எங்கள் மாவீரனை இழந்தோம்.நமது சிங்கத்தை இழந்தோம்.ஐயோ சோதனை. வேதனை. எங்கள் மாவீரன் ஜெ.குருவின் மறைவு வாழ்நாளின் மிகுந்த அதிர்ச்சியும்,துயரமும், வேதனையும் ஆகும். எனக்கும் எங்கள் பாட்டாளி குடும்பங்களுக்கும் தாங்க முடியாத வேதனை. எங்கள் மருத்துவர் அய்யா அவர்களுக்கும், மருத்துவர் அன்புமணி அவர்களுக்கும் எனக்கும் வன்னியர் சங்கத்தினருக்கும் பாட்டாளி மக்கள் கட்சியினருக்கும் இயக்கத்தினருக்கும் மாவீரன் குடும்பத்தினருக்கும் மிகப் பெரிய வேதனையும், சோதனையும் கொண்ட பேரிழப்பு .
எங்களின் முக்கிய தளபதி ,சிங்கமென கர்ஜிக்கும், சுண்டி இழுக்கும் ஆற்றல் மிக்க மாவீரன் குருவை எங்கே காண்போம் ? எப்படி சந்திப்போம்? எங்கே பேசுவோம்?
மாநாடுகளா ?கூட்டங்களா? நிகழ்ச்சிகளா? மேடையில் மருத்துவர் அய்யா அவர்களுக்கு அருகில் வலது பக்கமும் இடது பக்கமும் நாங்கள் இருவரும் இருப்போம். மருத்துவர் அய்யா அவர்களுக்கு இரு கண்களாக, இரு கைகளாக, இரட்டைக் குழல் துப்பாக்கிகளாக இருந்தோமே? இனிஎங்கே வருவார்!
எங்கள் தளபதியை இழந்தோம் !சிங்கத்தை இழந்தோம்! எங்கள் இயக்கத்தின் குடும்பங்களே சோகம் -ஜி.கே.மணி என தனது இரங்கள் குறிப்பிட்டுள்ளார்.
மாவீரன் ஜெ.குருவின் மறைவுக்கு - ஜி. கே. மணி இரங்கள்
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment