1,000 ஆண்டுகள் பழமைவாய்ந்த கைலாசநாதர் கோயில் கும்பாபிஷேகம் - ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்பு. - Agnipuratchi

1,000 ஆண்டுகள் பழமைவாய்ந்த கைலாசநாதர் கோயில் கும்பாபிஷேகம் - ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்பு.

Share This

  1,000 ஆண்டுகள் பழமைவாய்ந்த கைலாசநாதர் கோயில்  கும்பாபிஷேகம் - ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்பு.

    சேலம் மாவட்டம் தாரமங்கலத்தில் உள்ள 1000 ஆண்டுகள் பழமைவாய்ந்த கைலாசநாதர் கோயில் கும்பாபிஷேகம் விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. 

  
  20ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் கும்பாபிஷேக விழாவில், யாக சாலையில் இருந்து புனித நீர் குடங்கள் ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு ராஜகோபுரம் உள்ளிட்ட கோபுரங்களில் ஊற்றி குடமுழுக்கு விழா நடைபெற்றது. அப்போது அங்கு கூடியிருந்த ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. மேலும், ஹெலிகாப்டர் வாயிலாக பூக்களும் தூவப்பட்டன. 
இதனையடுத்து கைலாசநாதர், சிவகாமி அம்மனுக்கு புனித நீர் அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு தீப ஆராதனை காட்டப்பட்டது. இந்நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமசந்திரன், மாவட்ட ஆட்சியர் ரோகிணி உட்பட பலர் கலந்து கொண்டனர். 
  

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages