அக்னிப்புரட்சி பத்திரிக்கை
ஆசிரியர் மீது தாக்குதல் நடத்திய சமூக விரோதிகள் கைது செய்து சிறையில் அடைத்த திருவேற்காடு காவல் ஆய்வாளருக்கு பாமக மற்றும் பத்திரிக்கை சார்பில் வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது.
அக்னிப்புரட்சி இதழின் அலுவலகம் திருவேற்காடு M.G.R நகர் மெயின் ரோட்டில் அமைந்துள்ளது. அவர் அங்கு 29.12.2023 அன்று இரவு 10.12 மணி அளவில் அலுவலகத்தில் தனியாக இருந்து ஆசிரியர் பணியை செய்து வந்த த. நாராயணசாமி மீது சமூக விரோதிகள் மறும நபர்கள் மூன்றும் பேர் கொண்ட கும்பல் இருசக்கர வாகனத்தில் வந்து அலுவலகத்துக்குள் அத்துமீறி புகுந்து தனியாக இருந்த ஆசிரியரை கத்தி மற்றும் பயங்கர ஆயுதங்களால் கொலைவெறி தாக்குதல் நடத்தினர்.
இந்நிகழ்வில் நல்வாய்ப்பாக ஆசிரியர் உயிர் பிழைத்தார். இது சம்பந்தமாக திருவேற்காடு T5 காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு. அதன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து, காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்திய நிலையில் கொலைவெறி தாக்குதல் நடத்திய சமூகவிரோதிகள் 1.மதுரவாயில் ஜெகன், 2. திருமிழிசை உன்னி (எ) அசோக், மற்றும் 3. ஹரிசுதன் என்கிற குற்றவாளிகள் என விசாரணையில் தெரிய வந்தது. இவர்கள் மூவரையும் திருவேற்காடு T5 காவல் ஆய்வாளர் தலைமையில் 5 தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை தேடி வந்த நிலையில், குற்றவாளிகள் 1.மதுரவாயில் ஜெகன், 2. தருமிழிசை உன்னி (எ) அசோக், 3.ஹரிசுதன் ஆகியோரைக் காவல் துறையினர் கைது செய்துள்ளனர். இந்த மூன்று சமூக விரோதிகளை முறைப்படி கைது செய்து, காவல்துறையினரின் முழு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த குற்றவாளிகளை விரைவில் கண்டுபிடிப்பதற்கு உறுதுணையாக இருந்த திருவேற்காடு காவல் நிலைய ஆய்வாளர் விஜய் கிருஷ்ணராஜ் மற்றும் துணை ஆய்வாளர்கள், காவலர்களுக்கு 18.01.2024 அன்று அம்பத்தூர் நகர முன்னாள் சேர்மன் கே.என்.சேகர், திருவள்ளூர் மத்திய மாவட்ட செயலாளர் ஆவடி ந.அனந்தகிருஷ்ணன் அவர்களின் ஆலோசனைபடி பா.ம.க. மற்றும் அக்னிப்புரட்சி இதழின் சார்பில் நேரில் சந்தித்து மனமார்ந்த நன்றியும், பாராட்டுக்களும் தெரிவிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் ஆசிரியர் த.நாராயணசாமி, பாமக மாநில செயற்குழு உறுப்பினரும், இதழின் துணை ஆசிரியர் சு.செல்வகுமார், திருவேற்காடு பாமக நகர செயலாளர் இரா.செந்தில்குமார், நகர தலைவர் வழக்கறிஞர் கே.குமார், மற்றொரு துணை ஆசிரியர் எம்.குமார், நகர் இளைஞர் அணி தலைவர் ஆறுமுகம், 10 வது வார்டு செயலாளர் எஸ்.முருகன் வார்டு தலைவர் லாரி சரவணன் 3 வது வார்டு செயலாளர் முருகன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
No comments:
Post a Comment