தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டை கண்டித்து விவசாயிகள், மீனவர்கள் வணிகர்கள் என அனைத்து தரப்பினரும் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ராமேஸ்வரம், பாம்பன், தங்கச்சிமடம் பகுதிகளை சேர்ந்த மீனவர்கள் இன்று வேலைநிறுத்தம் செய்ததுடன் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்னர். தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குறைதீர் கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள், கண்ணில் கறுப்பு துணிக்கட்டி முழக்க மிட்டனர். பின்னர், வெளிநடப்பு செய்த அவர்கள், தூத்துக்குடி ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் மீது கொலை வழக்குப்பதிவு செய்யுமாறு வலியுறுத்தினர்.
கடலூர் பாரதி சாலையில் பொது நல அமைப்பினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். முகநூல் மூலம் ஒன்றிணைந்த இளைஞர்கள் கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் திரண்டதால் காவல்துறையினர் குவிக்கப்பட்டனர். சென்னை கோட்டை தொடர்வண்டி நிலையம் எதிரில் சாலை மறியலில் ஈடுபட்ட சட்டக் கல்லூரி மாணவர்கள் தமிழக அரசு பதவி விலக வலியுறுத்தி முழக்கமிட்டனர். புதுச்சேரியில் மறியலில் ஈடுபட்ட சமூக அமைப்பினர் பிரதமர் மோடி, எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் உருவப்படங்களை கொளுத்தினர்.
நாகையில் திரண்ட மீனவர்கள், காவல்துறையின் அட்டூழியத்திற்கு கண்டனம் தெரிவித்து முழக்கமிட்டனர். வந்தவாசியில் எடப்பாடி பழனிசாமியின் உருவ பொம்மையை எரித்து எஸ்.டி.பி.ஐ கட்சியினர் போராட்டம் நடத்தினர்.
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த வணிகர் கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதேபோல, கோவை, பரமகுடி, தேனி ஜெயங் கொண்டம் உள்ளிட்ட பகுதிகளில் வழக்குரைஞர்கள் பணி புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.
No comments:
Post a Comment