52 தலைமுறைகளாக ஒரே குடும்பம் கவனிக்கும் உலகின் மிகப் பழமையான ஹோட்டல்... - Agnipuratchi

52 தலைமுறைகளாக ஒரே குடும்பம் கவனிக்கும் உலகின் மிகப் பழமையான ஹோட்டல்...

Share This

52 தலைமுறைகளாக ஒரே குடும்பம் கவனிக்கும் உலகின் மிகப் பழமையான ஹோட்டல்...

வெளியூர்களுக்கு செல்லும் போது ஹோட்டல்களில் தங்குவது வழக்கம். சுற்றிப் பார்க்க வேண்டிய இடங்களை எல்லாம் பார்த்துவிட்டு நன்றாக தூங்கி ஓய்வெடுக்க, பொருட்களை பத்திரமாக வைக்க, சாப்பிட ஹோட்டல்களை பயன்படுத்துவோம்.

ஆனால் இந்த ஹோட்டல் தொழில் எப்போது தொடங்கியது, பழமையான செயல்படும் ஹோட்டல் எது என்று எல்லாம் நீங்கள் யோசித்ததுண்டா?அப்படி உலகின் பழமையான அதே நேரம் தொடர்ந்து செயல்பட்டு வரும் ஒரு ஹோட்டல் பற்றி தான் இன்று உங்களுக்கு சொல்ல இருக்கிறோம்.

உலகின் பழமையான ஹோட்டல் எத்தனை ஆண்டுகள் பழமையாக இருக்கும் என்று நினைக்கிறீர்கள், சில நூறு ஆண்டுகள் என்று நினைத்தால் அது தவறு. 1,318 ஆண்டுகளுக்கு முன்னர் ஜப்பானில் உருவாக்கப்பட்ட நியிஷியாமா ஒன்சென் கெய்யுங்கன் ஹோட்டல்தான் இன்றைய நிலையில் உள்ள உலகின் மிகப் பழமையான ஹோட்டல். உலகிலேயே தொடர்ந்து இயங்கும் பழமையான ஹோட்டல் என்று கின்னஸ் உலக சாதனையையும் இது படைத்துள்ளதாம்.

மவுண்ட் ஃபுஜியிலுக்கு அருகில் கி.பி 705 புஜிவாரா மஹிடோ என்பவர் நிஷியாமா ஒன்சென் கெய்யுங்கன் ஹோட்டலைக் கட்டியுள்ளார். இன்று வரை தொடர்ந்து வணிக செயல்பாட்டில் உள்ளது. சுற்றி எத்தனை ஹோட்டல்கள் வந்தாலும் இதன் மவுசு இன்னும் குறையவில்லை.

The Agnipuratchi WhatsApp Channel: https://whatsapp.com/channel/0029Va9bYNbAe5Vomu8a0d20

இந்த விடுதி 8 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டபோது அந்த காலத்தின் முக்கிய பெரிய குடிகளாக மதிக்கப்பட்ட சாமுராய் முதல் ஏ-லிஸ்ட் பிரபலங்கள் என்று சொல்லப்படும் அரச குடும்பம், மற்றும் அது சார்ந்த விருந்தினர்கள் தங்கும் இடமாக இருந்துள்ளது. இந்த விடுதிக்கு அருகில் உள்ள வெந்நீர் ஊற்றில் இருந்து நேரடியாக நீர் வருகிறது. மருத்துவ குணம் கொண்ட இந்த நீரில் குளிப்பதற்காகவே பலர் வந்துள்ளனர்.

இன்றும் கெய்யுங்கனின் புகழ்பெற்ற குளியல், மொச்சிதானி நோ யூ , வெந்நீர் ஊற்றுகளில் இருந்து நேரடியாக நீர் நிரப்பப்படுகிறது. நீரூற்றுகளிலிருந்து நேரடியாக குடிக்கவும் பயன்படுத்துகின்றனர். பழைய ஹோட்டல் என்பதால் அதே பழைய பாணியில் இருக்கும் என்று நினைக்க வேண்டாம். 1300 ஆண்டுகளில் உலகம் கடந்த அதே வளர்ச்சி நிலைகளை இந்த ஹோட்டலும் அடைந்துள்ளது.

சில பாரம்பரிய முக்கிய இடங்களைத் தவிர்த்து மற்ற வசதிகள் எல்லாமே மேம்படுத்தப்பட்டுள்ளது. சுற்றி உள்ள இயற்கை அழகும் அப்படியே பராமரிக்கப்படுகிறது . ஹோட்டல் பாரம்பரிய ஜப்பானிய பாணியில் அலங்கரிக்கப்பட்டுள்ளது மற்றும் இங்கு மொத்தமே 37 அறைகள் தான். விலை என்று பார்த்தால் ஒரு இரவுக்கு $470 அதாவது இந்திய மதிப்பில் 38784 ரூபாயாம்.

இந்த விடுதியின் மற்றொரு ஸ்வராஸ்யம் என்னவென்றால் 1300 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த விடுதியை 52 தலைமுறைகளாக ஒரே குடும்பத்தை சேர்ந்த உறுப்பினர்கள் நிர்வகித்து வருகின்றனர். இதன் பின்னரும் இவர்கள் தான் இந்த சொத்தை பாதுகாக்க தீர்மானித்துள்ளனர்.

The Agnipuratchi WhatsApp Channel: https://whatsapp.com/channel/0029Va9bYNbAe5Vomu8a0d20

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages