பாமக தலைமை நிலைய செயலாளர் இசக்கி படையாட்சியார் திருவுருவப் படத்தை மருத்துவர் அய்யா அவர்கள் திறந்து வைத்தார் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு.
பாட்டாளி மக்கள் கட்சியின் தலைமை நிலையச் செயலாளராக பணியாற்றி மறைந்த இசக்கி படையாட்சியார் அவர்களின் திருவுருவப்பட திறப்பு விழா தைலாபுரம் தோட்டத்தில் உள்ள பாட்டாளி மக்கள் கட்சியின் அரசியல் பயிலரங்கத்தில் இன்று காலை நடைபெற்றது.
பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் இந்த விழாவில் பங்கேற்று இசக்கி படையாட்சியார் அவர்களின் உருவப்படத்தை திறந்து வைத்தார். இசக்கி படையாட்சியாரின் சிறப்புகள் குறித்தும் அவர் எடுத்துரைத்தார்.
பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் இந்த விழாவிற்கு தலைமையேற்று, இசக்கி படையாட்சி அவர்களுக்கும், தமக்கும் இடையிலான உறவு குறித்து உரையாற்றினார்.
பா.ம.க. கவுரவத் தலைவர் ஜி.கே.மணி, வன்னியர் சங்கத் தலைவர் பு.தா. அருள்மொழி, பா.ம.க. அரசியல் ஆலோசனைக் குழுத் தலைவர் பேராசிரியர் தீரன், சமூக முன்னேற்ற சங்கத் தலைவர் பேராசிரியர் ச.சிவப்பிரகாசம், பா.ம.க. பொதுச்செயலாளர் வடிவேல் இராவணன், பொருளாளர் திலகபாமா உள்ளிட்டோர் படத்திறப்பு விழாவில் பங்கேற்று இசக்கி படையாட்சியார் ஆற்றிய கட்சிப் பணிகளை நினைவு கூர்ந்து உரையாற்றினர்.
No comments:
Post a Comment