ஸ்டெர்லைட் ஆலையை மூடுமாறு தமிழக அரசு அரசாணை வெளியிட்டதை அடுத்து, மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி ஆலையை மூடிமுத்திரையிட்டார்.
ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி தூத்துக்குடியில் போராடிய மக்கள் மீது நடத் தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் பலியான நிகழ்வு, தமிழகம் முழுவதும் கொந் தளிப்பை ஏற்படுத்தியது.இந்நிலையில், தூத்துக்குடி சென்ற துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திடம் ஸ்டெர்லைட் ஆலையை இழுத்து மூட அரசாணை வெளியிடுமாறு காயமடைந்தவர்கள் போர்க்கொடி உயர்த்தினர்.
இதனையடுத்து சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சரை ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக் குழுவினர் சந்தித்துப் பேசினர். அப்போது, ஆலையை நிரந்தரமாக மூட ஆணை பிறப்பிக்குமாறு அவர்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. பொதுமக்களின் உணர்வுகளுக் கும் கருத்துக்களுக்கும் மதிப்பளித்து ஆலையை மூட முடிவு செய்யப்பட்டதாக அதில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டுள்ளார்.
தமிழக அரசு அரசாணை வெளியிட்டதை அடுத்து, ஸ்டெர்லைட் ஆலைக்கு அதிகாரிகளுடன் சென்ற மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, ஆலையை மூடிமுத்தி ரையிட்டார்.
இதனிடையே துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் பலியானது குறித்து இரண்டு காவல் நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதற்கான முதல் தகவல் அறிக்கைகளில் துப்பாக்கிசூட்டுக்கு ஆணையிட்டது யார் என்பது குறித்த விவரம் இடம்பெற்றுள்ளது. அதன்படி, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டுக்கு சேகர் என்ற துணை வட்டாட்சியரும், திரேஸ்புரத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டுக்கு கண்ணன் என்ற துணை வட்டாட்சியரும் ஆணையிட்ட தாக கூறப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியருக்குப் பதிலாக, விதிகளை மீறி துணை வட்டாட்சியர்கள் துப்பாக்கிச்சூட்டுக்கு ஆணையிட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத் தியுள்ளது.
No comments:
Post a Comment