பாட்டாளி மக்கள் கட்சியின் தலைமை நிலையச் செயலாளர் இசக்கி படையாட்சி உடல்நலக் குறைவால் இன்று காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த வேதனையும், வருத்தமும் அடைந்தேன். - பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் இரங்கல்.
பாட்டாளி மக்கள் கட்சியின் தொடக்க கால நிர்வாகிகளில் குறிப்பிடத்தக்கவர் இசக்கி படையாட்சி. மருத்துவர் அய்யா அவர்களின் எண்ணப்படி கட்சிப் பணியாற்றியவர் அவர். நான் இளைஞராக இருந்து கட்சிப் பணியாற்ற வந்த காலத்திலிருந்து அவரது உழைப்பைப் பார்த்து வந்திருக்கிறேன்.
என் மீது மிகுந்த அன்பு கொண்டவர். பாட்டாளி மக்கள் கட்சித் தலைவராக கடந்த ஆண்டு நான் பொறுப்பேற்றது முதல் எனது செயல்பாடுகளுக்கு துணையாக இருந்தவர். அவரது மறைவு பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக எனக்கும் தனிப்பட்ட முறையில் பெரும் இழப்பு தான்.
அனைவராலும் அண்ணாச்சி என்று அன்புடன் அழைக்கப்பட்ட இசக்கி படையாட்சி அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள், பா.ம.கவினர் உள்ளிட்ட அனைவருக்கும் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
No comments:
Post a Comment