முதலமைச்சர் குமாரசாமிக்கு ஐந்து ஆண்டுகளும் ஆதரவளிப்பது பற்றி இன்னும் முடிவு செய்யவில்லை என காங்கிரஸை சேர்ந்த துணை முதலமைச்சர் பேசியது கர்நாடக அரசியலில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக வந்த பாஜகவால், ஆட்சியமைத்தும் பெரும்பான்மையை நிரூபிக்க முடியவில்லை. இதன் பின் காங்கிரஸ் ஆதரவுடன் முதலமைச்சராக பதவியேற்றுள்ள குமாரசாமி, இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துகிறார். ஆனால் அதற்கு முன்னதாக சட்டப்பேரவை உறுப்பினர்களை வளைக்க பாஜக முயற்சி செய்து வருவதால், பெங்களூரில் உள்ள சொகுசு விடுதி ஒன்றில் காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தள உறுப்பினர்கள் தங்க வைக்கப் பட்டுள்ளனர். இதனிடையே குமாரசாமிக்கு ஐந்து வருடங்களும் ஆதரவளிப்பது தொடர்பாக இன்னும் முடிவெடுக்கவில்லை என காங்கிரஸை சேர்ந்த துணை முதலமைச்சர் பரமேஸ்வரா தெரிவித்துள்ளார். நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்று, பொறுப்புகளில் அமர்ந்து நல்ல நிர்வாகத்தை கொடுப்பதே தங்கள் நோக்கம் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் முதலமைச்சர் பதவியை பகிர்ந்து கொள்வதற்கான எந்த திட்டமும் இதுவரை இல்லை என்றும் பரமேஸ்வரா தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment