குளத்தில் குவியும் கோடிகள்!! குளிப்பவர்களுக்கோ இலவச நோய்கள்!!! - Agnipuratchi

குளத்தில் குவியும் கோடிகள்!! குளிப்பவர்களுக்கோ இலவச நோய்கள்!!!

Share This

பெருநகர சென்னை மாநகராட்சி மண்டலம்-9, வார்டு-114, உலகப்புகழ் பெற்ற சென்னை மெரீனா கடற்கரையின் அணுகுசாலையை ஒட்டி மாநகராட்சிக்கு சொந்தமாக நீச்சல் குளம் உள்ளது அது தற்போது தனியார் பராமரிப்பில் ஒப்படைக்கப்பட்டுள்ளது   காலை  5:30 மணி முதல் மாலை 6:00 மணிவரை நபர் ஒருவருக்கு ஒரு மணி நேரத்திற்கு ரூபாய்  15 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இங்கு தினமும் ஆயிரக்கணக்கான நபர்கள் குறிப்பாக தற்போது தொடங்கியுள்ள கோடைகாலத்தில் பல்லாயிரக்கணக்கான நபர்கள் குளியல் போடுகின்றனர். ஆசியாவின் மிகப்பெரிய கடற்கரையில் மிக நீளமான நீச்சல் குளமாக இருக்கும் நிலையில் தனியார் நிறுவனம் வருவாய் ஈட்டுவதில் மட்டுமே கவனம் செலுத்துகின்றன. தனியார் நிறுவனத்தால் நீச்சல் குளத்தை சரியான முறையில் பராமரிக்காததால் கழிவு நீர் குளம் போல் உள்ளது மேலும் கரப்பான் பூச்சி உள்ளிட்ட பல்வேறு உயிரினங்கள் செத்து மிதக்கின்றன, சுற்றுப்புற பகுதிகள் சுகாதார சீர்கேட்டால் மிகவும் துர்நாற்றம் வீசுகிறது, நீரையும் உடனுக்குடன் மாற்றாமல் பல நாட்களுக்கு பயன்படுத்தப்படுகிறது, குளத்தில் பிளாஸ்டிக் உள்ளிட்ட குப்பை கழிவுகள் மிதக்கின்றன மேலும் நீச்சல் குளத்தில்  குளோரின் திரவமாக ஊற்றாமல் மூட்டை மூட்டையாக அளவுக்கு அதிகமாக துகள்களாக கொட்டுவதால் குளிப்பவர்களின் தலைமுடி உதிர்தல், கண் எரிச்சல், தோல் நோய் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளால் அவதிப்படுவதாக மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.  ஆகவே சென்னை மாநகராட்சி சரியாக பராமரிக்காத தனியார் நிறுவனத்தின் அங்கீகாரத்தை ரத்து செய்து மீண்டும் மாநகராட்சியோ அல்லது திறமையான, நேர்மையான, சேவை மனப்பான்மை உள்ள ஒரு தனியார் நிறுவனத்திற்கு பராமரிப்பு பணியை வழங்குமாறு பணிந்து கேட்டுக் கொள்கிறேன்.-

சாஜாகுணா
தகவல் அறியும் உரிமைச் சட்ட ஆர்வலர்

நன்றி :

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages