தொண்டை அறுவை மருத்துவம் செய்து கொண்ட பா.ம.க. கவுரவத் தலைவர் ஜி.கே.மணியை - பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அய்யா அவர்கள் சந்தித்து நலம் விசாரித்தார்! - Agnipuratchi

தொண்டை அறுவை மருத்துவம் செய்து கொண்ட பா.ம.க. கவுரவத் தலைவர் ஜி.கே.மணியை - பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அய்யா அவர்கள் சந்தித்து நலம் விசாரித்தார்!

Share This

தொண்டை  அறுவை மருத்துவம்  செய்து கொண்ட பா.ம.க. கவுரவத் தலைவர் ஜி.கே.மணியை - பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அய்யா அவர்கள் சந்தித்து  நலம் விசாரித்தார்!

பாட்டாளி மக்கள் கட்சியின் கவுரவத் தலைவர் ஜி.கே.மணி அவர்களுக்கு சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் 26.08.2024 அன்று தொண்டை அறுவை மருத்துவம் செய்யப்பட்டது. அறுவை மருத்துவத்திற்கு முன்பாக அவரை பாட்டாளி மக்கள் கட்சியின்  நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் அன்று காலை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். அவருக்கு அறுவை மருத்துவம் செய்யவிருக்கும் காது, மூக்கு, தொண்டை மருத்துவர் பாபு மனோகர் அவர்களிடமும்  ஜி.கே.மணிக்கு மேற் கொள்ளப்படவிருக்கும் மருத்துவம்  குறித்து மருத்துவர் அய்யா அவர்கள் கேட்டறிந்தார்கள்.

பின்னர் பாட்டாளி மக்கள் கட்சியின் கவுரவத் தலைவர் ஜி.கே.மணி அவர்களுக்கு இன்று தொண்டை அறுவை மருத்துவம் செய்யப்பட்டது. அறுவை மருத்துவத்திற்கு பிறகு ஓய்வெடுத்து வரும் அவரை பாட்டாளி மக்கள் கட்சியின்  நிறுவனர் மருத்துவர் இராமதாசு அய்யா அவர்கள் 26.08.2023 இன்று மாலை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். அவரது மகன் ஜி.கே.எம். தமிழ்க்குமரன் உள்ளிட்ட குடும்பத்தினர் உடன் உள்ளனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages