அத்தியாவசியப் பொருட்களில் ஒன்றாக மாறிவிட்ட பெட்ரோல், டீசல் விலைகள் கடந்த இரு வாரங்களாக தொடர்ந்து ஏறுமுகமாகவே உள்ளன. ஏழைகள், வசதி படைத்தோர், நடுத்தர குடும்பத்தினர் என்ற எந்த ஒரு பாகுபாடும் இல்லாமல் அனைவரையும் பாதிக்கும் எரிபொருட்களின் விலையை கட்டுக்குள் கொண்டுவர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பெட்ரோல், டீசல் விலைகளை சரக்கு மற்றும் சேவை வரிவிதிப்பின் கீழ் கொண்டு வருவதே இப்பிரச்னைக்கு சிறந்த வழி என்ற கருத்தும் கூறப்படுகிறது. இதனிடையே பெட்ரோல், டீசல் விலைகளை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியுமா என்ற அறைகூவலை பிரதமர் மோடி ஏற்கத் தயாரா என ராகுல்காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். மட்டைப்பந்து வீரர் விராட் கோலியின் உடற்பயிற்சி குறித்த அறைகூவலை ஏற்கும் பிரதமர், இதனை ஏன் ஏற்கக் கூடாது எனவும் அவர் வினவியுள்ளார்.
No comments:
Post a Comment