தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு குறித்த கேள்விக்கு, இதுபோன்ற நிகழ்வுகள் அன்றாடம் நடப்பவை தான் என சட்டப்பேரவை துணைத்தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கோவை வந்த அவரிடம், தூத்துக்குடியில் காவல்துறை நடத்திய துப்பாக்கிச்சூடு தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு இந்த ஆண்டு முதல் முறையாக தான் இதுபோல ஒரு நிகழ்வு நடந்துள்ளது என்றார். பெரிய நாட்டில் இப்படியான நிகழ்வுகள் நடந்து கொண்டு தான் இருக்கும் என்ற அவர், சாதாரண சாலை விபத்துடன் ஒப்பிட்டார்.
போராட்டத்தில் மாணவர்கள் களம் இறங்க வழிவகுப்பதால் மூன்று மாவட்டங் களில் இணைய தளத்தை தமிழக அரசு முடக்கியுள்ளதாகவும் அவர் விளக்கம் அளித்தார். துப்பாக்கிச்சூடு தொடர்பாக காவல்துறையினரை குறை கூற கூடாது என்றும் பொள்ளாச்சி ஜெயராமன் கேட்டுக்கொண்டார்.
No comments:
Post a Comment