மாலை வேண்டுமா? போராட்டம் வேண்டுமா? - அமைச்சர் சேகர் பாபு முடிவெடுக்கட்டும் என அன்புமணி இராமதாஸ் காட்டம்!
பாட்டாளி மக்கள் கட்சி, தமிழ்நாடு மலர் காய் கனி வியாபாரிகள் நல சங்கம் மற்றும் கீரை மொத்த வியாபாரிகள் சங்கம் இணைந்து சென்னை கோயம்பேடு காய்கறி வணிக வளாகத்தில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதில் பங்கேற்று பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் பேசியதாவது:-
நெற்றியில் வியர்வை வந்தாலே அவர்களும் பாட்டாளிகள் தான்... எனக்கு மிகவும் பிடித்த இடம் இந்த கோயம்பேடு மார்க்கெட் தான்... இந்த இடம் விவசாயிகளுக்கு மையமாக இருக்கிறது, தாய் தந்தைக்கு பிறகு விவசாயத்தை நான் கண்ணாக பார்க்கிறேன்.
கோயம்பேடு வணிக வளாகத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தினம்தோறும் வந்து செல்கின்றனர் அப்படியான இடத்தில் அடிப்படை வசதிகள் இல்லாமல் உள்ளது. அரசுக்கு நாம் சார்பாக பல அழுத்தங்கள் கொடுத்து இருக்கிறோம்.
• அக்னிப்புரட்சி வாட்ஸ்அப்!
• https://whatsapp.com/channel/0029Va9bYNbAe5Vomu8a0d20
ஏதேதோ காரணங்களை கூறி கோயம்பேடு சந்தையை வேறு இடத்திற்கு மாற்ற நினைக்கும் எண்ணம் நடக்காது. இங்கு மால் போன்ற எதுவும் எங்களுக்கு வேண்டாம். மிகப் பெரிய கோயம்பேடு பேருந்து நிலையத்தை மாற்றி விட்டார்கள்.
அமைச்சர் சேகர் பாபு கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பொது பசுமை பூங்கா ஒன்றை உருவாக்க வேண்டும், இதனால் லட்சக்கணக்கான நடுத்தர மக்கள் பயன்பெறுவார்கள். அதோடு தொற்றா நோய்களிலிருந்தும் மக்கள் விடுபடுவார்கள்...
அரசு மூலம் வெள்ள நிவாரணமாக ரூ.6000 கொடுத்தது டாஸ்மாக் கடை மூலம் வசூல் செய்து விட்டது. அப்போது இருந்த கோபம், ஆக்ரோஷம் அனைத்தும் இப்போது மக்கள் மறந்து விட்டனர். பணத்தை இப்படி கொடுத்து வேறு வழியில் வாங்கி விட்டார்கள்.
நாம் விருப்பும் சென்னை என்ற ஆவணத்தை அரசிற்கு எழுதி கொடுத்தேன் ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அடுத்த வெள்ளம் அடுத்து 5 ஆண்டுகளில் வரும், இது சாபம் விடுவதாக எண்ணம் வேண்டாம் இதுதான் உண்மை... ஆனால் அதற்குள் பாமக ஆட்சி அமைக்கும்.
ஸ்மார்ட் சிட்டி என்று கொள்ளை அடித்து விட்டார்கள். அவர்கள் தான் ஸ்மார்ட், ஆகிறார்கள் நாம் அனைவரும் முட்டாள்கள். அதிகாரிகளும் அரசும் சேர்ந்து கொள்ளை அடித்து கொண்டு இருக்கிறார்கள்
சென்னை மக்கள் ஓட்டு போட வருவதில்லை, அவர்கள் ட்விட்டரில் மட்டும் பதிவு போடுகிறார்கள். 40 சதவீதம் பேர் மட்டுமே வாக்கு செலுத்துகிறார்கள். அவர்கள் கூட 500, 1000 வாங்கியவர்கள் தான் ஓட்டு போடுகிறார்கள்.
தமிழ்நாடு என்ற பெயர் மாரி குடிகாரநாடு என பெயர் மாறி விட்டது, கஞ்சா நாடாக தமிழ்நாடு மாறிவிட்டது. இந்த ஆபத்துகளை பற்றி பேச இங்க ஆள் இல்லை. இதே நிலை நீடித்தால் அடுத்த ஐந்து ஆண்டுகளில் மனித வள பிரச்சனைகள் வரக்கூடும்...
என்னிடம் ஆட்சி இருந்தால் ஒரே மாதத்தில் கஞ்சாவை ஒழிப்போம், மதுவை ஒழிக்க ஒரு நாள் போதும், காவல்துறையிலும் தற்போது ஆள் பற்றா குறை உள்ளது. இளைஞர்கள் நம் எதிர்காலம், நாம் அவர்களை நல் வழியில் கொண்டு செல்ல வேண்டும்
இருக்கிற இரண்டு கட்சிகளும் ஏரிகளை காலி செய்து விட்டார்கள். அவர்கள் சொல்வதெல்லாம் வரும் தேர்தலில் வெற்றி பெறுவதற்கான அறிவிப்புகள் மட்டுமே ஆனால் நாங்கள் அடுத்த தலைமுறை இளைஞர்கள் எப்படி வெற்றி பெற செய்வது என்றே பார்க்கிறோம்
சேகர் பாபு சொன்னது போல் எங்களுக்கு எந்த பிரமாண்டமும் வேண்டாம், கோயம்பேட்டில் 50 ஏக்கரில் பசுமை பூங்கா அறிவிக்க வேண்டும், இல்லையென்றால் அங்கு போராடக்கூடிய முதல் ஆள் நான் தான், அமைச்சர் சேகர் பாபுவிற்கு சொல்லி கொள்கிறேன். இதை நீங்கள் செய்தீர்கள் என்றால் உங்கள் வீட்டிற்கு வந்து மாலை போடுகிறேன், (மாலை வேண்டுமா போராட்டம் வேண்டுமா என அமைச்சர் சேகர்பாபு முடிவெடுக்கட்டும் )
முப்போகும் விளையும் நெய்வேலி விவசாய நிலங்களை அழித்து வருபவர்களுக்கு அரசு உடந்தையாக இருக்கிறது வேதனையளிக்கிறது...
• அக்னிப்புரட்சி வாட்ஸ்அப்!
• https://whatsapp.com/channel/0029Va9bYNbAe5Vomu8a0d20
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மருத்துவர் அன்புமணி இராமதாஸ்...
விரைவில் நாடாளுமன்ற தேர்தல் குறித்து அறிவிப்போம்... அதற்கான வியூகங்கள் தயார் செய்யப்பட்டு வருகிறது.
தமிழக அரசு பொங்கல் விடுமுறை நாட்களில் டாஸ்மார்க் கடைகளை 4 நாள் மூட வேண்டும்
அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சர் பொறுப்பு வழங்கப்படுவது குறித்த கேள்விக்கு உட்கட்சி பிரச்சினை அதற்கு நான் பதில் சொல்ல முடியாது....
அயோத்தி கோவிலுக்கு செல்வது குறித்த கேள்விக்கு தற்போது கூட்டம் அதிகமாக இருக்கும் பின்னர் செல்வேன்
ஜாக்டோ ஜியோ வினரின் போராட்டம் நியாயமானது. பழைய பென்ஷன் திட்டம் கொண்டு வருவோம் என திமுக வாக்குறுதி கொடுத்திருந்தது அதைத்தான் ஜாக்டோ ஜியோ வினர் தற்போது கேட்கிறார்கள்.
Home
அன்மைச்செய்திகள்
மாலை வேண்டுமா? போராட்டம் வேண்டுமா? - அமைச்சர் சேகர் பாபு முடிவெடுக்கட்டும் என அன்புமணி இராமதாஸ் காட்டம்!
மாலை வேண்டுமா? போராட்டம் வேண்டுமா? - அமைச்சர் சேகர் பாபு முடிவெடுக்கட்டும் என அன்புமணி இராமதாஸ் காட்டம்!
Share This
Tags
# அன்மைச்செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அன்மைச்செய்திகள்
Labels:
அன்மைச்செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment