என்னை மனம் மகிழ வைத்த வருங்கால மருத்துவர் ரோஜா! - பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு அய்யா பெருமிதம். - Agnipuratchi

என்னை மனம் மகிழ வைத்த வருங்கால மருத்துவர் ரோஜா! - பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு அய்யா பெருமிதம்.

Share This

என்னை மனம் மகிழ வைத்த
வருங்கால மருத்துவர் ரோஜா! - பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு அய்யா பெருமிதம்.

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி வட்டம் அம்மணம்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் கண்ணன். இவர் பாமகவின் தீவிர தொண்டன். பாமக அறிவித்த அனைத்து போராட்டங்களிலும், நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டவர்.
கண்ணன் - அம்சாதேவி இணையரின் மகள் ரோஜா. இவர் நடப்பாண்டில் மருத்துவ படிப்பில் சேருவதற்கான நீட் தேர்வில் மாநில அளவில் நான்காவது இடத்தையும், திருவண்ணாமலை மாவட்ட அளவில் முதல் இடத்தையும் பிடித்திருக்கிறார். இவரும் நான் படித்த அதே சென்னை மருத்துவக் கல்லூரில் (Madras Medical College) சேர்ந்திருக்கிறார். தைலாபுரம் தோட்டத்தில் உள்ள எனது இல்லத்தில் இன்று என்னை சந்தித்து மருத்துவக் கல்லூரியில் சேர்வதற்கான ஆணையை காட்டி வாழ்த்து பெற்றார்.

சென்னை மருத்துவக் கல்லூரியில் சேர்வதற்கான ஆணையை கண்ட நான் அளவில்லாத மனமகிழ்ச்சி அடைந்தேன். சென்னை மருத்துவக் கல்லூரி உலகப் புகழ்பெற்ற கல்லூரி. ஏராளமான மருத்துவர்களை உருவாக்கிய கல்லூரி. நானும் அங்கு தான் படித்து பட்டம் பெற்றேன். அந்த கல்லூரியில் மிக மிகப் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த பாட்டாளியின் மகளுக்கு இடம் கிடைத்திருக்கிறது. இன்னும் சில ஆண்டுகளில் அந்தப் பாட்டாளியின் மகள் ரோஜா மருத்துவர் ரோஜாவாக தகுதி பெற்று சேவை செய்வார். இதுதான் எனது மகிழ்ச்சிக்கு காரணம்.

ஒரு காலத்தில் பள்ளிப்படிப்பையே முடிக்க முடியாத நிலையில் இருந்த சமூகம், இன்று மருத்துவ படிப்பை எளிதாக ஏற்கும் நிலையில் உருவாகி இருக்கிறது. இன்று ரோஜாவுக்கு கிடைத்த அந்த வாய்ப்பு நாளை எல்லா பாட்டாளிகளுக்கும் கிடைக்க வேண்டும். ஒவ்வொரு பாட்டாளியின் குடும்பத்திலிருந்தும் குறைந்தது ஒரு மருத்துவர் உருவாக வேண்டும். அதுதான் எனது எதிர்பார்ப்பு, அந்த எதிர்பார்ப்பு நிறைவேறும் போது நான் எல்லையில்லாத மகிழ்ச்சி அடைவேன்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages