சமூகநீதியைப் பார்க்காதே...
சமூகநீதியைக் கேட்காதே...
சமூகநீதியைப் பேசாதே...! - பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு அய்யா ஆதங்கம்.
தேசத்தந்தை மகாத்மா காந்தி மூன்று குரங்கு பொம்மைகளை வைத்திருந்தார். அந்த பொம்மைகள் அவருக்கு மிகவும் பிடித்தவை. சீன நாட்டிலிருந்து வந்த ஒருவர் இந்த பொம்மைகளை, காந்திக்கு பரிசாக தந்தாராம். தனது குருவாக எண்ணி அவற்றை பாதுகாத்து வந்ததாகவும், மிக உயர்ந்த தத்துவங்களை இவை உணர்த்துவதாகவும் காந்தி கூறுவார்.
அப்போதெல்லாம் எல்லாப் பள்ளிகளிலும் காந்தி அடிகளின் புகைப்படத்திற்கு கீழே இந்த மூன்று பொம்மைகளும், பள்ளிக்குள் நுழைந்தவுடன் மாணவர்கள் கண்ணில் தெரியும் வகையில் வைக்கப்பட்டிருக்கும். கண்களையும், காதுகளையும், வாயையும் மூடிக் கொண்டிருக்கும் அந்த குரங்கு பொம்மைகளின் கீழே “தீயதைப் பார்க்காதே…தீயதைக் கேட்காதே…தீயதைப் பேசாதே…” என்று எழுதப்பட்டிருக்கும். நல்லவற்றை மட்டுமே சிந்திக்கவும், பேசவும் வேண்டும் என்ற எண்ணத்தை, எப்போதும் இவை உணர்த்திக் கொண்டே இருக்கும்.
மகாத்மா காந்தி அவர்கள் வைத்திருந்ததைப் போலவே தமிழக அரசிடமும் மூன்று மாயக் குரங்கு பொம்மைகள் உள்ளன. அவை இப்போது தமிழ்நாட்டு மக்களுக்கு சொல்லிக் கொடுக்கும் செய்தி என்ன தெரியுமா?
சமூகநீதியைப் பார்க்காதே...
சமூகநீதியைக் கேட்காதே...
சமூகநீதியைப் பேசாதே...!
என்பது தான். வாழ்க சமூக நீதி!
No comments:
Post a Comment