திருச்சி, பு.கோட்டை - சல்லிக்கட்டு - Agnipuratchi

திருச்சி, பு.கோட்டை - சல்லிக்கட்டு

Share This

திருச்சி அருகே நடைபெற்ற சல்லிக்கட்டுப் போட்டியில் 700க்கும் மேற்பட்ட காளைகள் சீறிப்பாய்ந்தன.
 

திருவெறும்பூர் அருகே நாவல்பட்டு கிராமத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில், திருச்சி, தஞ்சாவூர், மதுரை, சிவகங்கை, உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 700 காளைகள் பங்கேற்றன. வாடிவாசலில் துள்ளிக் குதித்து வந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் தீரத்துடன் அடக்க முயன்றனர். திமிறி எழுந்து சீறிப்பாய்ந்த காளைகள் முட்டியதில் 10க்கும் மேற்பட்ட வீரர்கள் காயமடைந்தனர்.

இதேபோல புதுக்கோட்டை அருகே மதியநல்லூர் கிராமத்தில் கோவில் விழாவை முன்னிட்டு நடத்தப்பட்ட சல்லிக்கட்டுப் போட்டியில், சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த 900 காளைகள் சீறிப்பாய்ந்தன.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages