தூத்துக்குடியில் விலையேற்றம் - Agnipuratchi

தூத்துக்குடியில் விலையேற்றம்

Share This


தூத்துக்குடியில் 4வது நாளாக கடைகள் அடைக்கப் பட்டுள்ளதால் பால், மருந்து, உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் மக்கள் அவதி யடைந்துள்ளனர்.

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம், அதைத் தொடர்ந்து காவல்துறை நடத்திய துப்பாக்கிச்சூட்டால் தூத்துக்குடி மாநகரம் போர்க்களமாக மாறியுள்ளது.  கடந்த 3 நாட்களாக பேருந்துகள் இயக்கப்படவில்லை. வீட்டை விட்டு வெளியே சென்றால் என்ன நேருமோ என்ற அச்சம் நிலவுவதால் கடைகள் மூடப்பட்டே கிடக்கின்றன. தொழில் நகரமான தூத்துக்குடியில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.  வீட்டில் இருந்த பொருட்களைக் கொண்டு இதுவரை சமைத்த தூத்துக்குடி மக்கள், தீர்ந்துவிட்ட பொருட்களை வாங்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். 

மதுரையிலிருந்து ஒரு சிலர் வாங்கி வரும் பால், காய்கறி உள்ளிட்ட பொருட்களை பல மடங்கு விலைக்கு பொதுமக்கள் வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஒரு கிலோ தக்காளியின் விலை 100 ரூபாயை எட்டியுள்ளதால், மக்கள் பதற்றத்திற்கு நடுவே பரிதவித்து நிற்கின்றனர். ஒவ்வொரு நாளும் ஏதோ ஒரு வேலை செய்து வாழ்க்கையை நகர்த்துபவர்கள் வேலையும் இல்லாமல், கைச்செலவுக்கு பணமும் இல்லாமல் விழிபிதுங்கி காணப்படுகின்றனர். இந்த அவலத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தால் மட்டுமே தூத்துக்குடி இயல்பு நிலை திரும்பும் வாய்ப்புள்ளது. இதற்கிடையில் இன்று எதிர்க்கட்சிகள் சார்பில் மாநிலம் தழுவிய கடையடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வணிகர் கள் கடைகளை திறக்க அறிவுறுத்தியுள்ளதாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages