கோனேரி குப்பத்தில் பணம் காய்க்கும் மரங்கள்! - பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு அய்யா கூறினார்.
திண்டிவனத்தையடுத்த கோனேரிகுப்பம் கல்விக்கோயில் வளாகத்தை பசுமைக் கானகமாகவும், மலர்ச் சோலையாகவும் மாற்ற தீர்மானித்து அதற்கான பணிகளில் ஈடுபட்டிருக்கிறேன்.
அந்த நடவடிக்கைகளின் ஒரு கட்டமாக கல்விக் கோயில் வளாகத்தில் 14 வகையான மரக்கன்றுகள் நடப்பட்டிருக்கின்றன. மொத்தம் 4200 மரக்கன்றுகள் நட்டு வளர்க்கப்பட்டு வருகின்றன. என்னுடைய மேற்பார்வையில் நடப்பட்டிருக்கும் அவற்றில் 13 வகையான மரங்கள் அடுத்த 15 ஆண்டுகளுக்குப் பிறகு பணம் கொட்டும்.
14-ஆம் வகை மரமான நாவல் மரம் மட்டும் பணம் காய்க்காது. மாறாக பழம் காய்க்கும். அது இதய நோய் மற்றும் சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் ஏற்றது.
மரங்களின் வகைகள்:
1. நீர்மருது
2. மகாகனி
3. பூவரசு
4. சில்வர் ஓக்
5. இலுப்பை
6. வேங்கை
7. செம்மரம்
8. குமிழ் தேக்கு
9. வெண்கடம்பு
10. மலைவேம்பு
11. ரோஸ் வுட் ( Rose Wood )
12. மூங்கில்
13. தீக்குச்சி மரங்கள்
14. நாவல் - இது பழம் காய்க்கும்
பணம் காய்க்காது.
மொத்தமுள்ள 4200 மரக்கன்றுகளில் 3000 மரக்கன்றுகள் வனத்துறையால் இலவயமாக வழங்கப்பட்டவை. அதற்காக வனத்துறை அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
சமூக முன்னேற்ற சங்கத்தின் தலைவர் சிவப்பிரகாசம் வாயிலாக 900 மரக்கன்றுகளும், தீனதயாளன் நர்சரியிலிருந்து 300 மரக்கன்றுகளும் பெறப்பட்டு நடப்பட்டன. அவர்களுக்கும் என் நன்றிகள்.
No comments:
Post a Comment