ஊதிய உயர்வு கோரி மதுரையில் அஞ்சல் அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற கிராமப்புற அஞ்சல் ஊழியர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
ஏழாவது ஊதியக்குழு பரிந்துரையை நடைமுறைப்படுத்தக்கோரி நாடு முழுவதும் கிராமப்புற அஞ்சல் ஊழியர்கள் 7வது நாளாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள னர். இதே கோரிக்கையை வலியுறுத்தி மதுரை தொடர்வண்டி நிலையம் அருகே 200க்கும் மேற்பட்ட அஞ்சல் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் அங்கிருந்து ஊர்வலமாக சென்று அஞ்சல் அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற ஊழியர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
No comments:
Post a Comment