வேலூர் அருகே கஞ்சா மற்றும் கள்ளச்சாராய விற்பனை குறித்து காவல்துறைக்கு தகவல் கொடுத்து வந்தவரை கும்பல் ஒன்று குத்தி கொலை செய்துள்ளது.
கொசப்பேட்டையில் சுந்தரேசசாமி கோவில் பகுதியைச் சேர்ந்த அசோக்குமார், தனியார் தொலைக்காட்சி ஒன்றில் செய்தியாளராக பணிபுரிந்து வந்தார். இவர் அப்பகுதியில் நடக்கும் கஞ்சா மற்றும் கள்ளச்சாராய விற்பனை பற்றி அடிக்கடி காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கள்ளச் சாராய விற்பனை கும்பலைச் சேர்ந்த திருமலை, அகஸ்டின், ரமேஷ் உள்ளிட்ட சிலர், அசோக் குமாரின் வீட்டிற்கு புகுந்து, அவரை சரமாரியாக கத்தியால் குத்தி கொலை செய்தனர். காயமடைந்து ரத்த வௌ¢ளத்தில் துடிதுடித்த அசோக் குமார், நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்த காவல்துறையினர், கொலையாளிகள் 3 பேரை கைது செய்துள்ளனர்.
No comments:
Post a Comment