டு கொண்டதால், அமெரிக்கா நாடான சிகாகோ நகரில் நடந்த, உலக மதங்களின் பார்லிமென்டில் பங்கேற்று, நாடு திரும்பிய சுவாமி விவேகானந்தர், இதே ராமேஸ்வரம் மண்ணில் ஆற்றிய உரை நினைவுக்கு வருகிறது.
'மிக நீண்ட இரவு விலகுவது போல தோன்றுகிறது; மிக கடுமையான துன்பம் கடைசியாக முடிவுக்கு வந்திருக்கிறது; பிணம் போல கிடந்த உடம்பு விழிப்பது போல் உள்ளது.
இந்த நேரத்தில் ஒரு குரல் நம்மை நோக்கி வருகிறது; உறுதியாக மிகவும் தெளிவாக அது வருகிறது; ஏறத்தாழ உயிரிழந்த நிலையில் இருக்கும் எலும்புகளுக்கும், தசைகளுக்கும் உயிர் துடிப்பை தருகிறது.
'பாரதத்தாய் ஆழந்த துாக்கத்திலிருந்து விழிக்கிறாள்; அவள் விழித்து வருவதை குருடனும், குதர்க்கவாதிகளும் காண முடியாது. அவளை யாரும் தடுக்க முடியாது. இனி அவள் துாங்க போவதில்லை!'
அன்று, சுவாமி விவேகானந்தர் வெளிப்படுத்திய விழிப்புணர்வு வேட்கையை, இந்த பாத யாத்திரை நிறைவேற்றினால், அதுவே கயவர்களின் பிடியில் சிக்கி தவிக்கும் தமிழ் அன்னையின் புகழை மீட்டெடுக்கும். கடைக்கோடி மனிதனையும் முன்னேற்ற வேண்டும் என்ற பிரதமரின் கனவை, நாம் நிறைவேற்றும்!
நன்றி: தினமலர்
No comments:
Post a Comment