இசக்கிப் படையாட்சியின் இறுதிச் சடங்கில் பாமக கௌரவ தலைவர் ஜி.கே.மணி உள்ளிட்டோர் பங்கேற்பு - குடும்பத்தினருக்கு மருத்துவர் இராமதாசு அய்யா தொலைபேசி மூலம் பேசியில் ஆறுதல் கூறினார். - Agnipuratchi

இசக்கிப் படையாட்சியின் இறுதிச் சடங்கில் பாமக கௌரவ தலைவர் ஜி.கே.மணி உள்ளிட்டோர் பங்கேற்பு - குடும்பத்தினருக்கு மருத்துவர் இராமதாசு அய்யா தொலைபேசி மூலம் பேசியில் ஆறுதல் கூறினார்.

Share This

இசக்கிப் படையாட்சியின் இறுதிச் சடங்கில் பாமக கௌரவ தலைவர் ஜி.கே.மணி உள்ளிட்டோர் பங்கேற்பு - குடும்பத்தினருக்கு மருத்துவர் இராமதாசு அய்யா தொலைபேசி மூலம் பேசியில் ஆறுதல் கூறினார்.

பாட்டாளி மக்கள் கட்சியின் தலைமை நிலையச் செயலாளர் இசக்கி படையாட்சி அவர்கள் உடல் நலக் குறைவால் நேற்று காலமானார். அவரது மறைவுக்கு பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்களும், பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்களும் இரங்கல் தெரிவித்திருந்தனர்.

இசக்கி படையாட்சி அவர்களின் இறுதிச் சடங்குகள்  தென்காசி மாவட்டம் பாபநாசம் அருகில் உள்ள விக்கிரமசிங்கபுரத்தில்  இன்று மாலை நடைபெற்றன. அந்த நிகழ்வுகளில் தமது சார்பில் பங்கேற்கும்படி  கவுரவத் தலைவர் ஜி.கே.மணி அவர்களை மருத்துவர் அய்யா அவர்கள் கேட்டுக் கொண்டார். அதன்படி இன்று காலை சென்னையிலிருந்து  விமானம் மூலம் தூத்துக்குடி சென்ற ஜி.கே.மணி, அங்கிருந்து சாலைவழியாக விக்கிரமசிங்கபுரம் சென்று இறுதிச் சடங்குகளில் கலந்து கொண்டார்.

விக்கிரசிங்கபுரத்தில் உள்ள இசக்கி படையாட்சி அவர்களின் இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு மருத்துவர் அய்யா, மருத்துவர் அன்புமணி இராமதாஸ் ஆகியோரின் சார்பில் ஜி.கே.மணி மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். இசக்கி படையாட்சி அவர்களின் மனைவி கோமதி அம்மாள், மகன் மருத்துவர் முத்துவேல் ஆகியோரிடம் மருத்துவர் அய்யா அவர்கள் தொலைபேசி மூலம் பேசி  ஆறுதல் கூறினார்.

அதைத் தொடர்ந்து அங்கிருந்து 2 கி.மீ தொலைவில் உள்ள சுடுகாட்டிற்கு  அவரது உடல் இறுதி ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு அனைவரும் மரியாதை செலுத்திய பிறகு இசக்கி படையாட்சியாரின் உடலுக்கு  அவரது புதல்வர் மருத்துவர் முத்துவேல்  எரியூட்டினார்.

இறுதிச் சடங்குகளில் பா.ம.க. துணைத் தலைவர்கள் திருமலை குமாரசாமி யாதவ், ஐயம்பெருமாள் பிள்ளை, கரூர் உள்ளிட்ட மாவட்டங்களின் பொறுப்பாளர் கரூர் பாஸ்கரன்,   மாவட்ட செயலாளர்கள்  சீயோன் தங்கராஜ், இராமச்சந்திரன், சின்னத்துரை, இசக்கி முத்து, சீதாராமன், டேனியல், மாநில செயற்குழு உறுப்பினர் தென்காசி சேது ஹரிஹரன்,  திருநெல்வேலி   முன்னாள் மாவட்ட செயலாளர் ஹரி உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

தருமபுரி தொகுதி மக்களவை முன்னாள்  உறுப்பினர் மருத்துவர் இரா.செந்தில், வன்னியர் சங்க செயலாளர் சேலம் கார்த்தி, தருமபுரி சட்டப்பேரவை உறுப்பினர் வெங்கடேஸ்வரன், மாநில இளைஞரணி செயலாளர் முருகசாமி  ஆகியோர் முன்னதாக இசக்கி படையாட்சி அவர்களின் உடலுக்கு மரியாதை செலுத்தினார்கள்.

இறுதிச் சடங்குகளைத் தொடர்ந்து இரங்கல் கூட்டமும் நடைபெற்றது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages