தூத்துக்குடி உள்ளிட்ட 3 மாவட்டங்களில் இணைதள சேவை முடக்கப்பட்டதால், மாணவர்கள் உள்பட பல்வேறு தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஸ்டெர்லைட் போராட்டம் காரணமாக தூத்துக்குடி, நெல்லை, குமரி ஆகிய 3 மாவட்டங்களில் இணையதள சேவைகள் முடக்கப்பட்டுள்ளன. அரசு அலுவல்கள் அனைத்தும் இணைய தளங்களுக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில், இணையதள சேவை முடக்கப்பட்டிருப்பதால் பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. பத்து மற்றும் பனிரெண்டாம் வகுப்பு முடித்த மாணவ- மாணவியர், மேற்படிப்பு தேவைகளுக்கு இணையதளங்களை நாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எய்ம்ஸ் உள்ளிட்ட நடுவண் அரசு கல்வி நிறுவனங்களில் விண்ணப்பிக்க முடியாததால் மாணவர்கள் அவதி அடைந்துள்ளனர். அவசரத் தேவைகளுக்கு பக்கத்து மாவட் டங்கள் அல்லது அண்டை மாநிலமான கேரளாவுக்கு சென்று இணையதளங் களை பயன்படுத்த வேண்டிய அவலம் நிலவுகிறது.
இணைய வசதி இல்லாததால் பயணச்சீட்டுக்களை முன்பதிவு செய்ய இயல வில்லை. வங்கி இணையதளங்களை பயன்படுத்த முடியவில்லை. இதனால் வணி கர்கள் உள்பட பல்வேறு தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே, 25, 26 மற்றும் 28 தேதிகளில் நடைபெறவிருந்த அண்ணா பல் கலைக் கழகத் தேர்வுகள், அடுத்த மாதம் 5,6 மற்றும் 7 ஆகிய தேதிகளுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதேபோல 3 மாவட்டங்களை சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவர்கள், மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டுள் ளது. இயல்புநிலை திரும்பியதாக அறிவிக்கப்பட்டதில் இருந்து 5 நாட்களுக்கு விண்ணப்பிக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment