அக்னிப்புரட்சி செய்தியாளர்கள் சமூக அக்கறையுடனும் உண்மையாக உழைக்க வேண்டும். - முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே.மூர்த்தி பேச்சு - Agnipuratchi

அக்னிப்புரட்சி செய்தியாளர்கள் சமூக அக்கறையுடனும் உண்மையாக உழைக்க வேண்டும். - முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே.மூர்த்தி பேச்சு

Share This

அக்னிப்புரட்சி செய்தியாளர்கள் சமூக அக்கறையுடனும் உண்மையாக உழைக்க வேண்டும். - முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே.மூர்த்தி பேச்சு

அக்னிப்புரட்சி இதழின் ஆலோசனை கூட்டம்  04.02.2024 அன்று ஞாயிற்றுக் கிழமை  சென்னை, தி.நகர், பர்கிட் சாலை, எண்.27/11, என்ற முகவரியில் நமது பா.ம.க. கட்சி அலுவலகத்தில் காலை 11 மணி அளவில் அக்னிப்புரட்சி இதழின் ஆசிரியர் நாராயணசாமி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் முன்னாள் மத்திய இணை அமைச்சரும், பாமக இணப்பொது செயளாலர் ஏ.கே.மூர்த்தி அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது பேசிய ஏ.கே.மூர்த்தி அவர்கள், இந்த ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் அக்னிப்புரட்சி செய்தியாளர்கள் செய்ய வேண்டிய கடமைகளையும், அவர்கள் எப்படி செயல்பட வேண்டும் என்று பல ஆலோசனைகளை வழங்கினார். அக்னிப்புரட்சி செய்தியாளர்கள்  இந்திய ஜனநாயக நாட்டில் நான்காவது தூணாக செயல்படுவது ஊடகங்கள் அவர்கள் காவல்துறை நுழையாத இடத்தில் கூடும் பத்திரிகையாளர்கள் நுழைந்து செய்திகளை சேகரித்து வருவார்கள். எனவே நாட்டில் நடைபெறும் சமூக பிரச்சினைகளை, உடனுக்குடன் மக்கள் பார்வைக்கு கொண்டு செல்ல வேண்டும்.  அவ்வாறு செயல்படும் போது சமூக வியாதிகளால் பிரச்சனைகள் வர தான் செய்யும். அதற்கு தேவையான பாதுகாப்பு பாட்டாளி மக்கள் கட்சி வழங்கும். மேலும் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் ஐயா, மற்றும் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்களின் செயல்பாடுகளையும், அவர் செய்த சாதனைகளை அக்னிப்புரட்சி இதழ் மற்றும் சமூக ஊடகங்கள் மூலம் உலக மக்கள் அறியும் வண்ணம் செய்திகளை பரப்ப வேண்டும். இன்றைய காலகட்டத்தில் அனைத்து கட்சிகளுக்கும் ஊடகங்கள் இருக்கின்றன, அந்த வகையில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு வரும் ஒரே அச்சு ஊடகம் அக்னிப்புரட்சி இதழ் இந்த ஊடகத்தின் பணி புரியும் அனைவரும் ஒன்றை கவனத்தில் கொள்ள வேண்டும். கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக சமூக அக்கறையுடனும், நாட்டின் எதிர்கால நலன் கருதியும் செயல்படும் ஒரே கட்சி பாட்டாளி மக்கள் கட்சி தான், அந்தக் கட்சி எதிர்காலத்தில் ஆட்சி அமைய ஆட்சி அமைக்க தங்கள் பணிகளை சிறப்பாக செய்ய வேண்டும். என்று கேட்டுக்கொண்டார், மேலும் சிறப்பாக செயல்படாத செய்தியாளர்களை மாற்று ஏற்பாடு செய்ய வலியுறுத்தினார்.

தொடர்ந்து அக்னிப்புரட்சி செய்தியாளர்களுக்கு 2024 ஆண்டுக்கான அடையாள அட்டை பெறாதவர்கள் இந்த கூட்டத்தில் வழங்கப்பட்டது. 

இந்தக் கூட்டத்தில் இதழின் இணை ஆசிரியர் நெல்லை மகாராஜன், துணை ஆசிரியர் செல்வம், இதழின் ஆலோசகர் ர.செ. வெங்கடேசன், தலைமை செய்தியாளர் நந்தகுமார்,  விளம்பர மேலாளர் அம்பாசமுத்திரம் மரகத சுப்பிரமணியன், மாவட்ட செய்தியாளர்கள் தென்காசி மகாதேவன், சென்னை ராம்குமார், கள்ளக்குறிச்சி பாலகிருஷ்ணன், புதுவை லோகநாதன், அரியலூர் கார்மேகம், திருப்பத்தூர் அன்பரசு மற்றும் தொகுதி செய்தியாளர்கள் அரக்கோணம் சீனிவாசன் அம்பாசமுத்திரம் சிதம்பர கணேசன், அரியலூர் சின்னமணி உளுந்தூர்பேட்டை பாலாஜி தென்காசி மணிவண்ணன் சென்னை சகாதேவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இறுதியாக கலந்து கொண்ட உறுப்பினர்கள் மத்திய உணவு வழங்கப்பட்டது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages