யாருக்காக இந்தபசுமை சாலை ??
சென்னை முதல் சேலம் வரை பசுமை சால் திட்டம் செயல்படுத்த பட உள்ளது அது பற்றி ஒர் பார்வை.
இந்த திட்டம் நிச்சயமாக சாமணியனுக்காக இல்லை
( 274 கிலோமீட்டர் ) அடர்ந்த வனப்பகுதி மற்றும் விவசாய நிலங்கள்(45 கிலோமீட்டர் ) சமதளம் அதாவது விவசாய நிலம் 600 அடி முதல் 900 அடி அகலம் 11,000 கோடி 100% சதவீத அந்நிய முதலீடு
சேலம் பகுதியில் துவங்கி தருமபுரி,அரூர்,தீர்த்தமலை,செங்கம்,
திருவண்ணாமலை, காஞ்சிபுரம் வழியாக சென்னை வரை இந்த சாலையானது நீள்கிறது .இதில் திருவண்ணாமலை மாவட்டத்தில் 122 கிலோமீட்டர் அடர்ந்த வனப்பகுதி விவசாய நிலம் 22 கிலோமீட்டர் தருமபுரி 52கிலோமீட்டர் அடர்ந்த வனப்பகுதி மற்றும் விவசாயநிலம்
சேலம் 36 கிலோமீட்டர் அடர்ந்த வனப்பகுதி மற்றும் விவசாயநிலம்
கிருஷ்ணகிரி 2 கிலோமீட்டர் காஞ்சிபுரம் 45 கிலோமீட்டர் அடர்ந்த வனப்பகுதி மற்றும் சமதளம்( காடுகள் நிறைந்து செழுமையாக உள்ள ஜருகுமலையில் 3 இடங்களில் சுரங்க பாதை )
இப்படி வரையறுக்கப்பட்ட நிலங்களில்
தான் இந்த சாலையை அமைக்க போகின்றனர் .
இப்படி வனப்பகுதிகளையும் விவசாய நிலங்களையும் அழித்து யாருக்காக இந்த சாலை என்று கேட்டால் நிச்சயம் சாமணியனுக்கு அல்ல
சேலத்தில் இருந்து 274 km 3 மணி நேரத்தில் கடந்து சென்னைக்கு செல்ல வேண்டும் என்று எந்த அரசிடமும் எந்த பொதுமக்களும் கோரிக்கை வைக்க வில்லை.
ஆனால் 11,000 கோடி முதலீட்டில் தமிழகத்தின் மீது ஏன் இந்த திடீர் கரிசனம்
சேலத்தில் இருக்கும் கஞ்சமலையிலும், திருவண்ணாமலையில் அமைந்துள்ள
கவுத்தி வேடியப்பன் மலையிலும் இருக்கும் இரும்பு தாது கனிமவளங்கள் 90 ஆண்டுகளுக்கு எடுக்க முடியும்.
ஆம் இந்த சாலையானது சேலம் கஞ்சமலை யையும் கவுத்தி_வேடியப்பன் மலையையும் தொடர்பு படுத்தி சென்னை எண்ணூர் துறைமுகம் வரை முடிவடைகிறது இப்போது புரியும் இவர்களது நோக்கம்.
இவர்களது நோக்கம் கஞ்சமலையில் உள்ள வளமும்,கவுத்தி வேடியப்பன் மலையில் உள்ள வளமும், மட்டுமே 3 மணிநேரத்தில் 120 கிலோமீட்டர் வேகத்தில் இந்த சாலையில் என்ன பயணிக்க இருக்கிறது என்பதும் இப்போது புரியும். இவ்வாறு சமுக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளார்கள்.
இப்போதே திருவண்ணாமலை மாவட்டத்தில் விவசாய நிலங்களை கையகப்படுத்தும் முயற்சியில் இறங்கி விட்டனர் அந்த படங்கள் தான் கீழே உள்ளது
No comments:
Post a Comment