"சிறுமிகள் கற்பழிப்பு: பிரதமர் மோடியின் நண்பருக்கு ஆயுள் தண்டனை! அதிர்ச்சியளிக்கும் காணொலி!
சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் சாமியார் ஆசாராம் பாபுவுக்கு ஆயுள் தண்டனை விதித்து ராஜஸ்தான் ஜோத்பூர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது. இந்தக் கொடூர சாமியார் இந்திய பிரதமர் மோடியின் நண்பர் ஆகும்.
வட இந்திய மாநிலங்களில் ஆசிரமங்களை நிறுவி ஆன்மீகப் பணி என்கிற பெயரில் பாலியல் வன்கொடுமைகளை நடத்தி வந்தார் சாமியார் ஆசாராம் பாபு.
சாமியார் ஆசாராம் பாபு மீது குஜராத், உபி சிறுமிகள் பாலியல் வன்கொடுமை புகார்களைத் தெரிவித்தனர். 2013-ம் ஆண்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட வழக்கில் நேற்று (25.4.2018) தீர்ப்பளிக்கப்பட்டது. பிரதமர் மோடியின் நண்பர் சாமியார் ஆசாராம் பாபு குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். அவருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது
"உன் நண்பன் யார் என்று சொல்.. நீ யாரென்று சொல்கிறேன்" என்பது நாட்டில் காலம் காலமாக வழங்கும் பழமொழி.
பாஜக - ஆர்.எஸ்.எஸ் அமைப்பிற்காக பாடுபடும் சாமியார்கள், அரசியல் தலைவர்கள், கவர்னர்களின் வரலாறு இப்படித்தான் இருக்கிறது! இது எங்கு போய் முடியுமோ?!
கற்பழிப்பு சாமியாருக்கும் நரேந்திர மோடிக்கும் உள்ள நெருக்கமான நட்பினை இந்த காணொலியில் பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்:
https://youtu.be/F6bGSvQ2Vvs
No comments:
Post a Comment