தமிழகம் - ஜாக்டோ ஜியோ போராட்டம் - Agnipuratchi

தமிழகம் - ஜாக்டோ ஜியோ போராட்டம்

Share This


தூத்துக்குடி கலவரத்தில் ஊர்திகளை காவலர்களே எரித்துவிட்டு போராட்டக் காரர்கள் மீது பழிசுமத்துவதாக அரசு ஊழியர்கள், ஆசிரியர் சங்க கூட்டமைப்பினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

சென்னை குறளகம் அருகே, ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி அரசு ஊழியர் ஆசிரியர் கூட்டமைப்பினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தமிழக அரசு ராஜினாமா செய்யகோரி முழக்கங்கள் எழுப்பினர். இதேபோல திருவண்ணாமலை ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தப்பட்டது. நாகையில் நடைபெற்ற ஆர்பாட்டத்தில், தூத்துக்குடியில் அரசு ஊர்திகளை காவல்துறையினரே எரித்து விட்டு, அப்பாவி மக்கள் மீது பழிசுமத்துவதாக கூட்டமைப்பினர் குற்றம்சாட்டினர்

பெரம்பலூர் புறநகர் பேருந்துநிலையம் அருகே, தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர். திருவள்ளூரில் அமைதி ஊர்வலத்த்துக்குப் பிறகு  கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கோவை வ.உ.சி மைதானத்தில் தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட முயன்ற இளைஞர்களை காவல்துறையினர் தர தரவென இழுத்து சென்று கைது செய்தனர்.

பட்டுக்கோட்டை அஞ்சல் நிலையம் அருகே இணையதளம் வாயிலாக ஒன்றிணைந்த 200க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஸ்டெர்லைட் ஆலையை மூட கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். 

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages