தேசிய அளவிலும், மாநில அளவிலும் மரபணு மாதிரி வங்கிகளை தொடங்கும் வகையில் சட்டமியற்ற நடுவண் அரசு திட்டமிட்டுள்ளது.
அடையாளம் தெரியாத உடல்களின் மரபணு மாதிரிகளை சேமித்து வைக்க வலி யுறுத்தி, உச்சநீதிமன்றத்தில் தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்றின் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, மரபணு மாதிரிகளை சேமித்து வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என நடுவண் அரசு உறுதியளித்தது. இதையடுத்து புதிய சட்டமுன்வரைவு ஒன்றை சட்ட அமைச்சகம் தயாரித்துள்ளது. இதன்படி தேசிய அளவிலும், மாநில அளவிலும் மரபணு மாதிரி வங்கிகளை திறக்க திட்டமிடப்பட்டுள்ளது. அவற்றில் அடையாளம் தெரியாத சடலங்கள், குற்றவாளிகள் மற்றும் சந்தேகப்படும் நபர்களின் மரபணு மாதிரிகள் சேமித்து வைக்கப்படவுள்ளன. மரபணு தரவுகளை கசிய விடுவோருக்கு 3 ஆண்டுகள் சிறையும், ஒரு லட்சம் ரூபாய் தண்டமும் விதிக்கப்படவுள்ளது. இந்த சட்டமுன்வரைவுக்கு விரைவில் நாடாளுமன்றத்தின் ஒப்புதல் பெறப்பட்டு, குடியரசுத்தலைவருக்கு அனுப்பி வைக்கப்படும் எனத் தெரிகிறது.
No comments:
Post a Comment