ரஷியாவுடன் பாதுகாப்பு ஒப்பந்தம் இந்தியாவிற்கு பொருளாதார தடை விதிப்பா?
டொனால்டு டிரம்ப் கொண்டுவந்த சட்டத்தின்படி ரஷியாவுடன் பாதுகாப்பு ஒப்பந்தம் செய்யும் நாடுகளுக்கு தடை விதிக்கலாம்
ரஷியாவிடம் இருந்து இந்தியா ‘எஸ்.400- டிரையம்ப்’ வழிமறிப்பு ஏவுகணைகளை வாங்குவதை அமெரிக்கா உன்னிப்பாக கவனித்து வருகிறது.
இந்நிலையில் ரஷியாவுடன் இந்தியா ஒப்பந்தம் செய்கிறது என்பதற்காக பொருளாதார தடையை முன்னெடுத்தால் இந்தியா-அமெரிக்கா உறவில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என அமெரிக்க எம்.பி.க்கள் மற்றும் நிபுணர்கள் எச்சரிக்கையை விடுத்து உள்ளார்கள்.
ரஷியாவிடம் இருந்து ஏவுகணைகளை வாங்கும் இந்தியாவிற்கு பொருளாதார தடையை அமெரிக்கா விதிக்க கூடாது என அந்நாட்டு எம்.பி.க்கள் கூறிஉள்ளார். வாஷிங்டன்னில் இந்தியா - அமெரிக்கா இடையிலான நட்புறவு தொடர்பான நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட எம்.பி.க்கள், வல்லுநர்கள், இந்தியா மீது பொருளாதார தடை விதிப்பு என்பது இருநாட்டு உறவில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எச்சரிக்கையை முன்வைத்தார்கள். அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் ஜோ குரோலே பேசுகையில், “அமெரிக்காவின் எதிரிகளை எதிர்க்கும் சட்டமானது முக்கியமான விவகாரம் என்று நான் நினைக்கிறேன், இதனை சரிசெய்ய வேண்டும். இந்தியா மற்றும் அமெரிக்காவிற்கு இடையே பேச்சுவார்த்தை நடைபெற வேண்டும். நம்முடைய இலக்கானது இந்தியாவின் மீது பொருளாதார தடையை விதிக்க கூடாது என்பதுதான்,” என்றார்.
No comments:
Post a Comment