திருவள்ளூர் - வங்கியில் கொள்ளை - Agnipuratchi

திருவள்ளூர் - வங்கியில் கொள்ளை

Share This

திருவள்ளூரில் பாங்க் ஆஃப் இந்தியா வங்கியில் 6 கோடி ரூபாய் மதிப்பிலான நகைகள் மாயமானது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூரில் உள்ள பேரங்காடி ஒன்றின் மேல் தளத்தில் பாங்க் ஆப் இந்தியா வங்கி செயல்பட்டு வருகிறது. இரண்டு நாட்கள் விடுமுறைக்குப் பிறகு இன்று காலையில் வங்கிக்கு வந்த மேலாளர் சேகர், வெளிக்கதவு திறந்திருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் பெட்டகத்தில் வைக்கப்பட்டிருந்த 6 கோடி ரூபாய் மதிப்பிலான அடகு நகைகள் மாயமானது தெரியவந்தது. இதனையடுத்து அங்கு சென்ற மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிபி சக்ரவர்த்தி வங்கிக்கு சென்று ஆய்வு நடத்தினார். பெட்டகத்தின் பூட்டை உடைக்காமலேயே 6 கோடி ரூபாய் மதிப்பிலான நகைகள் மாயமாயிருப்பது தெரியவந்தது. இந்தக் கொள்ளை குறித்து வங்கி ஊழியர்களிடம் விசாரணை நடத்திவரும் காவல்துறையினர், ஐந்து தனிப்படைகளை அமைத்துள்ளனர். அதேநேரத்தில், வாடிக்கையாளர்கள் அச்சப் படவேண்டாம் என்று கூறியுள்ள வங்கி நிர்வாகம், நகைகள் அனைத்தும் காப்பீடு செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளது. 

இதனிடையே, கோவை மாவட்டம் கோவில்பாளையத்தில் தொழிலதிபர் ரூபன் குடும்பத்துடன் வெளியூர் சென்றிருந்தார். இதனையறிந்த மர்மக்கும்பல், நிலைப் பேழையை உடைத்து 60 பவுன் தங்க நகைகளையும் ஒரு லட்சம் ரூபாய் பணத் தையும் அள்ளிச்சென்றது. மதுரை - கே.கே.நகரில் மாணிக்கம் என்ற மனை வணிகரின் நிறுவனத்தில், பூட்டை உடைத்து பெட்டகத்தில் வைத்திருந்த 16 லட்சம் ரூபாய் பணத்தை மர்மநபர்கள் சுருட்டிச்சென்றனர். திருச்சி அருகே துறையூரில், வெளியூர் சென்றிருந்த வணிகரின் வீட்டில், 40 பவுன் நகைகளையும் 50 ஆயிரம் ரூபாய் பணத்தையும் மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர். 

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages