யார் இந்த காடுவெட்டி குரு? - Agnipuratchi

யார் இந்த காடுவெட்டி குரு?

Share This

பாமக நிறுவனர் இராமதாசு அய்யா வுக்கு வலது கரமாக திகழ்ந்தவர் காடுவெட்டி ஜெ. குரு உடல்நலக்குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் காலமானார்.

காடுவெட்டி குரு என்றழைக்கப்படும் ஜெ.குருநாதன் கட்சி தொண்டர்களால் காடுவெட்டியார் என்றும் அழைக்கப்பட்டு வந்தார்.

தமிழக அரசியல்வாதி மற்றும் பாட்டாளி மக்கள் கட்சியின் முன்னணித் தலைவராகவும், மாநில வன்னியர் சங்கத் தலைவராகவும் இருந்தார் காடுவெட்டி ஜெ. குரு.

அப்பல்லோவில் சிகிச்சை

நுரையீரல் பாதிப்பால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் கடந்த 40 நாட்களுக்கும் மேலாக சிகிச்சை பெற்றுவந்தார். பா.ம.க இளைஞரணித் தலைவர் அன்புமணி, தினமும் மருத்துவமனைக்குச் சென்று, பார்த்து நலம் விசாரித்து வந்தார்.

இந்நிலையில் பா.ம.க நிறுவனர் இராமதாசு அய்யா மருத்துவமனைக்குச் சென்று ஜெ. குருவைப் பார்த்ததுடன், அவருக்கு அளிக்கப்பட்டுவரும் சிகிச்சைகள் குறித்தும் மருத்துவர்களிடம் விசாரித்தார்.

பேரிழப்பு

இந்நிலையில் இன்றிரவு மாரடைப்பு காரணமாக குருவின் உயிர் பிரிந்தது. பாமக நிறுவனர் ராமதாஸின் வலது கரமாக இருந்த குருவின் மரணம், பாமக மட்டுமின்றி வன்னியர் சமூதாயத்திற்கும் பேரிழப்பு.

யார் இந்த காடுவெட்டி குரு? சாதி சங்க தலைவரான இவர் சாதிவெறியனா? வன்முறையாளனா??? காண்போம்....

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் வட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள காடுவெட்டி கிராமத்தில் ஜெயராமன் - கல்யாணி தம்பதிக்கு மகனாக 1961ஆம் ஆண்டு பிப்ரவரி 1ஆம் தேதிபிறந்தவர் காடுவெட்டி குரு (எ) ஜெ.குருநாதன். (தேவர் எனும் குடும்ப பட்டம் கொண்ட படையாட்சி)

முன்னாள் எம்எல்ஏ

2001ல் ஆண்டிமடம் சட்டமன்றத் தொகுதியிலிருந்தும் மற்றும் 2011ல் ஜெயங்கொண்டம் சட்டமன்றத் தொகுதியிலிருந்தும் வெற்றி பெற்று தமிழக சட்டபேரவை உறுப்பினராக பணியாற்றி்யுள்ளார் ஜெ.குரு.

இராஜேந்திர சோழன் தனது படையை நிலைநிறுத்த காட்டைவெட்டி படைதளம் அமைத்ததால் இவ்வூர் "படைநிலை காடுவெட்டி" என்ற பெயரை பெற்றது...

மாவீரன்.குரு சிறுவயதில் இருந்தே வீரமாக வளர்ந்தவர், இவரது தந்தையை வெட்டிக் கொன்றவர்களின் இரு தலைகளை கோவில் சூலத்தில் எலுமிச்சம்பழமாக அலங்கரித்து கொண்டிருந்தன. அது நாள் முதல் மாவீரன் எனும் அடைமொழியோடு வழங்கப்படுகிறார்.

இளமை காலத்தில் தமிழ் தேசிய விடுதலை படையில் போராளியாக ஆயுதம் எடுத்து தனி தமிழகத்திற்காக போராடிக் கொண்டிருந்தவர் இவர். தூய தமிழ்தேசிய உணர்வாளரான இவர் 1980-களில் மருத்துவர் .இராமதாசு அய்யா அவர்களின் போராட்டக் களத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு வன்னியர் சங்கத்தில் இணைந்து மெல்ல முன்னேறி இன்று மாநில வன்னியர் சங்கத்தின் தலைவராக இருக்கிறார்.

வன்னியர் சங்கத்தில் இருந்தாலும் இவரது பேச்சுக்கள் எப்போதும் அனைத்து தமிழ் மக்களுக்காகவும் தான் இருக்கும்.
இவரால் இவரது அரியலூர் மாவட்டம் கலவரம் இல்லாத அமைதி மாவட்டமாக திகழ்கிறது. அரியலூர் மாவட்டத்தில் இரட்டை குவளை முறையை ஒழித்தவர் இவரே,
ஒரே நாளில் ஐந்து அம்பேத்கர் சிலையை திறந்தவரும் இவரே.
ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினராக இருந்த இவரை இவருக்கு எதிரான பத்திரிக்கையான விகடனும் பாராட்டும் அளவிற்கு சிறப்பாக நடந்துக் கொண்டார்.
அக்கம் பக்கத்து ஊர் பறையர்களுக்கும் இவரே பாதுகாப்பு, இதை அப்பகுதியை சேர்ந்த பறையர்களே சொல்லும் அளவிற்கு நடந்துக் கொண்டதே இவரது சிறப்பு.

அடங்காத பெருங்கோபம் கொண்ட இவர் தன் சமுக மக்கள் அடக்குமுறைக்கும் அடாவடிக்கும் உட்படுத்தப்படும் போது ஓங்கி குரல் கொடுக்க தவறியதில்லை, மாமல்லபுரம் பேச்சுக்கள் கூட ஒரு பெண்ணை பெற்ற தந்தை என்ற ஸ்தானத்தில் வரும் இயற்கையான கோபமாகவே இருந்தது. பெண்களை பெற்ற அப்பாக்களுக்கே தெரியும் இவரது கோபம் சாதிவெறியில் சேராது என்று!

உலக போராளிகளை கற்றுணர்ந்த இவருக்கு மேதகு.பிரபாகரனும், தோழர்.தமிழரசனும், வீரப்பனாரும் விருப்ப தலைவர்கள்.
மண் சார்ந்த பிரச்சனைகளில் இவரது குரல் பூர்வீக குடிகளான பறையர்களுக்காக ஒலிக்க தவறியதில்லை.

இவரது பேச்சுக்கள் யாரையும் விமர்சிக்காமல் விட்டதில்லை விமர்சிக்கவே பயந்த ஜெயலலிதவையும் கலைஞரையும் அலற வைத்தது. திரை கூத்தாடிகளான ரஜினியையும் விஜயகாந்தையும் ஓட வைத்தது.

இந்தியாவிலேயே ஐந்து முறை தேசிய பாதுகாப்பு சட்டத்தை தொடர்ந்து சுமந்து அதை உடைத்தெறிந்து வெற்றியோடு வெளியே வந்த சிங்கம்.

அரசியலுக்காக தன்னை எப்போதும் மாற்றிக் கொண்டதில்லை, ஆதாயத்திற்காக தன்னை யாரிடமும் அடகு வைத்துக் கொண்டதில்லை, திராவிடக் கட்சிகளால் விலைக்கு வாங்க முடியாத விசுவாசம் இவருடையது, தன்னை நம்பி வன்னியர் சங்கத்தை ஒப்படைத்த மருத்துவர் இராமதாசுக்கு இன்று வரை உண்மையாக நடந்துக்கொண்டவர்

பணமும் பதவியும் இவரது பாதத்திற்க்கு கீழான செருப்பு போன்றது, அதை எப்போதும்  தூக்கி வைத்து சுமந்ததில்லை இவர்,

"இனம் எங்கள் உயிருக்கு சமம்
அடக்குமுறை எங்கள் மையிருக்கு சமம் என்று முழங்கியவர்.

குழந்தைகளிடம் குழந்தையாகவும் பழக தெரியும், குணங்கெட்டவர்களிடம் குத்தீட்டியாகவும் பாய தெரியும் இவருக்கு!

வேறு சாதிக்காரர்களையும் தங்கள் சாதியில் இதுபோல் ஒரு தலைவர் இல்லையே என ஏங்க வைத்தவர்,
அரசியலில் மாற்றுக்கட்சி வன்னியனின் விமர்சனங்களையும் தூங்க வைத்தவர்,
அரசியலில் ஆயிரம் கட்சிகளில் இருந்து பாமக மீது ஆயிரம்  முரண்பாடு கொண்ட வன்னியர்களும் இவரை நேசிப்பதே இவரது தூய்மையான இன உணர்விற்க்கு எடுத்துக்காட்டு.

தூய தமிழ்தேசியம் பேசுவோருக்கு தெரியும் இவர் சாதிசங்க தலைவர் மட்டுமல்ல சாதியை கடந்த தமிழ் இன உணர்வாளர் என்று, ஏனெனில் இவர் படித்து வந்தது தமிழ்தேசிய பள்ளிக்கூடம்.
மாவீரன் ஜெ. குரு தலைமையில் தமிழ்தேசியத்தை முன்னெடுத்தால் திராவிட பார்ப்பணிய கூட்டங்கள் அஞ்சி நடுங்கும் என்று வேறு சாதி தமிழ்தேசியவாதிகள் கூறியும் கேள்விபட்டதுண்டு.

இவர் தன் சமுகத்தின் மீது பாசம் கொண்டவர் தான், அதற்காக அடுத்த சமுகத்தை வெறுப்பவர் கிடையாது!
தன் சமுகம் பாதிக்கப்படும் போது ஆயுதம் எடுப்பேன் என முழங்கியவர் தான்,அதற்காக அடுத்த சமுகத்தை ஒடுக்க ஆயுதம் ஏந்து என்று கூறியவரில்லை!

பதவிக்கு எவர்முன்னும் பணிந்தோ, பணத்திற்காக எந்த இடத்திலும் குணிந்தோ கூழை கும்பிடு போடதெரியாதவர்,
அரசியலில் தன்னை மட்டுமே ஈடுபடுத்திக் கொண்ட இவர் தன் குடும்பத்தை அரசியல் கூட்டங்களில் கூட ஈடுபடுத்தாதவர்.
ஊடகங்கள் பார்வை கூட இவரது குடும்பத்தின் மீது பட்டதில்லை.
மது, மாது, சூது என எதிலும் இவர்  களங்கப்பட்டது இல்லை.

ஒருகாலத்தில்  சாராயம் காய்ச்சிக் கொண்டிருந்த இவரது ஊரை மருத்துவர் இராமதாசின் மதுஒழிப்பு கொள்கைக்காக சாராயம் காய்ச்சுவதை தடைசெய்து பல பேருக்கு மாற்று வேலையை வாங்கி கொடுத்த மது ஒழிப்பு போராளி இவர்.

கட்சி கூட்டங்களில் கூடாத கட்டுக்கடங்காத கூட்டம் வன்னியர் சங்க மாநாடுகளில் கூடுகிறதென்றால் அது இவரது பேச்சுக்கு எம் மக்களிடம் உள்ள ஈர்ப்பே காரணம்.விழாமேடை நாயகன் இவரே, ஆர்ப்பரிக்கும் கூட்டமும் இவர் எச்சரிக்கைக்கு அடங்கி அமரும்.

எத்தனையோ வதந்தி செய்திகள், எத்தனையோ ஆசை வார்த்தைகள், எத்தனையோ அடக்குமுறைகள் என செய்தபோதும் தான் கொண்ட கொள்கையில் மாறாமல் பயணிப்பவர் இவர்.
கடைசிவரை எவராலும் விலைக்கு வாங்க முடியாத விலைமதிப்பற்ற வைரம் இவர்.

வேறு சாதியை சேர்ந்த சிலர் சாதிவெறியன், கலவரக்காரன் என விமர்சித்தாலும் ஆதாரபூர்வமாக அணுகும் போது அத்தனை விமர்சனங்களும் தவிடுபொடி ஆகும். அரசியல் விமர்சணம் என பார்க்கும் போது விமர்சனமற்ற அப்பழுக்கற்ற தலைவர் இவர் ஒருவராக மட்டுமே இருப்பார்.

விமர்சனங்களுக்கு இவர் விதி விளக்கு,சோழர் குலத்தின் திரு விளக்கு,இன உணர்வில் என்றும் அணையா விளக்கு,
வீர வன்னியர்களின் ஒளி விளக்கு!

இவர் கண் அசைவு போதும் இராணுவத்தின் பல கம்பெணிகள் இங்கு வந்து கூடும்,
இவர் இட்ட கட்டளையை சாதாரணமாக விட்டுவிடுமா இந்த கூட்டம்? வன்முறை தான் தீர்வென்றால் தமிழகத்தின் ஆட்சியும் காட்சியும் மாற ஒருநாள் போதும்,தொப்புள் கொடி வன்னியர் கூட்டத்தின் முன் அந்நியர் கொடி அதன்பின் பறக்குமா?
தமிழகம் அமைதியாக இருக்க இவரே காரணம், ஏனெனில்
இவர் சமத்துவத்தை விரும்பும் சாதிசங்க  தலைவர்!

ஒரு மாபெரும் மூர்க்கதனமான போர் சமுகம் யார் பெயரை கேட்டால் ஆற்பறிக்கிறதோ?
எவரையும் ஒட்டுமொத்த தலைவராக ஏற்காத சமுகம் யார் பின்னால் ஓரணியில் திரள தயாராக இருக்கிறதோ?

வன்னிய இனத்தின் சூரியன்  காடுவெட்டியார் வன்னியர்களின் நெஞ்சில் மறைந்தாலும் வாழ்ந்துக்கொண்டுதான் இருப்பார் உன்னதமான தலைவன்.....

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages