பல்வேறு சமூக சேவைகள் செய்து வரும் மருத்துவர் இராமதாசுக்கு மத்திய அரசு பாரத ரத்னா விருது வழங்கவில்லை என வருத்தப்படுகிறேன். - பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் பேச்சு - Agnipuratchi

பல்வேறு சமூக சேவைகள் செய்து வரும் மருத்துவர் இராமதாசுக்கு மத்திய அரசு பாரத ரத்னா விருது வழங்கவில்லை என வருத்தப்படுகிறேன். - பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் பேச்சு

Share This


பல்வேறு சமூக சேவைகள் செய்து வரும் மருத்துவர் இராமதாசுக்கு மத்திய அரசு பாரத ரத்னா விருது வழங்கவில்லை என வருத்தப்படுகிறேன். - பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் பேச்சு 

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில் தேர்தல் வியூகம் மற்றும் கூட்டணி அமைப்பது தொடர்பாக பாமக சார்பில் சிறப்பு பொதுக்குழு கூட்டம் சென்னை எழும்பூரில் 01.02.2024 அன்று நடைபெற்றது.

அதில் அக்கட்சியின் நிறுவனர் இராமதாசு அய்யா மற்றும் அக்கட்சியின் தலைவர் அன்புமணி இராமதாஸ், கௌரவ தலைவர் ஜி.கே.மணி பாமக பொது செயலாளர் வடிவேல் ராவணன் பொருளாளர் திலகபாமா இணை பொது செயலாளர் ஏ கே மூர்த்தி வன்னியர் சங்க  தலைவர் பு.தா. அருள்மொழி, அரசியல் ஆலோசகர் தீரன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் உறுப்பினர்கள் தொண்டர்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.

இந்த பொது குழு கூட்டத்தில் தமிழகத்தில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை எடுக்க வேண்டும், வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீட்டை வழங்க தாமதிக்கும் தமிழக அரசுக்கு கண்டனம்,  கூட்டணி தொடர்பாக முடிவு எடுக்கும் அதிகாரம் பாமக நிறுவனர் இராமதாசு அய்யாவுக்கு வழங்குதல் உள்ளிட்ட 25 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது .

அப்போது மேடையில் பேசிய பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் : 

குடியரசு தினத்தை ஒட்டி மத்திய அரசு விருதுகளை அறிவித்தது... அதில் தகுதியான பலருக்கு விருதுகள் கொடுக்கப்பட்டது.  அதே நேரத்தில் அதில் எனக்கு ஒரு வருத்தம்.

85 வயதாகும் மருத்துவர் இராமதாசு அய்யாவுக்கு பாரத ரத்னா வழங்கவில்லை என வருத்தப்படுகிறேன்.

• அக்னிப்புரட்சி வாட்ஸ்அப்!
• https://whatsapp.com/channel/0029Va9bYNbAe5Vomu8a0d20

முதல்வராக இருந்து சாதனை செய்வது பெரிய வியம் இல்லை. ஆனால் எந்த பவியிலும் இல்லாம் மரு.ராமதாஸ் பல சாதனைகளை செய்துள்ளார்...

சமூக நீதி என்று சொன்னால் மரு. ராமதாஸ் மட்டுதான் உள்ளார்... இந்தியாவில் எந்த கட்சியாவது நிழல் பட்ஜெட் வெளியிடுகிறது பாமக.

எந்த முக்கிய பிரச்சனையாக இருந்தாலும் முதலில் குரல் கொடுப்பது அறிக்கை கொடுப்பது பாமக தான்.. மற்றவர்கள் பின்னர் நம்முடைய அறிக்கையை பார்த்து காப்பி அடித்து வெளியிவார்கள்...

பெரியாரின் வாரிசுகள் என்று சொல்லிக்கொள்கிறார்கள் ஆனால் சமூகநீதிக்காக குரல் கொடுப்பதே இல்லை...

30 ஆண்டுகளாக பாமக போராடி வந்தது முடியவில்லை  பின்னர் ஆட்சி அதிகாரம் கிடைத்தது... பொது இடங்களில் புகை பிடிக்க கூடாது என்ற சட்டத்தை பாமக கொண்டு வந்தது...

பாமக ஆட்சிக்கு வர வேண்டும். அப்போது தான் நல்ல பல திட்டங்களை கொண்டு வர முடியும்..

மகளிர் மாதம் ரூ.1000, பொங்களுக்கு 1000, மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 6000 கொடுத்தோம் என முதல்வர் பேசுகிறார்... இதெலாம் மக்கள் வளர்ச்சி திட்டம்.. இதன் மூலம் மக்கள் முழுமையான வளர்ச்சி பெற்று விடுவார்களா ..?

மக்கள் நல திட்டம் என்றால் பாமக கொண்டு வந்த 108 அவசர ஊர்தி போல இருக்க வேண்டும்..

தமிழை வைத்து ஆட்சிக்கு வந்தவர்கள் தமிழை வளர்க்கவில்லை...

இனி வரும் காலம் பாமக வின் காலம்.. கூட்டணி தொடர்பாக மருத்துவர் இராமதாசு அய்யா அறிவிப்பாவர் ... அவர் யாருடன் கூட்டணி அமைத்தால் நாம் களத்தில் இறங்கி உழைக்க வேண்டும்....

பின்னர் பேசிய பாமக நிறுவனர் இராமதாசு அய்யா : 

மக்கள் மனங்களில் நான் வாழ்கிறேன்... அதை விட சிறந்த விருது எதுவுமில்ல...

மனித நேரயர்,  மக்கள் காவர் என்று என்னை சொல்கிறீர்கள் இதை விடவிவா பரத ரத்னா உயர்ந்தது.

கடந்த மாதம் அமெரிக்காவிலிருந்து வந்த தொண்டர் ஒருவர் நீங்கள் பெற்றுக் கொடுத்த எம் பி சி இட ஒதுக்கீட்டால் இன்று நான் நன்றாக படித்து நல்ல நிலையில் உள்ளேன் லட்சங்களில் சம்பாதிக்கிறேன்.

என் ஆயுளில் பாதியை உங்களுக்கு கொடுக்க விருப்பப்படுகிறேன் என்றெல்லாம் மகிழ்ச்சியோடு பேசினார்.

இதைவிட சிறந்த பாராட்டு விருது வேறு எதுவும் எனக்கு வேண்டாம். 
வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் சரியான கூட்டணி அமைப்பேன்.
வெற்றி பாதைக்கு பாமக வை அழைத்து செல்வேன்..

பாட்டாளி மக்கள் கட்சி சிறப்பு பொதுக்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்.  

அரசியல் தீர்மானம்: நாடாளுமன்ற மக்களவைக்கான தேர்தல் வரும் ஏப்ரல், மே மாதங்களில் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அத்தேர்தலுக்கான அறிவிப்பு இம்மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என்று தெரிகிறது. பாட்டாளி மக்கள் கட்சிக்கு மட்டுமின்றி தமிழ்நாட்டின் நலன்களை பாதுகாப்பதில் இந்தத் தேர்தல் மிகவும் முக்கியமானது என்று பாட்டாளி மக்கள் கட்சி கருதுகிறது.

இந்திய அரசியலமைப்புச் சட்டம் இயல்பாகவே மத்திய அரசும், மாநில அரசுகளும் இணைந்து செயல்படுவதை உறுதிசெய்கிறது. அதற்கேற்ற வகையில், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவுகள் அமைக்கப்பட்டதன் நோக்கம் ஒட்டுமொத்த இந்தியாவின் அரசு நிர்வாகம் எந்த சிக்கலும் இல்லாமல் இயங்க வேண்டும் என்பதுதான். இதை மத்திய, மாநில அரசுகள் புரிந்து கொண்டு செயல்படும் வரை யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை.

ஆனால், கடந்த அரை நூற்றாண்டுக்கும் மேலாகவே மாநில அரசுகளின் அதிகாரங்களை மத்திய அரசு பறிக்கும் போக்கு அதிகரித்து வருகிறது. நெருக்கடி நிலை காலத்தில், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மாநிலப்பட்டியலில் இருந்த 5 பொருட்கள் பொதுப்பட்டியலுக்கு மாற்றப்பட்டன. அப்போது இது தற்காலிக நடவடிக்கையாகவே பார்க்கப்பட்டது. ஆனால், அதன்பின் அரைநூற்றாண்டு ஆகப்போகும் நிலையில் இன்றுவரை அந்த 5 பொருட்களும் மாநிலப் பட்டியலுக்கு மாற்றப்படவில்லை. மத்தியில் ஆட்சி செய்யும் கட்சிகள் மாறினாலும் கூட, மாநில அதிகாரத்தைப் பறிக்கும் போக்கு மட்டும் மாறவே இல்லை.

• அக்னிப்புரட்சி வாட்ஸ்அப்!
• https://whatsapp.com/channel/0029Va9bYNbAe5Vomu8a0d20

தமிழ்நாட்டு மாணவர்கள் மீது நீட் தேர்வு திணிக்கப்பட்டதற்கும், தமிழர்கள் தங்களின் வீரத்தின் அடையாளமாகவும், பண்பாட்டுச் சின்னமாகவும் கருதிய ஜல்லிக்கட்டுப் போட்டிகள் தடைசெய்யப்பட்டது ஆகிய அனைத்திற்கும் மாநிலப்பட்டியலில் இருந்த 5 பொருட்கள் மத்தியப் பட்டியலுக்கு மாற்றப்பட்டது தான் காரணம் ஆகும். இந்த அநீதிக்கு எதிராக போராடவேண்டியது மாநிலக்கட்சிகளின் கடமை ஆகும். அந்தக் கடமையை பா.ம.க. மிகச்சரியாக நிறைவேற்றி வருகிறது.

நாடாளுமன்ற மக்களவையில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு போதிய பிரதிநிதித்துவம் இருந்த காலங்களில் எல்லாம் மாநில சுயாட்சி உரிமைக்காகவும், சமூகநீதிக்காகவும் பாட்டாளி மக்கள் கட்சி குரல்கொடுத்தும், போராடியும் வந்திருக்கிறது. மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இடஒதுக்கீட்டைக் கொண்டு வருவது சாத்தியம் இல்லை என்று கூறப்பட்ட நிலையில்,  ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் அங்கம் வகித்த பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள், கூட்டணியின் ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் போர் முழக்கமிட்டு அதை சாத்தியமாக்கினார். அதற்கு முதன்மை காரணமாக இருந்தது பா.ம.க.வுக்கு உரிய பிரதிநிதித்துவம் இருந்ததுதான்.

மருத்துவப் படிப்புக்கான அகில இந்திய ஒதுக்கீட்டில் பட்டியலின மாணவர்கள், பழங்குடியின மாணவர்களுக்கு சமூக நீதி ஒதுக்கப்பட்டே வந்தது. மத்திய சுகாரத்துறை அமைச்சராக மருத்துவர் அன்புமணி இராமதாசு அவர்கள் இருந்த போதுதான் மருத்துவர் அய்யா அவர்களின் ஆணைப்படி,  இந்திய சமூக அநீதியைக் களைந்து அவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கினார்.

ஒட்டுமொத்த உலகமே போற்றக்கூடிய 108 அவசர ஊர்தித் திட்டம், உலகின்  மிகப் பெரிய சுகாரத்திட்டமான தேசிய ஊரக சுகாதார இயக்கம், எய்ம்ஸுக்கு இணையான மருத்துவமனைகளை நாடு முழுவதும் திறக்கும் திட்டம், குட்கா உள்ளிட்ட புகையிலைப் பொருட்களுக்கு தடைவிதிக்கும் சட்டம், தமிழ்நாட்டிற்கு பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான மருத்துவக் கட்டமைப்புத் திட்டங்கள் போன்றவற்றை மருத்துவர் அன்புமணி ராமதாசு அவர்கள் கொண்டுவருவதற்கு காரணமும் மக்களவையில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு இருந்த வலிமைதான்.

பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்தவர்கள் மத்திய தொடர்வண்டித்துறை அமைச்சராக இருந்த போது தான் தமிழ்நாட்டிற்கு மிக அதிக தொடர்வண்டித் திட்டங்கள் கிடைத்தன. நீண்டகால கனவான சேலம் கோட்டமும் சாத்தியமானது. இப்படியாக தமிழ்நாட்டிற்கும், சமூகநீதிக்கும் பாட்டாளி மக்கள் கட்சியால் கிடைத்த நன்மைகளின் பட்டியல் மிக நீண்டது. மக்களவையில் பா.ம.க. வலிமையாக இருந்ததால் தான் இது சாத்தியமானது.

மக்களவையில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு உரிய பிரதிநிதித்துவம் இல்லாத போதெல்லாம், சமூக நீதிக்கும், தமிழகத்தின் நலன்களுக்கும் பின்னடைவு ஏற்பட்டு வந்திருக்கிறது. இந்த உண்மைகள் சொல்லும் பாடம் என்னவெனில், மக்களவைத் தேர்தல்களில் பா.ம.க.வின் வெற்றி தமிழ்நாட்டின் நன்மை என்பதுதான். அதனால்தான் 2024 மக்களவைத் தேர்தலில் கணிசமான இடங்களில் வெற்றி பெற வேண்டும் என்று இலக்கு நிர்ணயித்து, அதற்கான உத்திகளை வகுத்து பாட்டாளி மக்கள் கட்சி செயல்பட்டு வருகிறது.

அதன் ஒருகட்டமாக, 2024 மக்களவைத் தேர்தலில் மாநில நலனிலும், தேசிய நலனிலும் அக்கறை கொண்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிட பாட்டாளி மக்கள் கட்சியின் சிறப்புப் பொதுக்குழுக் கூட்டம் தீர்மானிக்கிறது. எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி அமைப்பது என்பது குறித்து முடிவெடுக்கும் அதிகாரத்தை கட்சியின் நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்களுக்கு அதிகாரத்தை வழங்குகிறது. நிறைவாக பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது. அப்பொழுது பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் தொண்டர்களோடு அமர்ந்து மதிய உணவு அருந்தினார்.

• அக்னிப்புரட்சி வாட்ஸ்அப்!
• https://whatsapp.com/channel/0029Va9bYNbAe5Vomu8a0d20

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages