நில மோசடி வழக்கில் ராஜஸ்தானைச் சேர்ந்த பாஜக சட்டப் பேரவை உறுப்பினர் மதுரை நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
குறைந்த விலைக்கு நிலம் தருவதாக கூறி பொதுமக்களிடம் 4 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில், ராஜஸ்தான் மாநில பாஜக சட்டப்பேரவை உறுப்பினர் சோபாராணி குஷ்வா உள்ளிட்ட 17 பேர் மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கில் சோபா ராணி மதுரையில் உள்ள பொருளாதார குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் இன்று சரணடைந்தார். அவர் இரண்டு லட்சம் ரூபாய் பிணைத் தொகை செலுத்தியதை அடுத்து பிணையில் விடுவிக்கப்பட்டார். இதையடுத்து வழக்கு விசாரணை ஜூன் 11 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
No comments:
Post a Comment